மருத்துவ படிப்புகள் தமிழில் இருக்க வேண்டும் – நிதியமைச்சர் நிர்மலா

தமிழில் படித்ததால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் என எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நிதியமைச்சர் பேச்சு. சென்னையில் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மருத்துவம் தொடர்பான அனைத்து படிப்புகளும் தமிழில் இருக்க வேண்டும். தமிழ்மொழியில் கல்வி கற்றால் தான் ஆழ்ந்த அறிவு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவ படிப்பை முடித்து பட்டம் பெறுவோருக்கு சமூக பொறுப்புணர்வு அவசியம் எனவும் கூறினார்.

உலகின் முதல் மொழி தமிழ் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

உலகின் முதல் மொழி தமிழ் என்பதை நாட்டில் அனைவரும் புரிந்துள்ளனர் என காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் அமித்ஷா பேச்சு. உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நவ.19ம் தேதி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிலையில், வாரணாசியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் பேசிய மத்திய உள்துறை … Read more

தமிழ் மொழி தொன்மையானது – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சு. சென்னை அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தமிழ் மொழி தொன்மையான மொழி. அனைத்து நீதிமன்றங்களில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என கூறினார். மேலும், சாமானியர் புரியும் வகையில் நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக மாநில … Read more

இதற்கான தேர்வு முடிவுகள் வெளியீடு! 1,500 மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய்! – அமைச்சர் அறிவிப்பு

தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர். தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பள்ளிக் கல்வித் துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ் மொழி இலக்கிய திறன் அறிவு தேர்வில் நாகையை சேர்ந்த மாணவி அபிநயா 100-க்கு 97 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். அதிக மதிப்பெண் பெற்ற 1,500 மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1,500 … Read more

தமிழ் தான் திராவிடத்தை ஆளவும் வைக்கிறது, தமிழர்களை வாழவும் வைக்கிறது – அமைச்சர்

திராவி மாடல் ஆட்சி தமிழகத்தை ஆண்டு கொண்டியிருப்பதற்கான காரணம் தமிழ் தான் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு. தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டாரம் செல்லப்பன்பேட்டை கிராமத்தில் இன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு இந்த சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அவர், திராவிட ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, தமிழகத்தை திராவிட ஆட்சி, திராவி மாடல் ஆட்சி, … Read more

#BREAKING: தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைப்பு!

அக்.1-ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தஹள்ளிவாய்ப்பு என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவிருந்த தேர்வு, அக்டோபர் 15-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறித் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் … Read more

அக்.1 தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு..12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500!

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு வரும் அக்டோபர் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறிவுத் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1,500 மாணவர்கள் … Read more

#JustNow: தமிழ் வழியில் படித்தோருக்கு முன்னுரிமை – எதிரான மனு தள்ளுபடி!

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டதிருத்தத்திற்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக புழல் உதவி சிறை அதிகாரி ஷாலினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம். 10ம் வகுப்புவரை தமிழிலும், 11, 12ம் வகுப்பை கேரளாவில் ஆங்கில வழி கல்வியில் படித்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. எனவே, அரசியல் சட்டத்திருத்தம் தங்களை போன்றோரின் அடிப்படை … Read more

தமிழை பிற மாநிலங்களுக்கு பரப்ப வேண்டும் – ஆளுநர்

தமிழ் மொழியை பிறமாநிலங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரை. சென்னை பல்கலைக்கழகத்தின் 164-ஆவது பட்டமளிப்பு விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, சென்னை பல்கலைக்கழகம் பழமையானது மட்டுமல்ல, பெரும் சிறப்பு வாய்ந்தவையாகும். நாட்டின் அனைத்து துறைகளிலும் புகழ்பெற்ற தலைவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் நோபல் பரிசை பெற்று பெருமை சேர்த்துள்ளார்கள். சென்னை பல்கலைக்கழகத்தின் இழந்த பெருமையை மீட்டெடுக்க ஆசிரியர்களும், இதர ஊழியர்களும் பாடுபட வேண்டும் என தெரிவித்தார். … Read more

COWIN இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்ப்பு…!

கோவின் இணையப்பக்கத்தில் தமிழை தவிர்த்து 9 பிராந்திய மொழிகள் சேர்க்கப்பட்டது. கோவின் இணையப்பக்கத்தில் தமிழ் மொழி சேர்க்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற நிலையில், தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக, மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் சார்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கோவின் இணையதளத்தில், தடுப்பூசி செலுத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், இந்த கோவின் என்ற இணையதள பக்கம் ஆங்கில மொழியில் மட்டுமே செயல்பட்டு வந்தது. மத்திய சுகாதாரத்துறை … Read more