சுரேஷ் ரெய்னாவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம்…!!

சுரேஷ் ரெய்னாவிற்கு மீண்டும் இந்திய அணியில் இடம்…!!

Default Image

இந்திய அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி-2௦ தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை 2-1 என்னும் கணக்கில் இழந்துவிட்ட நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணியானது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி(கேப்டன்),ரோஹித் சர்மா (துணை கேப்டன்),மகேந்திர சிங் தோனி(விக்கெட் கீப்பர்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல்,சுரேஷ் ரெய்னா, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, அக்‌ஷர் படேல், சாகல், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், பும்ரா, உனத்கட், சர்துல் தாகூர் ஆகியோ இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.மேலும் டி-20 கிரிக்கெட் போட்டியில் ரெய்னாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Join our channel google news Youtube