உடலுறுப்பு தானம் குறித்து முதல்வர் பேச்சு…!!

உடலுறுப்பு தானம் குறித்து முதல்வர் பேச்சு…!!

Default Image

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கல்லீரல் நோய் தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. அதில் கலந்துக்கொண்ட முதல்வர் பேசுகையில், “உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்காக மூன்று முறை தேசிய விருது பெற்றது மிகவும் பெருமையளிக்கக் கூடியது. இங்கு தரமான சுகாதார சேவை வழங்கப்படுகிறது. சுகாதாரத்துறை நிர்ணயித்த இலக்குகளை, வெகு சீக்கிரமே அடைந்துவிட்டோம். உடலுறுப்பு தானத்திற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கி, எளிதில் பதிவு செய்து கொள்ளும் முறையை கொண்டு வந்துள்ளோம்.ஏராளமான மக்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

Join our channel google news Youtube