பத்மாவத் படத்திற்கு போராட வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லிம்களா…??

பத்மாவத் படத்திற்கு போராட வேண்டியது இந்துக்களா அல்லது முஸ்லிம்களா…??

Default Image

 
பல பிரச்சினைகளுக்கு பிறகு வெளியான திரைப்படம். ஆனால் படத்தில் இந்து அமைப்புகள் சொன்ன கருத்து எதுவும் இல்லை. ராஜபுத்திரர்களை உயர்வாகவும், வீரமாகவும் தான் காட்டியுள்ளனர். பத்மாவதி கதாபாத்திரம் இறுதிவரை கண்ணியமாக இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரமாக ரன்வீர்சிங் சிறப்பாக நடித்திருக்கிறார். பதவி வெறி, காம வெறி, எதையும் வெற்றி கொள்ள எதையும் செய்பவர். மிகவும் மோசமான மன்னன். ஒரு காட்சியில் பத்மாவதி கூறுவாள், அலாவுதீன் கில்ஜி அரசனல்ல, அரக்கன் என்பாள்.

பத்மாவதியாக தீபிகா படுகோன் நேர்த்தியாக நடிப்பை வெளிப்படுத்திருக்கிறார். ரத்தன் சிங்காக ஷாகித் கபூர் நடித்திருக்கிறார். அவர்களின் காதல் காட்சிகளை இன்னும் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கலாம்.

இந்த படத்தின் பிரச்சினையால் இப்படத்தின் கதைகள் பற்றி படித்தது போலவே படமாக்கப்பட்டுள்ளது. திரைக்கதை ஈர்க்கவில்லை.
இப்படத்திற்காக முஸ்லீம்கள் தான் பிரச்சனை செய்திருக்க வேண்டும், முஸ்லிம் மன்னரை மிகவும் கேவலமாக சித்தரித்துகிறார்கள். ஆனால் ஏன் இந்து அமைப்புகள் முட்டாள்தனமாக இவ்வளவு பிரச்சினை செய்தது என்று புரியவில்லை.
Join our channel google news Youtube