இன்று 7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி!

Modi

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.7,500 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். இன்று மகாராஷ்டிரா செல்லும் அவர், 86 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ‘நமோ ஷேத்காரி மகாசன்மன் நிதி யோஜனா’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் மூலம், 86 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஷீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் அவர், புதிய … Read more

37 வது தேசிய விளையாட்டுப் போட்டி..! நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!

PMModiNDA MeetDelhi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 26ம் தேதி) மகாராஷ்டிரா மற்றும் கோவாவுக்கு செல்கிறார். பிற்பகல் மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோயிலுக்குச் செல்லும் பிரதமர் மோடி, கோயிலில் பூஜை மற்றும் தரிசனம் செய்வார். பிறகு ஷீரடியில் உள்ள புதிய தரிசன வரிசை வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார். இந்த புதிய தரிசன வரிசை வளாகத்திற்கு கடந்த 2018 அக்டோபரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த தரிசன வரிசை வளாகம் பக்தர்களுக்கு … Read more

மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலில் தீ விபத்து! அடுத்தடுத்த 5 பெட்டிகள் எரிந்து நாசம்…

Fire train in Maharashtra

மகாராஷ்டிராவின் அகமத் நகரில் இருந்து அஸ்தி நகருக்கு சென்ற புறநகர் பயணிகள் ரயில் திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாராயண்தோஹ் மற்றும் அஹமத்நகர் பிரிவுக்கு இடையில் பிற்பகல் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடந்துள்ளது. அடுத்தடுத்த பெட்டிகளுக்கு பரவிய தீயால் 5 பெட்டிகள் மொத்தமாக எரிந்து நாசமானது. பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மாலை 4.10 மணியளவில் தீயை அணைத்தனர். நல்வாய்ப்பாக தீ பரவுவதற்கு முன்னர் பயணிகள் அனைவரும் … Read more

மகாராஷ்டிரா : கண்டெய்னர் லாரி மீது டெம்போ வேன் மோதி விபத்து.! 12 பேர் உயிரிழப்பு.!

Maharatra Accident Container Truck - Tempo Van

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் இருந்து சுமார் 350கிமீ தொலைவில் உள்ள சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் சம்ருத்தி பகுதி விரைவுச் சாலையில் இன்று (அக்டோபர் 15) அதிகாலையில் பயணிகளை ஏற்றி சென்ற டெம்போ வேன் ஒன்று கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள பாபா தீர்த்த யாத்திரை தலத்திற்கு ஆன்மீக பயணமாக 35 பேர், பயணிகளை ஏற்றிச்செல்லும் டெம்போ வேனில் … Read more

நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல்? ‘Y+’ பாதுகாப்பு வழங்கிய மகாராஷ்டிர அரசு!

shah rukh khan

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ மற்றும் ‘பதான்’ ஆகிய திரைப்படங்கள் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி உள்ளது. ஒரே ஆண்டில் ஒரு நடிகரின் 2 படங்கள் வெளியாகி இரண்டு படமும் 1,000 கோடி வசூல் செய்த சாதனையையும் அவர் படைத்தது இருக்கிறார். இந்நிலையில், மகாராஷ்டிரா போலீசாருக்கு வந்த தகவலின் படி ஷாருக்கானுக்கு  கொலைமிரட்டல் வந்துள்ளதாம். ஜவான், பதான் வெற்றியால் அவருக்கு இந்த கொலைமிரட்டல் வந்துள்ளதாக … Read more

48 மணி நேரத்தில் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையில் 31 பேர் உயிரிழப்பு.! காங்கிரஸ் கடும் கண்டனம்.!

maharashtra hospital deaths

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் உள்ள சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் (நேற்று) 24 மணி நேரத்தில் 12 பிறந்த குழந்தைகள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர். நேற்றிரவு மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து (இன்று) 48 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் உயிரிழந்த 31 பேரில் 15 குழந்தைகள் மற்றும் 16 பெரியவர்கள் என்று கூறப்படுகிறது. மருந்துகள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக குற்றச்சாட்டுகள் … Read more

கர்நாடகாவில் மாஸ்க் கட்டாயம்.! கேரளாவில் சோதனை அதிகரிப்பு.! தமிழகத்தில்… முன்னெச்சரிக்கை தீவிரம்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநில அரசுகள் துரிதப்படுத்தியுள்ளன. கொரோனா தாக்கம் தற்போது சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் அதிகரித்து வருவதால் கொரோனா முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் துவங்கியுள்ளன. இந்தியாவில் மத்திய அரசு மாநிலங்களுக்கு கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் போன்ற இடங்களில் முகக்கவசத்தை அணிய கட்டாய படுத்தியுள்ளது. அதே போல, கேரள அரசு கோவிட் … Read more

கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மணமகன்கள்.!

பெண் சிசு கொலைகளை தடுக்க வேண்டும். இதனால் இப்பொது எங்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என மகாராஷ்டிரா மாநிலத்தில் இளைஞர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். காலங்கள் மாறி, நவீன உலகம் நம் கையில் தவழ்ந்தாலும், இன்னும் சில பழமையான கொடூர சம்பவங்கள் போதிய விழிப்புணர்வின்றி தொடர்ந்து கொண்டு இருப்பது தான் இங்கு சோகமான ஒன்று. அப்படி நடைபெற்ற கொடூரம் தான் பெண் சிசு கொலை. இதன் காரணமாக தற்போது ஆண்கள் தங்களுக்கு சரியான துணை கிடைக்காமல் திண்டாடி … Read more

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை! இரு மாநில முதல்வர்கள் அமித் ஷா சந்திப்பு.!

மகாராஷ்டிரா-கர்நாடக எல்லை பிரச்சனை குறித்து இரு மாநில முதல்வர்களுடன் அமித் ஷா டெல்லியில் சந்திப்பு நடைபெற்றது. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையேயான பெலகாவி எல்லைப் பிரச்சனை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லியில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோருடன் விவாதித்தார். மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக இன்று நடைபெற்ற சந்திப்பு நேர்மறையான அணுகுமுறையில் நடைபெற்றது. இந்த எல்லைப்பிரச்சனைக்கான தீர்வு குறித்து … Read more

48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து! 2 பேர் உயிரிழப்பு! பலர் காயம்..

சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழப்பு. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்றிரவு இரவு 48 மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், 16 மற்றும் 17 வயதுடைய 10-ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மாணவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மாணவர்கள் சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை … Read more