டெல்லியில் பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடுத்த அன்பு பரிசு.!

இன்று டெல்லி சந்திப்பின் போது, கேரளாவில் புகழ்பெற்ற கதகளி உருவ பொம்மையை பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார். கேரளாவில் ஆளும் முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கும், கேரள ஆளுநருக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. இதற்கு தீர்வு காண பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஆளுநர் விவகாரம் குறித்தும், கேரளாவில் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது குறித்தும் பிரதமரிடம் கூறுவதற்கு சென்றிருந்தார். இன்று டெல்லியில் பிரதமரை சந்திக்க கேரள முதல்வர் … Read more

முல்லை பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது.! தமிழக முதல்வர் கடிதம்.! 

முல்லை பெரியாறு அணை உறுதியுடன் இருக்கிறது. அணை பக்கம் இருக்கும் கேரள எல்லையில் வசிக்கும் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.  – மு.க.ஸ்டாலின் கடிதம்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் முல்லை பெரியாறு அணை பற்றி எழுதியுள்ளார். அதாவது முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை ஆராய வேண்டும்.  அது நிரம்பி வருவதால் கேரள கரையோர மக்களுக்கு பாதிப்பு உண்டாகும் அபாயம் இருக்கும் என கேரள முதல்வர் … Read more

கண்ணூர் – திருவனந்தபுரம் விமானத்தில் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம்

கேரளா  முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு திங்கள்கிழமை பயணம் செய்த விமானத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் இருவர் முதலமைச்சர் பதவியிலிருந்து பினராயி விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனை கேரளா இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ்.சபரிநாதன் சமூக வலைதளங்களில் 3 வினாடிகள் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார், அதில் இருவர்  விஜயனை ராஜினாமா செய்யக் கோரி முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதையும், முதலமைச்சருடன் வந்த ஒரு நபர் … Read more

மார்க்சிஸ்ட் கம்.கட்சி முக்கிய பிரமுகர் மறைவு – முதல்வர் இரங்கல்!

கேரளா:சிபிஐ (எம்) மத்திய குழு உறுப்பினர் எம்.சி.ஜோஸ்பின் காலமானதற்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் இரங்கல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.சி. ஜோஸ்பின் (வயது 74) கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.சிபிஐ(எம்) கட்சியின் 23-வது கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட ஜோஸ்பின் சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார் என்று கூறப்படுகிறது. முதல்வர் இரங்கல்: இதனையடுத்து,அவரது மறைவுக்கு சிபிஐ(எம்) கட்சியினர் … Read more

இலவச டயாலிசிஸ் திட்டம் – கேரளா முதல்வர் அறிவிப்பு..!

நோயாளிகள் மருத்துவமனைகளுக்குச் செல்லாமல் வீட்டிலேயே இலவசமாக டயாலிசிஸ் செய்துகொள்ளும் படி “பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டம்” 11 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இனி நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே டயாலிசிஸ் செய்து கொள்ளலாம். கேரளாவின் சுகாதாரத் துறை 11 மாவட்டங்களில் புதிய பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தை வீட்டிலேயே டயாலிசிஸ் செய்வதற்கு வசதியாக அறிமுகப்படுத்தியுள்ளது என கேரளா முதல்வர்  பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். பெரிட்டோனியல் டயாலிசிஸ் திட்டத்தின் அதிகரிப்பு ஹீமோ டயாலிசிஸை படிப்படியாகக் குறைப்பதன் ஒரு பகுதியாகும். தற்போது இந்த வசதி திருவனந்தபுரம், … Read more

தினக்கூலி மீனவர் குடும்பங்களுக்கு தலா ரூ.3,000- கேரள முதல்வர் அறிவிப்பு..!

கேரளாவில் உள்ள 1,59,481 மீனவர் குடும்பங்களுக்கு ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்த கனமழையால் தினக்கூலியை இழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3,000 வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மாநிலத்தில் உள்ள 1.60 லட்சம் மீனவர்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அக்டோபர் மற்றும் நவம்பரில் கனமழையால் அதிக எண்ணிக்கையிலான வேலை … Read more

நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கேரள அரசு அறிவிப்பு!

கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் நாட்களில் ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும், பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், … Read more

#BREAKING : கேரளாவில் திங்கள் முதல் இரவுநேர ஊரடங்கு..!

கேரளாவில் கொரோனா காரணமாக வரும் திங்கள் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கேரளாவில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பு காரணமாக  வரும் திங்கள் முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்து வரும் நிலையில் இரவு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் … Read more

பிரித்விராஜ்ஜின் டிவீட்டிற்கு ஆதரவு அளித்த கேரள முதல்வர்..!

லட்சதீவின் சீர்திருத்தங்களை எதிர்த்ததற்காக சைபர் தாக்குதலை சந்தித்த கேரள திரைப்பட நடிகர் பிரித்விராஜ் சுகுமாரனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆதரவு தெரிவித்துள்ளார். லட்சத்தீவின் சீர்திருத்தத்திற்கு எதிராக ட்வீட் செய்த நடிகர் பிரித்விராஜ் மீது லட்சத்தீவின் வலது சாரிகள் சைபர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், நடிகர் பிரித்விராஜ் வெளிப்படுத்திய உணர்வுகள் கேரள மக்களின் உணர்வு, பிரித்விராஜ் அதனை சரியாக வெளிப்படுத்தியுள்ளார் என்று அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். நடிகர் … Read more

#BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி – பினராயி விஜயன்..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு. கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி எனவும் மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், குழந்தைக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார். We will provide a special package for children who have lost their parents … Read more