இதுவரை நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாகவே முன்வந்து விசாரித்து வரும் நிலையில், இது குறித்து கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின் பெற்றோரை இறந்த குழந்தைகளின் விபரம் மற்றும் பெற்றோரை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அறிவித்த நல திட்டங்களை அரசு எப்படி செயல்படுத்தப்போகிறது பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவு. கொரோனாவால் தந்தை மற்றும் தாய் ஆகியோரை இழந்த குழந்தைகளுக்கு PM Cares மூலம் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 18 வயதை அடைந்ததும் மாத ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், மேலும், பெற்றோரை இழந்த குழந்தை 23 வயதை அடைந்ததும் PM Caresல் […]
சிபிஎஸ்சி பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுமா என்பது குறித்து நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை. கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர். இந்நிலையில், வழக்கறிஞர் மம்தா சர்மா 12 வகுப்பு பொதுத் தேர்வை […]
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய கோரும் வழக்கை மே 31-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ-க்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தவறிவிட்டதால் வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்தனர். தேர்வை ரத்து செய்வது தொடர்பான நோட்டீசை சிபிஎஸ்இ-க்கு அனுப்ப மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. […]
ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ள தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டனா். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனால், நாடு முழுவதும் பல நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன், படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் மருத்துவ ஆக்ஸிஜன் கிடைப்பதையும், விநியோகிப்பதையும் திறம்பட எதிா்கொள்ளும் வகையில் பொது சுகாதார வசதிகளை ஏற்படுத்தித் தர உயா் மருத்துவ நிபுணா்களை உள்ளடக்கிய ஒரு தேசிய அளவிலான பணிக் குழுவை அமைத்து […]
தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் கூட சுமத்த முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது கொடுமையானது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையில் மிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து பல நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என வழக்கு தொடரப்பப்ட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கொரோனா விதிமுறைகள் தேர்தல் சமயத்தில் முழுமையாக கடை பிடிக்கவில்லை, ஆனால் அதனை […]
மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக 16% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, மராத்தா […]
மின்சாரம், வாகனம் என பல்வேறு வகையில் தனியார் பள்ளிகளுக்கு செலவு குறைந்துள்ளதால் பள்ளி கட்டணத்தை கட்டாயம் குறைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் […]
சென்னை உயர்நதிமன்றம் தேர்தல் ஆணையம் குறித்து விமர்சித்து இருந்தது தற்போது விவாதத்திற்குளாகி இருக்கும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்களையும் விமர்சனங்களையும் உங்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேட்டு கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அண்மையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றும் வகையில் தேவையான ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிமுக வேட்பாளர் எம் ஆர் விஜயபாஸ்கர் […]
கொரோனா தீவிரமாக பரவ தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை எதிர்த்து,தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இதற்குப் பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்,தேர்தல் ஆணையம் தாங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினர். கொரோனா இரண்டாம் அலையானது மிகத் தீவிரமாகப் பரவியதற்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும்,தேர்தல் ஆணையம் மீது ஏன் கொலைப்பழி சுமத்தக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றம்,தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சாட்டியிருந்தது. இதை எதிர்த்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் […]
சமூக ஊடகங்களில் உதவி நாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசை எச்சரித்துள்ளது. தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல மாநிலங்களில் படுக்கைகள், ஆக்ஸிஜன் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றம் ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி சந்திரசூட் தலைமையில், நீதிபதி எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி எஸ். ரவீந்திர பாட் அமர்வு விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு […]
தடுப்பூசிக்கான விலை நிர்ணயங்களை தடுப்பூசி நிறுவனங்கள் நிர்ணயிப்பதை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் ஆக்சிஜன் மற்றும் தடுப்புப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய மாநில அரசுகள் எந்த அளவிற்கு ஒத்துழைப்புடன் செயல்படுகிறீர்கள். நாடுமுழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. சமூக வலைதளங்களில் ஒவ்வொருவரும் ஆக்சிஜன் கேட்டு பல பதிவுகள் பதிவிட்டு வருகின்றனர். இதை நாங்களும்பார்த்துள்ளோம். […]
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம் என்று உச்சநீதிமன்றம் யோசனை வழங்கியது. இதனைதொடர்ந்து, […]
டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தனது வளாகத்தில் சிகிச்சை மையம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வழக்கமாக உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை மே மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து ஜூன் மாதம் வரை விடுமுறை இருக்கும். ஆனால் தற்போது கொரோனா அதிகரித்து வருவதால் வரும் மே7-ஆம் தேதி முதல் விடுமுறை அளித்துள்ளது. கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள், ஆர்டிபிசி ஆர் சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை […]
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பல மருத்துவமனைகளில் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், ஸ்டெர்லைட்டில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் நாள் ஒன்றுக்கு 500 டன் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். எனவே இடை காலம் ஆக்சிஜன் தயாரிப்புக்கு ஆலை […]
திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருச்சுழி தொகுதியில் தங்கம் தென்னரசு வாக்களர்களுக்குப் பரிசு பொருட்கள் வழங்கினார். பரிசுப் பொருள்கள் வழங்கியதை தேர்தல் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் தங்கம் தென்னரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் எனவே திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறினார். […]
பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு உள்ள நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனது தண்டனையை நிறுத்தி வைக்க்கோரிய மனுவும் , பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கடிதத்தின் நகல் கோரிய மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த நீதிபதியாக, மூத்த நீதிபதி ரமணாவை நியமிக்க, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார். உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே பரிந்துரை செய்தார். பரிந்துரைக் கடிதத்தை எஸ் ஏ பாப்டே மத்திய சட்டத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே ஏப்ரல் 23-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு. இன்று வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை வைத்தனர். அதில், ஸ்டெர்லைட் ஆலை தற்போது மூடப்பட்டுள்ளது. எனவே ஸ்டெர்லைட் ஆலை தொடர்ப்பான வழக்கை உடனே விசாரிக்க வேண்டும். அதுவும் வழக்கை ஏப்ரல் முதல் வாரத்தில் அவசர வழக்காக தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை வழக்கை […]
உச்சநீதிமன்றம் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்தது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரே 3 கட்டங்களாக ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அசாமில் 3 கட்டங்களாகவும், மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து 5 மாநிலங்களில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை பதவிக்காலம் நிறைவடைந்த பின்னர் […]