'நிமிர்' படத்தின் திரை விமர்சனம்…!!

'நிமிர்' படத்தின் திரை விமர்சனம்…!!

Default Image

காமெடி படங்களில் மட்டும் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் மனிதன், இப்படை வெல்லும் என்று தீவிர கதைக்களம் உள்ள படங்களில் நடித்தார். இப்பொழுது ஒரு வேறுபட்ட நடிப்பை காட்டும் கதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
மலையாள சினிமாவில் பிரமாண்ட வெற்றியை பெற்ற படம் ‘மகேஷண்டே பிரதிகாரம்’.இதன் தமிழ் ரீமேக் தான் நிமிர்.நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில், ஃபோட்டோ ஸ்டுடியோ நடத்தி வரும் இளைஞன் செல்வம் (உதயநிதி ஸ்டாலின்). யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் சராசரி மனிதனான செல்வம், ஒரு நாள் தனது தந்தையின் நண்பரை ஒரு சண்டையிலிருந்து விலக்கப் போகப்போய் பலமாக அடிவாங்கி அவமானப்படுகிறான். அந்த அவமானத்தினால் மிகவும் உடைந்து போன செல்வம், தன்னை அடித்தவனை திரும்ப அடித்த பின்னரே இனிமேல் காலில் செருப்பு அணிவேன் என ஒரு சபதமும் எடுக்கிறான். செல்வத்தின் சபதம் என்ன ஆனது..?? என்பதே ‘நிமிர்’ திரைப்படத்தின் கதை.
படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள், நடிகர், நடிகைகளின் தேர்வு.அனைவரும் திறம்பட நடித்துள்ளனர்.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிறப்பாக நடித்து இருக்கிறார். அவரது 6 ஆண்டுகால சினிமா கேரியரில் இதுவே அவரது சிறந்த நடிப்பு என்று கூட சொல்லலாம். நகைச்சுவை நன்றாக அமைந்துள்ளது.படத்தில் வரும் சின்ன சின்ன காட்சி ரசிக்க வைக்கின்றது.படத்தின் சண்டைக்காட்சிகள் அதிலும் கிளைமேக்ஸில் சமுத்திரகனியிடம் உதயநிதி மோதும் காட்சி, அந்த கூட்ட நெரிசலில் இருவரும் மோதுவது யதார்த்தமாக எடுத்துள்ளனர்.அனால் மலையாளத்தில் இருந்த யதார்த்தம் இங்கு இல்லை.திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் இருந்து இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் பல மோசமான மலையாள ரீமேக்கள்? இடையே பேசப்படும் அளவிற்கு இருக்கும் படம் என்று கூறலாம்.
‘நிமிர்’ : ⭐⭐ (2/5)
இப்படத்தின் ட்ரைலர்- https://www.youtube.com/watch?v=Us4SdcEh–4

Join our channel google news Youtube