கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் இதுவரை 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவ ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்களை 2 மாதத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, முதலில் சீனாவில் பரவி, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தற்போது மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதுகுறித்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனாவால், அனைத்து பள்ளி கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதுச்சேரியிலும் 10-ம் வகுப்பு […]
கடந்த ஒரு வருடமாக ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் தங்களது உற்பத்தி துறையில் பல நாட்களை வேலை இல்லா நாட்களாக அறிவித்து ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு வழங்கி வந்தனர். அந்த அளவிற்கு விற்பனை மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தது. மிகவும் பிரபலமான அசோக் லேலண்ட் நிறுவனமும் சரிவை சந்தித்தது. இந்நிறுவனமும் பல நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்திருந்தது. ஒரு வருடமாக சரிவில் இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம், தற்போது […]
ரேஷன் கார்டுதாரர்கள் நெரிசல் இன்றி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், ஞானசேகரன், மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இது தொடர்பான அவர் சுற்றறிக்கையில் ‘ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களே, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தேவையான பொருட்களை, தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்றும் மண்டல இணை பதிவாளர்கள், தங்கள் மண்டலத்தில் தகுதியுள்ள, ரேஷன் கார்டுதாரர்களின் பட்டியலை, மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்யப்போகிறார்கள் எனத் தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வருகை தந்தார்.மேலும் அவருடன் வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடன் உள்ளனர்.இதனால் போயஸ் தோட்டத்தைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
தமிழக போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறது மோட்டார் வாகன சட்டத்தில் 5 ஷரத்துகளில் திருத்தங்கள் கோரியுள்ளோம்; கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்துள்ளார். இன்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க உள்ளதாகவும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்தோம்.நிவாரண பணிக்கு ₹747 கோடி, சீரமைப்பு பணிக்கு ₹5,255 கோடி வழங்க கோரிக்கை வைத்தோம்.அரசு அளித்த கோரிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி கூறினார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஓகி புயலினால் தென்தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அதிலும் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பெரிதாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையில் வீடுகள், மின்கம்பங்கள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்கையே கேள்விக்குறியாகும் நிலை உருவானது. மேலும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. பல ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி வீணாய் போயின. அதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கி வருகிறது. இதன் பொருட்டு புயலில் பலியான விவசாயிகள் மற்றும் பொது மக்களின் குடும்பங்களுக்கு […]
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த வருடம் காதலித்து ஜாதி மறுப்பு திருமணம் செய்த சங்கர் மற்றும் கௌசல்யா இருவரும் விடுமுறை தினத்தை முன்னிட்டு உடை மற்றும் பொருள்கள் வாங்க சென்றனர். அப்போது கௌசல்யா குடும்பத்தை சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பெயரில் சிலர் இருவரையும் கொலைவெறியுடன் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர்.இதில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார்.இந்நிலையில் சங்கரின் கொலைக்கு நீதி கேட்டு பல மார்க்சிய,அம்பேத்காரிய,பெரியாரிய அமைப்புகள் கௌசல்யாவுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.சட்ட […]
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும்” ”இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையை இலங்கை கடற்படையால் தடுக்க முடியவில்லை” மேலும் அப்படி எல்லையை மீறி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து கடுமையான தண்டனைகளை வழங்க இலங்கை அரசு உத்தரவிட வேண்டும் என வடக்கு மாகாண எம்.பி சரவணபவன் இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
கேரள அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பினராய் விஜயன் அறிவிப்பு… ஒக்கி புயலின் தாக்கத்தால் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூபாய் 20 இலட்சமும் காயத்துடன் மீட்கப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 5 இலட்சமும் நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என கேரளா இடது முன்னணி அரசு அறிவித்துள்ளது.
ஓகி புயலால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளானது. மேலும் இன்னுமும் சில கிராமங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் கன்னியாகுமரியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரபட்ட வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஓகி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்ட […]
ஓகி புயலால் கடுமையான மழை மற்றும் வெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்ட மக்களுடன் கைகோர்க்கிறது தினச்சுவடு தற்போது கிடைத்த தகவலின் படி சுசிந்திரம் பகுதியில் உள்ள குழந்தகரையில் இருக்கும் பல பள்ளிகளில் வெள்ளம் மற்றும் புயல் மழையால் பாதிக்கபட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுளனர். பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிக்க தண்ணீர்,உணவு அடிப்படை தேவையாக உள்ளது. மேலும் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள பகுதிகளில் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டு உள்ளதால் ஜெனரட்டார் மிகத்தேவையான […]
சென்னையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகைக்காக 15 நிமிடங்களில் தயாராகும் தற்காலிக சாலை. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகம் அருகே உள்ள சாலையை தற்காலிகமாக அவரச அவரசமாக தயாராகிறது இந்த சாலை .இதே போன்று அனைத்து பகுதிகளிலும் அரசு விரைந்து செயல்பட்டால் மக்களும் மகிழ்ச்சியாக தங்களது அனுதினத்தையும் களிப்பார்கள் …. கவனிக்குமா நமது மாநில அரசு ..
தமிழ்நாட்டில் பேருந்துகளின் சாதாரண நாட்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என அனைவரும் அரசு பேருந்துகளில் பயணிப்பதால் கூட்டம் அலைமோதும் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு வருவார்கள். இதனால் நிறைய விபத்துகளும் நடந்துள்ளன. நிறைய மாணவர்கள் இறந்துள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டு பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைத்து தர பொதுமக்களும், பிற பொது அமைப்புகளும் அவ்வபோது அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பேருந்து அமைக்கும் பொருட்டு வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் நீதி மன்றத்தில் […]
கார்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் தமிழகம் , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். இங்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு வேட்டி, துண்டுகளை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் துணிகள் நிறைந்து அசுத்தம் அடைகிறது. இதனால் கேரளா உயர்நீதிமன்றம் இதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டது. ஆதலால் கோவில் நிர்வாகம் பம்பை ஆற்றில் உள்ள துணிகளை அப்புறப்படுத்தி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சருத்திபட்டியில் உள்ள […]