கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.! ஏராளமானோர் கலந்துகொண்டனர்.!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 29 நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் … Read more

போலீசாரை கடித்து விட்டு தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரி.!

பட்டுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருவோணத்தில் போலீசாரை கத்தி மற்றும் கட்டையை காட்டி மிரட்டியும், பல்லால் கடித்து தப்பியோடிய கள்ளச்சாராய வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புதுவிடுதியைச் சேர்ந்த இளங்கோவன், அருண்பாண்டியன் இருவரும் சேர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு தகவல் தெரிந்தது. பின்னர் அவர்கள் திருவோணத்தில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றபோது அவர்கள் கட்டை மற்றும் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். இந்நிலையில், … Read more

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்..!

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கு தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி … Read more

தமிழ்த்தாய் வாழ்த்து அவமரியாதை விஜயேந்திரரின் உருவபொம்மை எரிப்பு-மாணவர்கள் போராட்டம்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அவமதித்த விஜயேந்திரரின் உருவபொம்மையை தஞ்சையில் மாணவர்கள் எரித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய நூல் வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் உட்கார்ந்தப்படியே இருந்தார். ஆனால் தேசிய கீதத்துக்கு … Read more

தஞ்சை போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி கொலை…!!

தஞ்சை சென்னம்பட்டியில் உள்ள போதை மறுவாழ்வு மைய காப்பக காவலாளி ஜோதிராமன் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.இந்த கொலையில் சம்மந்தப்பட்டவர்களாக காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த அருண் பாலாஜி, அஜித்குமார், கார்த்திக், அர்ஷத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட தலித் குடியிருப்புகளை கொளுத்திய ஜாதி கும்பல்…??

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாபட்டு தெற்கு குடிக்காடு கிராமத்தில் தலித் இளைஞர்கள் ஞாயிறு அன்று மேடை ஒளி,ஒலி அமைத்து புத்தாண்டை கொண்டாடினர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆம்பலாபட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் கொடிய ஆயுதங்களோடு தலித் குடியிருப்பு பகுதியில் புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், மோட்டார் சைக்கிள்களை உடைத்து வீசி எறிந்து விட்டு சென்றுள்ளனர். குடிதண்ணீர் பைப்புகளையும் ,மின் இணைப்புகளையும் உடைத்து வீசியுள்ளனர்.தலித் மக்கள் வீடுகளை அடைத்து கொண்டும், … Read more

தேவகோட்டையில் உயர் மின் கம்பங்ககளை பராமரிக்க தவறிய மின் வாரியம் …பொதுமக்கள் அச்சம் …??

  தேவகோட்டை நகராட்சி 23வது வார்டு, நித்திய கல்யாணி புரம்,பர்மாகாலனி குளக்கால் தெரு.இப்பகுதி கட்டுமான தொழிலாளர்கள்,மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலோ என்னவோ குளக்காள் தெருவை பராமரிப்பதில் கிட்டத்தட்ட நகராட்சி நிர்வாகம் மறந்துவிட்டது எனலாம். தற்போது மின்சார வாரியமும் இப்பகுதி மக்களின் உயிரை காப்பதில் இருந்து விலகி நிற்கிறதோ என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது.மேலும் இந்த உயர் மின்னழுத்த எச்.டி கம்பத்தில் இரவு நேரங்களில் தீப்பிடித்து எரிவதாலும் அப்பகுதி மக்கள் ஒருவித … Read more