நெல்லையில் ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால்  மறுகரைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்த பக்தர்கள்!

ஆற்றில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதால் நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு ஆற்றைக் கடந்து சென்ற பக்தர்கள்,  மறுகரைக்கு மீண்டும் திரும்ப முடியாமல் தவித்தனர்.

புகழ்பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பியார் கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் பக்தர்கள் அதிக அளவில் வருவது வழக்கம். நம்பியாற்றைக் கடந்துதான் இக்கோவிலுக்குச் செல்ல முடியும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக நம்பியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோவிலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள், மீண்டும் மறுகரைக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பக்தர்களை பத்திரமாக மீட்டனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment