‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கம்! கலைப்புலி S.தாணு தயாரிப்பு!! தனுஷ் அதிரடி!!!

வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி படமாக்கி பலரது பாராட்டுக்களை இயக்குனர் மாரி செல்வராஜ் பெற்றார்.

இந்நிலையில் நடிகர் தனுஷூம் இப்படத்தை பார்த்து விட்டு படம் பற்றி வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் தனது  அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார் என்றும், அதனை கலைப்புலி S.தாணு தனது V கிரியேஷன் சார்பாக தயாரிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதைக்களம் ,மற்ற நடிகர்கள், நடிகைகள் விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source : tamil.CINEBAR.IN

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment