கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு !

கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல்காந்தி உத்தரவு !

Default Image
தேர்தலுக்கு தயாராகுங்கள் என கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல்காந்தி உத்தரவு பிறப்பித்துள்ளார் .
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படி காங்கிரஸ் கட்சி செயல்பட்டதோ அதேபோன்று மக்களைச் சென்றடையும் திட்டங்களையும் பிரச்சாரங்களையும் முன்வைத்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், “மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தலைமையில் ஒரு அணியினர் தேர்தல் அறிக்கை தொடர்பான பணியில் ஏற்கெனவே ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில் அது இருக்கும்” எனத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் மது கவுட் யாஸ்கி கூறியதாவது-
கர்நாடக மாநில மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அனைத்து தலைவர்களிடமும் கருத்துகளை காங்கிரஸ் கேட்டுள்ளது .
தொலைதொடர்பு துறையில் இருக்கும் தொழில் முனைவோர் சாம் பித்ரோடா, குஜராத் தேர்தல் தொடர்பாக வதோதரா, அகமதாபாத், ராஜ்கோட், சூரத் , ஜாம்நகரில் மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.
அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கல்வி, சுகாதாரம், சிறு, குறுந்தொழில்களுக்கு முக்கியத்துவம், வேலைவாய்ப்பு உருவாக்கம் , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதற்கு ஏற்ற பலனும் குஜராத் தேர்தலில் கிடைத்தது.
இதற்கிடையே கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. ஷீர் பாக்யா, அன்ன பாக்யா, கிரிஷி பாக்யா, இந்திரா வஸ்த்ரா பாக்யா, இந்திரா கேண்டீன் உள்ளிட்ட பல திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. ஆதலால் நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொள்வோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
Join our channel google news Youtube