“அம்பானிக்கு வாரி வழங்கும் மோடி” நிலம் , வரிச்சலுகை வழங்க முடிவு..!!

முகேஷ் அம்பானியின் – இன்னும் துவங்கப்படாத பல்கலைக்கழகத்திற்கு நிலம் மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, அவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ஜியோ பல்லைக்கழகம்’ என்ற புதிய பல்லைக்கழகம் ஒன்றைத் துவங்க முடிவு செய்துள்ளார்.

ஆனால், பல்கலைக்கழகம் துவங்குவதற்கு முன்பாகவே, அவரது பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று மோடி அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் துவங்கப்படாத அந்த பல்கலைக்கழகத்திற்கு ரூ. 1000 கோடி நிதியுதவியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for ஜியோ பல்லைக்கழகம்

 

 

அதன் தொடர்ச்சியாக தற்போது, துவங்கப்படாத அந்த ஜியோ பல்கலைக்கழகத்திற்கு மகாராஷ்டிர பாஜக அரசும் அதிரடி ஆஃபர் அறிவித்துள்ளது. அதாவது, ஜியோ பல்கலைக்கழகத்திற்காக மும்பை மாநகரின் கர்ஜத் பகுதியில் தேவையான நிலம் இலவசமாக வழங்கப்படும்; வரிச்சலுகை உட்பட பல்வேறு நிதிச்சலுகைகளும் அளிக்கப்படும் என்று அமைச்சரவையில் முடிவெடுத்து தெரிவித்துள்ளது.

Image result for ஜியோ பல்லைக்கழகம்

“முன்னேறி வரும் பல்லைக்கழகம் என்று மத்திய அரசிடமிருந்து விருது பெற்றதற்காக ஜியோ பல்கலைக்கழகத்திற்கு மகாராஷ்டிர அரசு அளிக்கும் பரிசு இது” என்று மிகவும் வெளிப்படையாகவே மகாராஷ்டிர மாநில கல்வி அமைச்சர் வினோத் தாவ்டே கூறியுள்ளார்.

DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment