பாரதிய ஜனதா கட்சி இல்லாத இந்தியா…முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி…!!

பாரதிய ஜனதா கட்சி இல்லாத இந்தியா மிகவும் சிறப்பாக இருக்கும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பங்குராவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவை விட்டு பாஜக வெளியேற வேண்டும் என்று கூறினார். பிரதமர் அலுவலகம் முதல் அனைத்து துறைகளிலும் பாஜக தனது ஆதரவாளர்களை நியமித்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பாஜக இல்லாத இந்தியா சிறப்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகளில் பாஜக வென்றதை சுட்டிக் காட்டிய மம்தா பானர்ஜி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் பாஜகவால் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாது என்று தெரிவித்தார்.

மத்திய பிரதேச தேர்தலில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

dinasuvadu.com

author avatar
Dinasuvadu desk

Leave a Comment