OPS: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் 6 ஓ.பி.எஸ் களுக்கும் சின்னங்களை ஒதுக்கியது தேர்தல் ஆணையம். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரோடு களத்தில் இருக்கும் மற்ற ஓ.பி.எஸ்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவரைப் போன்றே பன்னீர்செல்வம் என்ற பெயருடன் பலர் வேட்பாளர்களாக உள்ளனர். குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் […]
Election2024: ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாளி சின்னம் ஒதுக்கீடு. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு பணி நடைபெற்று வருகிறது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி, சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, முதலில் பதிவு […]
TVK : விஜய் கட்சியுடன் இணைந்து பணியாற்ற தயார் என ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறினார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் […]
OPS: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் 6-வதாக மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக நடைபெற்று வந்த வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. இதில், குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் ராமநாதபுர தொகுதியில் சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துள்ளது. அதாவது, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை நேற்றுமுன்தினம் தாக்கல் […]
OPS : ராமநாதபுரம் தொகுதியில் வாக்கு சேகரிப்பின்போது ஒரு நபருக்கு சுயேச்சை வேட்பாளர் ஓபிஎஸ் 500 ரூபாய் பணம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி ஆதரவில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுகிறார். முன்னதாக இரட்டை இலை சின்னம் கேட்டு, தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வந்த ஓபிஎஸ், நேற்று தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்து […]
ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் […]
Election2024 : ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் மற்றொரு நபர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சையாக ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று […]
OPS: எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி உதயகுமாருக்கு தகுதி கிடையாது. தேர்தலில் போட்டியிட முதல் விருப்பமாக ’வாளி’ சின்னம் கேட்டுள்ளேன், அதே போல பலாப்பழம் மற்றும் […]
OPS: இரட்டை இலை சின்னம், அதிமுக கொடி ஆகியவற்றை பயன்படுத்த அனுமதி கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் மாற்றம் லெட்டர் பேடு ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தடை விதித்திருந்தார். இதனை எதிர்த்து ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அதில், தனி நீதிபதி விதித்த தடையை விலக்க வேண்டும் என்றும் இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் […]
ADMK : எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சியை நீதிமன்றங்கள் , தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததன் பெயரில் இரட்டை இலை சின்னம் என்பது அவர்களிடத்தில் உள்ளது. இதனை எதிர்த்து, தற்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். Read More – தேர்தல் பத்திரங்கள் : உச்சநீதிமன்றம் கிடுக்குப்பிடி… சீரியல் நம்பர்களுடன் தாக்கல் செய்த SBI.! ஓபிஎஸ் தரப்பு முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் அளித்த மனுவில், ஓபிஎஸ் தரப்பினர் அதிமுக […]
Anbumani Ramadoss : மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எல்.முருகன், சரத்குமார் உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். Read More – 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வதே இலக்கு… பிரதமர் மோடி உரை! இந்த பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர் […]
OPS : இன்று பிரதமர் நரேந்திர மோடி சேலத்தில் நடைபெறும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். இந்த வருடத்தில் 6வது முறையாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி நேற்று கோவையில் ரோட் ஷோ நிகழ்வில் கலந்து கொண்டு இன்று சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி வருகிறார். Read More – தெரிந்து கொண்டு பேசுங்கள்.. காங்கிரஸ் மூத்த தலைவரை வம்பிழுக்கும் அண்ணமாலை.! பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளின் தலைவர்கள் […]
OPS: அதிமுக (ஓ.பி.எஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அதிமுக-வின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். Read More – மக்களவை தேர்தல்: அதிரடி திருப்பம்..! பாஜக – பாமக கூட்டணி உறுதி இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, […]
ADMK : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு என இருவருமே இரட்டை இலை சின்னத்திற்கும், அதிமுக கட்சிக்கும் உரிமை கோரினர். உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என பல்வேறு மையங்களில் இவர்கள் முறையிட்டனர். இதில் பெரும்பாலும் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கே வெற்றி கிட்டியது. Read More – அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் […]
ADMK: அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. Read More – தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது இந்த நிலையில் மக்களவை தேர்தலின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் […]
AMMK-OPS : மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் கூட்டணி விவகாரங்களை விரைந்து முடிக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் திமுக தனது கூட்டணி பேச்சுவார்த்தையை முழுதாக நிறைவு செய்து வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளது. தமிழகத்தின் அடுத்து அனைவரும் எதிர்பார்ப்பது, அதிமுக மற்றும் பாஜக தலைமையிலான தனித்தனி கூட்டணிகள். இதில் பிரதான கட்சிகள் எந்தெந்த கூட்டணிக்கு செல்லும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பல்வேறு அரசியல் திருப்பங்கள் […]
OPS : மக்களவை தேர்தலில் 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை பாஜகவிடம் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணியில் திமுக, அதிமுக ஒருபக்கம் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. Read More – மத்திய அரசை எதிர்ப்பதில் தயக்கம் ஏன்? தவெக தலைவர் விஜய் மீது விமர்சனம்.! மறுபக்கம் பாஜக, தங்களது தலைமையிலான கூட்டணியை அமைத்து வருகிறது. இதுவரை, தமிழ் மாநில காங்கிரஸ், சமத்துவ மக்கள் கட்சி, அமமுக உள்ளிட்ட […]
OPS: மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிட அவரின் ஆதரவாளர் மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தில் திமுக கூட்டணியில் கட்சிகளின் தொகுதி பங்கீடு முடிந்துள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை. Read More – போதைப் பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது..! ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி […]
OPS: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது தாமாக முன்வந்து எடுத்த வழக்கின் விசாரணையை வரும் மார்ச் 25ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் அவர் மகன் மீது வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.77 கோடி அளவிலான சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து, சிவகங்கை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்ட நிலையில் ஓ. பன்னீர்செல்வம் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து […]
OPS – முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய தடையில்லை என உச்சநீதிமன்றம் உதவியுள்ளது. கடந்த 2001 – 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்சஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன், மகள் , உறவினர் என ஓபிஎஸ் தொடர்புடையவர்கள் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. Read More – […]