பிரதமர் மோடி மன்மோகன் சிங் அவர்களுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் தனது 89-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில் பிரதமர் மோடி அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்; […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குணமடைந்து வீடு திரும்பினார். நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு […]
ஆசிரியர்கள், பேருந்து ஓட்டுநர் போன்றவர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றி மாநிலங்கள் முடிவு செய்ய அனுமதிக்கலாம் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த யோசனைகள் கூறி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில், கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கையை விரிவுபடுத்த மத்திய அரசுக்கு மன்மோகன் சிங் யோசனை வழங்கியுள்ளார். அடுத்த ஆறு மாதங்களுக்கு எவ்வளவு தடுப்புசி கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் கொடுத்துள்ளது..? மாநிலங்களுக்கு எந்ததெந்த முறையில் […]
காங்., நட்சத்திரப் பேச்சாளர்களாக களமிரங்கும் பிரச்சாரப் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் அக்.,28 முதல் நவ.,7 வரை 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.முதல்வர் நிதீஷ் குமார் தலைமையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து தேஜஸ்வி யாதவ் தலைமையில் மஹாகட்பந்தன் கூட்டணி மோதுகிறது. 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனாத தளம், லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், […]
கொரோனா ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் வெகுவாக சரிந்துள்ளது. அதனை மீட்டெடுக்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 3 வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளார். பிபிசி தொலைக்காட்சி உடன் ஆன்லைன் விவாதத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் சந்தித்துள்ள பொருளாதார இழப்பு பற்றி பேசினார். கொரோனாவால், சரிவை சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்க மூன்று முக்கிய வழிமுறைகளை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைத்தார். அதில், முதலாவதாக மக்கள் வாழ்வாதாரத்தை […]
பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா குற்றம் சாட்டியுள்ளார். பிரதமரின் நிவாரண நிதி திட்டமானது பேரிடர் காலங்களில் அந்த நிவாரண நிதி திட்டங்களில் வந்த நிதியுதவியை கொண்டு நாட்டுமக்களுக்கு உதவி செய்யப்படும். இந்த திட்டம் பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும். இந்த பிரதமரின் நிவாரண நிதி திட்டத்திற்கு வந்த நிவாரண தொகையானது மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் கடைவீதியில், வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே .எஸ் அழகிரி, ராகுல்காந்தி உத்தரவு பேரில் எல்லையில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீனாவின் ஊடுருவலை இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளே தவறான செயல் என கூறுகிறது. சீனப் பொருள்களை நாம் புறக்கணிக்க வேண்டும். ராணுவ வீரர்கள் 20 பேர் இந்திய எல்லையில் உயிரிழந்தார்கள். […]
லடாக் எல்லையில் கடந்த வாரம் திங்கட்கிழமை இந்திய- சீன ராணுவத்துக்கு இடையே நடைபெற்ற மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீன தரப்பில் 35 வீரர்கள் இறந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை சீனா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சமீபத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி இந்தியப் பகுதிக்குள் யாரும் நுழையவில்லை என கூறியதை தொடர்ந்து, ப.சிதம்பரம், ராகுல் காந்தி, சோனியா காந்தி, உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினர். சீனா ஊடுருவவில்லை என்றால் […]
மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இல்லை என்ற கூறியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான மன்மோகன் சிங் ( 87 வயது ) நெஞ்சுவலி காரணமாக தற்போது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் 1991 -96 காலகட்டத்தில் மத்திய நிதியமைச்சராகவும், 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு முறை பிரதமராக பதவிவகித்துள்ளார் என்பது […]
விருதுநகரில் நடைபெற்ற விழிப்புணர்வு விழா ஒன்றில் பேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி. மாணிக்கம் தாகூர், ஆட்சித் தலைமையில் உள்ளவர்கள் அறிஞர்களும், நேர்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கட்சித் தலைமைக்கு அரசியல் அதிகாரங்களுக்கு ஆசைப்படாதவர்கள் வர வேண்டும் என்ற ரஜினியின் கருத்து வரவேற்கத்தக்கது என தெரிவித்தார். இதைத்தான் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் செய்தனர் என குறிப்பிட்டார். மேலும், 10 ஆண்டுகாலம் இந்த வழியில் தான் மத்தியில் சிறப்பான ஆட்சி வழங்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங்கின் சிந்தனைக்கு […]
ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம்தான் தவறானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,பாஜக ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு இறங்கு முகத்தில் செல்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தொடர்ந்து உற்பத்தி வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவை பாஜக அரசு நீக்கிய விதம்தான் தவறானது. 370வது பிரிவு நீக்கம் தற்காலிகமானது என நம்புகிறோம் என்று […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். I wish former Prime Minister Dr Manmohan Singh a very happy birthday. Our country continues to benefit from Dr Singh’s leadership in Parliament and […]
மோடி அரசின் தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் குறைந்துள்ளது என்றும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீழ்ச்சி கண்டுள்ளது என மத்திய திட்ட அமைச்சகம் தகவல் தெரிவித்தது. இந்த நிலையில் இது குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,நாட்டின் பொருளாதார நிலை மிகுந்த கவலை அளிக்கும் நிலையில் […]
மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார்.இவர் இந்தியாவின் பிரதமராக 2004–2014 ஆண்டு வரை இருந்தவர் .தற்போது ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொருத்து எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக முன்னாள் பிரதமர்களுக்கு அவர்களுக்கு இருக்கும் அச்சுறுத்தலை பொறுத்து பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில்உள்துறை அமைச்சகம் , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி […]
இந்தியாவில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றது. பெருகிவரும் சகிப்பின்மை, வகுப்புவாதம், வன்முறையால் நாட்டின் பன்முகதன்மை பாதிக்கப்பட்டு, நாடு பிளவுபடும் சூழலுக்கு தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த செயல்பாடுகள் நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களுக்கு எதிராக […]
ராஜஸ்தானில் இருந்து போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் […]
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான நிலையில், தற்போது அசாமில் போதுமான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் […]
இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இந்த நிலையில் மன்மோகன் சிங். வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் […]
நாளை மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியமைத்துள்ளது.ஆனால் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார்.இதற்காக வருகின்ற 13-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யுவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த முறை அசாம் மாநிலத்தில் […]