அரசு மருத்துவர்களுக்கான 50% இடஒதுக்கீடுக்கு அனுமதி- உச்சநீதிமன்றம்..!

சூப்பர் ஸ்பெசாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேருவதற்கு அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களாக பணிபுரியும் மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு அரசு அரசாணையை பிறப்பித்தது. இந்த அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உத்தரவு பிறப்பித்தது. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சில  மருத்துவர்கள் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த … Read more

#Breaking:மாணவி தற்கொலை:அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி – உச்சநீதிமன்றம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார். இது வதந்தி: இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம் … Read more

#BREAKING: ஹிஜாப் மேல்முறையீடு: விசாரணை ஒத்திவைப்பு..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. போரட்டம்:  முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, மாணவிகள் எதிர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மாநில அரசின் பள்ளி கல்வித்துறை, … Read more

#BREAKING: ஹிஜாப் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என சில பி.யு.கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது எனக் கல்வி நிறுவனங்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என இந்து மாணவ, … Read more

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு..!

கடந்த நவம்பரில் வேதாந்தா நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில் ஆலையில் உள்ள இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலையில் உள்ளதால் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு ஸ்டெர்லைட் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கிடையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இரண்டு முறை பட்டியலிடப்பட்டும் விசாரிக்கப்படவில்லை எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பில் … Read more

நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் நினைக்கவில்லை-உச்சநீதிமன்றம்..!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மத்திய அரசு கூறுகையில், கொரோனா இழப்பீடு வழங்குவத்தில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது.  மருத்துவர்கள் நிறையபேர் போலி சான்றிதழ்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது. நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. … Read more

விரைந்து விசாரணை….ராஜேந்திர பாலாஜி கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்.!

அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர்,பணமோசடி செய்த புகாரில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 17-ஆம் தேதி தள்ளுபடி செய்ததால் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்தார். இதனால்,8 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்த நிலையில், சமீபத்தில் கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை சுற்றி வளைத்து … Read more

புல்லட் ரயில் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது -உச்சநீதிமன்றம்..!

புல்லட் ரயில் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மறுபுறம் நீதிமன்றங்களின் தலையீடு குறித்து உச்சநீதிமன்றம்  கவலை தெரிவித்தது. மும்பை- அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டத்தில் அகமதாபத் சபர்மதியில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிக்கான ஒப்பந்தத்தை மோன்ட்டே கார்லோ லிமிடெட் பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்(NHSRCL) வேறு ஒரு நிறுவனத்திடம் வழங்கியது. இதையடுத்து மோன்ட்டே கார்லோ லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஒப்பந்தத்தை நிராகரிக்கும் போது எந்த காரணமும் … Read more

#BREAKING: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் -உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி இறுதிக்குள் முடிக்க வேண்டிய நிலையில் கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர்  மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜனவரி 27-க்குள் (அதாவது இன்று) தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால்,  மாநில தேர்தல் ஆணையம்  தேர்தலை இன்னும் நடத்தி முடிக்கவில்லை. இந்நிலையில், 40 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரி தமிழக … Read more

#Breaking:இலவசங்களுக்கு தடைகோரி வழக்கு – பதில்தர உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி:அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிக்க தடைகோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக இலவசம் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றன.இதனால்,நிதிச்சுமை மக்கள் தலையில்தான் விழுகின்றன.எனவே,இலவசங்களை வாக்குறுதியாக அறிவிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் தேர்தல் சின்னங்களை பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,இலவசங்கள் தேர்தலின் நேர்மையை பாதிக்கும் என்றும்,தேர்தல் வாக்குறுதியாக … Read more