துப்பாக்கி-2 படத்தில் அப்பாவிற்கு பதிலாக களமிறங்கும் மகன்….!!!

துப்பாக்கி-2 படத்தில் அப்பாவிற்கு பதிலாக களமிறங்கும் மகன்….!!!

Default Image

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் துப்பாக்கி. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படத்தை அடுத்து, சர்க்கார் படத்தில் முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணி இணைந்தது.

இந்நிலையில், இயக்குனர் முருகதாஸ் அவர்கள் கூறுகையில், துப்பாக்கி படத்தின் அடுத்த பகுதி தயாரிக்கப்படும் என கூறியிருந்தார். இதனையடுத்து மூன்றாவது முறையாக இயக்குனர் முருகதாஸ் – விஜய் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு பதிலாக, அவரது மகன் ஜோசப் சஞ்சய் நடிக்கவுள்ளதாக இயக்குனர் முருகதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Join our channel google news Youtube