பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தங்கக்கவச உரிமை வழங்கும் வழக்குக்கான தீர்ப்பு இன்று மாலை 4 மணிக்கு ஒத்திவைப்பு. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்கக்கவச உரிமையை எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கா, அல்லது ஒபிஎஸ் தரப்பிற்கா, யாருக்கு வழங்குவது என்பது குறித்து வழக்கின் தீர்ப்பு இன்று 4 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது.
கோவை கார்விபத்து குறித்தும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்தும், திமுக அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் பலியான சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ சோதனை செய்யும் அளவுக்கு பூதாகரமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்தும், தமிழக சட்ட ஒழுங்கு பற்றியும், ஓ.பன்னீர்செல்வம் தனது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதில், வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு திமுகவால் […]
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து குறிப்பில், ‘இன்று 58-வது பிறந்தநாளை கொண்டாடும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். தேசத்திற்கும் மக்களுக்கும் தொடர்ந்து சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இன்னும் பல ஆண்டுகள், நல்ல ஆரோக்கியத்தையும் அமைதியையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார். […]
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை அறிக்கை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வழக்கு தொடர உள்ளதாக கேள்வி படுகிறேன். அதனால் அதன் மீது கருத்து கூற முடியாது. – ஓ.பன்னீர்செல்வம் கருத்து கூறினார். வரும் அக்டோபர் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. முன்னதாக அதிமுக கட்சி சார்பாக முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. தற்போது இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு அணியினராக இருப்பதால், இரு தரப்புமே தங்க […]
முதலமைச்சர் ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாக எடப்பாடி பழனிசாமி கூறிய குற்றசாட்டை நிரூபித்தால் ஓபிஎஸ்-ம், நாங்களும் அரசியலை விட்டு விலக தயார் என ஜே.சி.டி.பிரபாகர் சவால். நேற்று சென்னையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கபட்டனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்-ஐ பீ டீமாக வைத்து அதிமுகவை பிளக்க பார்க்கிறார்.ஸ்டாலின்- ஓ.பி.எஸ் நேற்று அரை மணி […]
நானும், முதல்வர் ஸ்டாலினும் பேசியதை அவர்கள் நிரூபித்து விட்டால் நாங்கள் அரசியலை விட்டு விலகி விடுகிறோம். நிரூபிக்க தவறினால் அதேபோல அவர்கள் விலக தயாரா? என ஓபிஎஸ் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் தங்களுக்கு (அதிமுக) உரிமை பறிக்கப்பட்டதாகவும், எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிகக்காததற்கும் எதிர்த்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அந்த […]
நேற்று முன்தினம் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கி முதல் நாள் இரங்கல் கூட்டத்தொடர் நடைபெற்றது. நேற்று சட்டமன்றத்தில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணைக்குழு அறிக்கை ஆகியவை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதே போல நேற்று ஹிந்தி திணிப்புக்கு எதிராக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே போல எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் தொடர்பான பிரச்சனை காரணாமாக வெளிநடப்பு செய்தனர் அதன் […]
ஜெயலலிதா இறந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதல்வர் பதவிக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டார் ஓபிஎஸ். அதன் பின்னர் நடந்த அரசியல் சம்பவங்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால், கோவம் வந்து ஓபிஎஸ் தனது சுய லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார். – என ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் ஓபிஎஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது நேற்று சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவன் மரணம் தொடர்பான உண்மைகளை அறிய விசாரணை மேற்கொள்ள நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணைய […]
தமிழக அரசின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானத்தை அதிமுக முழு மனதாக ஆதரவு தெரிவிக்கிறது. – ஓபிஎஸ் சட்டப்பேரவையில் பேச்சு. மத்திய அரசின் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய முதலமைச்சர், குடியரசு தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குழு அளித்த அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தி எதிர்ப்பு தீர்மானத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார். […]
எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பையும் நாங்கள் குறிப்பிட்டோம். ஆனால் தீர்ப்புக்கு மாறாக சபாநாயகர் செயல்படுகிறார். திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை படி சபாநாயகர் செயல்படுகிறார். – என தங்கள் தரப்பு கருத்துக்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார். தமிழக சட்டப்பேரவை தொடங்கி இரண்டாவது நாளான இன்று இபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன்கலந்து கொண்டார். அப்போது எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் கடுமையான சட்டசபையில் அமளி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் […]
இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், […]
எனக்கு பின்னாலும் இந்த இயக்கம் பல நூறாண்டுகள் மக்களுக்காக இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட். இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றி வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அஇஅதிமுக இயக்கத்தின் 51-ஆம் ஆண்டு விழாவான இன்று, கழகத் தொண்டர்கள் அனைவரும், இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்கள் வகுத்து தந்த கொள்கைகளையும் சட்ட திட்டங்களையும் அடி […]
அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொண்டாடிய ஓபிஎஸ், விழாவில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர். அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர். அதே போல, […]
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் நாளை சட்டப்பேரவையில் வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த நிலையில், மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரான முதல் நாளில் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் தரப்பு எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சட்டப்பேரவை தொடங்கியது. முதல் நாளான இன்று எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 61 எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையை புறக்கணித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை மாற்ற கோரி சபாநாயகரிடம், இபிஎஸ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதுகுறித்து, இன்னும் சபாநாயகர் முடிவு எடுக்காத நிலையில் இபிஎஸ் […]
சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகளில் மாற்றமில்லை. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேர்தத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும், ஈபிஎஸ் தரப்பில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க […]
ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் அதிமுக கொடியேற்றினார். இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியேற்றினார். அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த நிலையில், ஓபிஎஸ் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, வெள்ளை புறாக்களை பறக்க விட்டுள்ளார்.
ஓபிஎஸ் பண்ணை வீட்டில் திருடர்கள் டிவியை திருடி சென்றுள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசப்பட்டியில் ஓபிஎஸ்-ன் பண்ணை வீடு ஒன்று உள்ளது. ஓபிஎஸ் இந்த வீட்டில் அவ்வப்போது தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவது, ஓய்வெடுப்பது என வழக்கமாக இருந்தது. இந்த நிலையில், பண்ணை வீட்டின் பின்புறம் மதில் சுவரைத் தாண்டி வந்த திருடர்கள் ஓபிஎஸ் ஓய்வெடுக்கும் மேல் தளத்தில் உள்ள மதில் சுவரை தாண்டி வந்த திருடர்கள், உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து […]
‘வல்லரசு இந்தியா’ கனவு நிறைவேற ஒற்றுமையாய் உழைத்திடுவோம் என உறுதியேற்போம் என ஓபிஎஸ் ட்வீட். இன்று ஏபிஜே அப்துல்கலாமின் பிறந்தநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது பிறப்பு, ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்ற தன்னுடைய பொன்மொழிக்கு தானே எடுத்துக்காட்டாக விளங்கி, வளமான இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர். வாழ்வில் சாதிக்க நினைக்கும் ஒவ்வொரு இளைஞர்களும் சரியான வழிகாட்டியாக விளங்கியவருமான, பல்துறை வித்தகர், பாரத ரத்னா திரு.ஏ.பி.ஜெ.அப்துல் […]
ஓபிஎஸ், ஈபிஎஸ் அனுப்பிய கடிதங்களை இன்னும் படிக்கவில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்றும் இருவரும் மீண்டும் கடிதம் எழுதி இருந்தனர். நேற்று காலை ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் […]