மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி..! பள்ளிகளில் இன்று ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல்…!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று ‘தி ரெட் பலூன்’  திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில் சிறாா் திரைப்படங்கள் திரையிட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் … Read more

தமிழகத்தில் நாளை அரசு பள்ளிகளில் ‘தி ரெட் பலூன்’ படம் திரையிடல்!

அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை ‘தி ரெட் பலூன்’  படம் திரையிடல். உலக முழுவதும் குழந்தைகளின் பிரியமான விளையாட்டு பொருட்களின் பட்டியலில் பலூன் தவிர்க்க முடியாத ஒன்று. இந்த சூழலில் கற்பனையான, சுவாரசியமான காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான படம் தான் 1956-ஆம் ஆண்டு வெளியான ‘தி ரெட் பலூன்’. இந்தப் படம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்காா் விருது பெற்ற குறும்படமாகும். இந்த படத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் பள்ளி செல்லும்போது … Read more

பிரபல நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்..!

தாமிரபரணி படத்தின் மூலம் அறிமுகமான நடிகையின் மகள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகவுள்ளார். தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் மூலமாக பிரபலமானவர் பானு. இவர் தமிழில் தாமிரபரணி என்ற படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக அறிமுகமானார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தில் கடைசியாக இவர் தமிழில் நடித்திருந்தார். இவர் ஏராளமான மலையாளப்படங்கள் நடித்துள்ளார். மேலும் கேரளாவை சேர்ந்த இவருக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு தொழிலதிபர் ரிங்கு டோமி என்பருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து இவர்களுக்கு … Read more

முழு படத்தை ஒரு வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா..!

ஒரே வாரத்தில் முழு படத்தையும் நடிகை ஹன்சிகா நடித்து முடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஹன்சிகா தற்போது ‘105 மினிட்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜா துஷ்ஷா இயக்கியுள்ளார். இந்த படம் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா ஆகிய மொழிகளில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. … Read more

கருத்து சுதந்திரத்தை காக்க தான் சட்டம்…, அதன் குரல்வளையை நெறிக்க அல்ல – நடிகர் சூர்யா!

சட்டம் கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக தான் சட்டம், அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல என நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒளிப்பதிவு திருத்த மசோதா நிலைகுழுவிற்கு அனுப்பப்பட்டது. அதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இது குறித்து தனது அறிக்கையை நிலைக்குழு சமர்ப்பித்திருந்தது. இந்த அறிக்கை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த திருத்த சட்டத்தில் பல்வேறு விஷயங்கள் இடம்பெற்று வந்தாலும், நான்காவதாக இடம் … Read more

கோடி ரூபாய் கொடுத்தால் கூட இப்படி நான் நடிக்க மாட்டேன் – நடிகர் கார்த்தி ஓபன்

கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் புகைபிடிக்கும் காட்சிகளை நடிக்க மாட்டேன் என்று கார்த்தி கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் சுல்தான் படம் வெளியானது. இந்த திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தகுந்த வசூலையும் கொடுத்தது. இந்நிலையில், கார்த்தி பல படங்கள் நடித்திருந்தாலும் மாஸ் காட்டுவதற்காக எடுக்கப்படும் புகை பிடிக்கும் சீன்களை தவிர்த்து வருகிறார். கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் … Read more

கொரோனா ஊரடங்கால் தடைபட்ட திரைப்பட தயாரிப்பு! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் – அமைச்சர் ஜவடேகர்

திரைப்பட தயாரிப்பை மீண்டும் துவங்குவதற்கான எஸ்ஓபி எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு விரைவில் வெளியிடும். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கால், திரைப்படம், டிவி சீரியல், கோ – ப்ரொடக்சன் என அனைத்து பட தயாரிப்புகளுமே தடை செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், செய்தி – ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், கொரோனா … Read more

பொன்னியின் செல்வனில் இதனால் தான் நடிக்கவில்லை – அமலா பால்!

இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் படமாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பகுதியில் அமலாபாலும் இருப்பார் என கூறப்பட்டதோடு, பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதன் பின்பு அமலாபால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் அறிவிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ள அமலாபால் இந்த படத்தை நிராகரித்ததற்கான … Read more

15 வருடங்களுக்கு பிறகு பிரபல தெலுங்கு நடிகருடன் இணையும் த்ரிஷா!

நடிகை த்ரிஷா பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் தமிழில் மட்டுமல்லாது, மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியுடன், 15 வருடங்களுக்கு பின் நடிகை த்ரிஷா மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ‘ஆச்சார்யா’ என்னும் தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார். இதனையடுத்து, நடிகை த்ரிஷா 2006-ம் ஆண்டு ஸ்டாலின் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் … Read more

27-ம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாது! டி.ராஜேந்தர் அதிரடி!

டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடகர் என பன்முகத் தன்மை கொண்டவர். இவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோக சங்க தலைவராக உள்ளார்.  இவர் அளித்துள்ள பேட்டியில் டிடிஎஸ் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர்  பேசுகையில், திரைப்படங்களுக்கான டிடிஎஸ், தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இல்லாமல் தமிழகத்தில் மட்டும்தான் விநியோகஸ்தர்கள் இந்த டிடிஎஸ் கட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இப்படி … Read more