'பிரீத்' படத்தின் திரை விமர்சனம்…!!

'பிரீத்' படத்தின் திரை விமர்சனம்…!!

Default Image

விக்ரம் வேதாவில் கடைசியாக நடித்த ஆர்.மாதவன் தனது ரசிகர்களை மகிழ்விக்க மீண்டும் வருகிறார். ஆனால் இந்த நேரத்தில் சிறிய திரை.அமேசான் பிரைமின் எஸ்க்க்ளுசிவ் தொடர்  ‘ப்ரீத்’. இதில் முன்னணி நடிகர்களான மாதவன் மற்றும் அமித் சத் நடித்த 8 பாகங்களை கொண்ட தொடர்.
டேனி (மாதவன்) அவரது 6 வயதான நோய்வாய்ப்பட்ட மகனை இழக்கும் நிலையில் உள்ளார். மகனுக்கான நுரையீரல் வழங்குபவரை தேடவுள்ளார். துரதஷ்டவசமாக கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். காவல் அதிகாரி கபீர் சாவந்த் (அமித் சாத்) உள்ளிறங்க ஒன்று ஒன்றாக புள்ளிகளை இணைக்க தொடங்குகிறார்.
எபிசோட் சுமார் 40 நிமிட நீளம் உள்ளது. ஆனால் நிமிடங்கள் விரைவாக பறக்கின்றன. இது தொடரின் ஒரு நல்ல அறிகுறியாகும். மேலும் மாதவனை ஒரு புதிய ரூபத்தில் பார்க்கக்கூடும். அனால் தொடரின் ஒரு முனையில் யோசிக்கவைக்கும் விஷயம்,டேனி பாகாவத் கீதத்தை சமஸ்கிருதத்தில் மருத்துவமனையில் ஒரு குடும்பத்திற்குக் கூறுகிறார்.டேனி சமஸ்கிருதத்தில் கீதத்தைப் பற்றி அறிந்திருக்கலாம். அனால் அவர் வரிகளை நினைவில் வைத்திருக்க முடியுமோ..?? என்று சிந்தனை எழும்புகிறது.இதை பயன்படுத்தி மருத்துமனையில் குடும்பத்தினரை வெல்வது சாத்தியமோ..??. இதை தவிர்த்திருக்கலாம் என்று எண்ணம் எட்டுகிறது. மொத்தத்தில் மாதவனின் புதிய ரூபத்துடன் தொடரை நல்ல முறையில் ஸ்வாரசியமாக கொண்டு சென்றால் வெற்றி நிச்சயம்.
‘பிரீத்’ : ⭐⭐ (2/5)
ட்ரைலர் – https://www.youtube.com/watch?v=JiI8_YYmQhs

Join our channel google news Youtube