சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவாகியுள்ளார். இந்த வழக்கு, காதல் திருமணம் செய்த இளைஞரின் 17 வயது சகோதரனை கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடையது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றம், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. […]
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இப்படம், கர்நாடகாவை தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது. காரணம் தமிழில் இருந்து கன்னடம் வந்தது என கமல் கூறியது சர்ச்சையானது. அவரது கருத்து கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. கமலின் கருத்தை கண்டித்து பல கன்னட சங்கங்கள், அவரது படத்தை மாநிலத்தில் வெளியிடக்கூடாது என்றும், படம் அம்மாநிலத்தில் வெளியிடப்படுவதைத் தடுக்க நீதிமன்றத்தையும் […]
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின் நிலையை விவரிக்கத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த சோதனைக்கு பிறகு, தமிழ்நாடு அரசும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இந்த சோதனைகளை “சட்டவிரோதமானவை” எனவும், மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு […]
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என கர்னல் குரேஷி குறித்து மத்தியப் பிரதேச அமைச்சர் விஜய் ஷா சர்ச்சைகுரிய வகையில் பேசிருந்தார். இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்ததோடு விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்யவும் வலியுறுத்தியுள்ளனர். தற்பொழுது, ராணுவ அதிகாரி சோஃபியா குரேஷியை விமர்சித்த விவகாரத்தில் பாஜக அமைச்சர் குன்வர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது. […]
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அதில் ‘மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசில் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா?’ போன்ற பரபரப்பான கேள்விகளும் இடம்பெற்றுள்ளன. […]
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய் ஷா, நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவர்களை, அவர்களின் சகோதரியை வைத்து பிரதமர் மோடி ஒழித்துவிட்டதாக அமைச்சர் விஜய் ஷா கூறியிருந்தார். இதையடுத்து, கர்னல் சோபியா இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவரை பயங்கரவாதிகளின் சகோதரி என சித்தரிக்கும் வகையில் அமைச்சர் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் மன்னிப்பு கேட்டார். இதனை […]
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேற்று ஓய்வு பெற்ற நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்குப் பதிலாக நீதிபதி கவாய் நியமிக்கப்பட்டார். முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் தேதி, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நீதிபதி கவாய் நியமனம் தொடர்பான அறிவிப்பை சட்ட அமைச்சகம் வெளியிட்டது. ஏப்ரல் 16 அன்று, தலைமை நீதிபதி கன்னா அவரது பெயரை […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தியும், இத்தாக்குதலை அடுத்து வெளியூரில், வெளிமாநிலங்களில் பயிலும் காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பொதுநல மனுவானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு இன்று […]
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடு விதிக்க வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டிருந்தது.தமிழ்நாட்டில், ஆளுநர் ஆர்.என். ரவி பத்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்தார். இதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் மசோதா தொடர்பான வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த […]
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இதற்கு கடந்த 8-ம் தேதி, “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக […]
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், “10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது என்றும், அந்த சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்பட வேண்டும் எனவும் தெரிவித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. அதன்படி, 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியது செல்லாது என்றும் பேரவையில் மீண்டும் நிறைவேற்றி மசோதாவை அனுப்பிய நாளிலேயே […]
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால தாமதப்படுத்துகிறார். துணை வேந்தர் நியமனங்களில் சட்டத்தை மீறி செயல்படுகிறார், மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால அவகாசம் நியமிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நடைபெற்று வந்தது. அதில், மாநில […]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் தற்போது காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், இந்த வழக்கில் சார் என்ற நபரை, மாணவி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த ‘சார்’ யார் என்பது இன்று வரை தெரியா புதிரா இருந்து வருகிறது. இதனால், அவர் யார் என்று கேள்வி எழுப்பி எதிர்க்கட்சியினர் கடும் […]
டெல்லி : நம் நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் உள்ள நீதி தேவதைகளின் சிலையானது கண்கள் கட்டப்பட்டு, இடது கையில் தராசு, வலது கையில் வாள் என அமைந்திருக்கும். அதற்கு அர்த்தம் என்னவென்றால், ‘ஏழை, பணக்காரன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எந்த ஒரு பாகுபாடுமின்றி நீதி வழங்கவேண்டும் எனவும் சரியான எடையில் தீர்ப்பை வழங்க வேண்டும் எனவும் அநீதியை அழிப்பதற்காகவே அந்த வாள்’ என்பதாகும். இந்த நிலையில், நேற்று உச்சநீதிமன்ற நூலகத்தில் நடந்த விழாவில் புதிய நீதி தேவதை […]
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட் நட்சத்திர விடுதியில் மலையாள நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், திருவனந்தபுரத்தில் உள்ள அருங்காட்சியக போலீஸார், நடிகர் சித்திக் மீது, பாலியல் வழக்குப் பதிவு செய்தனர். அதுமட்டுமின்றி அவர் கைது செய்யப்படுவார் என தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கைது செய்யப்படவிருந்த […]
டெல்லி : கனிம உரிமைகள் மீது வரி விதிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் வரம்புக்குட்படுத்தப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக ஒன்றிய அரசு மற்றும் சுரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், “சுரங்கங்கள், குவாரிகளை உள்ளடக்கிய நிலங்களுக்கு வரி விதிப்பதை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) 1957 சட்டம் வரையறுக்கவில்லை. […]
நீட் தேர்வு முடிவுகள் : உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நகரங்கள், தேர்வு மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் முன்னதாக கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், மீண்டும் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து மையங்கள் வாரியாக நீட் தேர்வு முடிவுகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. அதன்படி, exams.nta.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் மீண்டும் ஒருமுறை அறிந்து கொள்ளலாம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் […]
Arvind Kejriwal: ஜாமீன் கேட்டு ஏன் மனுதாக்கல் செய்யவில்லை என்று உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்புக்கு கேள்வி. கடந்த மாதம் 21ம் தேதி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதன்பின் அமலாக்கத்துறை கெஜ்ரிவாலிடம் விசாரணை மேற்கொண்டு இருந்தது. அதன்படி அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும், காவலில் அனுப்பியதை எதிர்த்தும் […]
Senthil balaji: செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாத்துறை கைது செய்தது. இதன்பின் பல்வேறு கட்ட விசாரணைகளை அடுத்து இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது நீதிமன்ற காவலில் கடந்த ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து […]
Arvind Kejriwal: அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் […]