ஜனாதிபதி குடும்பத்துக்கு துணை ஜனாதிபதி குடும்பம் விருந்து..!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று சைவ விருந்தளித்து உபசரித்தார்.
துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சைவ விருந்தளித்து உபசரித்தார்.
இதுதொடர்பாக, புகைப்படத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள வெங்கையா நாயுடு, ‘ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தார் எனது வீட்டில் விருந்துண்டதை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment