கேரளா:18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் -பினராயி

கேரளாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்  என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது வழக்கமான கொரோனா அறிவிப்பிற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நிதிச் சுமை: மேலும் அவர் கூறுகையில்,”மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ளுமாறு மத்திய அரசு கூறியிருந்தது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மாநிலங்களுக்கு ஏற்கனவே … Read more

கேரளாவுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்க பினராயி விஜயன் கோரிக்கை..!

மத்திய அரசிடம் கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை. அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே மாநிலத்தில் போதுமான தடுப்பூசி இருப்பதாகவும், கூடுதலாக 50 லட்சம் டோஸ் வழங்க கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு கடிதம் மூலம் இந்த கோரிக்கையை வைத்தார். அவர் எழுதிய கடிதத்தில் தடுப்பூசி  பற்றாக்குறை சுகாதார மற்றும் குடும்ப நல … Read more

#ELECTIONBREAKING: வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மீண்டும் தர்மடம் தொகுதியில் முதல்வர் பினராயி போட்டி ..!

மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் போட்டியிடவுள்ளார். கேரளாவில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தொகுதிபங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரிக்கும் சுயேட்சைகள் உள்பட 83 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மீண்டும் தர்மாடம் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயனும், கேரள சுகாதாரத்துறை … Read more

#BREAKING: கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி..!

பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள்சமீபத்தில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்ற, இந்த நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வருகின்ற 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார். ஏற்கனவே கடந்த 23-ஆம் தேதி நடத்த இருந்த வேளாண் சிறப்பு கூட்டத்திற்கு ஆளுநர் அனுமதி மறுத்த நிலையில், தற்போது கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையை ஏற்று ஆளுநர் ஆரிஃப் முகமது … Read more

இன்று பினராயி தலைமையில் கூடுகிறது-அனைத்துக்கட்சிக் கூட்டம்!

கேரள மாநிலத்தில் கொரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு மூலம் வெளியிட்டார். அப்போது  இது குறித்து அவர் தெரிவித்ததாவது: “கேரளாவில் புதிதாக 4,538 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் 3,347 பேர் குணமடைந்து உள்ளனர், 20 பேர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் … Read more

கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா – முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று 4,538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 3,347 பேர் குணமடைந்தனர். இதுவரை 1,79,922 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 697 பேர் ஆக உயர்ந்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 57,879 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள கேரள … Read more

திருவனந்தபுரம் விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு..! பினராயி விஜயன், மோடிக்கு கடிதம்.!

நேற்று  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதில், அசாம் கவுகாத்தி,  ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார்  பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் மோடிக்கு கடிதம் … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1184 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 41 பேர் சுகாதார பணியாளர்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

மூணாறு நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு – பினராயி விஜயன்

கேரள நிலச்சரிவு பலி எண்ணிக்கை 26 பேர் ஆக அதிகரிப்பு. கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதிலும்,  இடுக்கி மாவட்டத்தில்தொடந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அங்கு 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில் சுமார் 20 வீடுகள் மண்ணில் புதைந்தன. இந்த தோட்டத்தில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் தமிழகத்தை சார்ந்தவர்கள். ராஜமலையில் இடுகியில் நிலச்சரிவு ஏற்பட்ட … Read more

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில்1,420பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,420 பேருக்கு கொரோனா . கேரளாவில் இன்று ஒரே நாளில் 1,420 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 1,715  பேர் குணமடைந்தனர். இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழப்பு . இதில் திருவனந்தபுரத்தில் இன்று 485 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளன என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.