காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் துவங்கியது. இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் ஸ்ரீபாத் நாயக் , கடந்த ஆண்டில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சா்வதேச எல்லை ஆகியவற்றின் வழியாக 138 முறை பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனா். பாதுகாப்புப் படையினரின் முயற்சியால் ஜம்மு-காஷ்மீரில் 157 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா் என கூறினார்.  

7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பள்ளிகள் திறப்பு.!

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் இன்று திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது. காஷ்மீருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மத்திய அரசு, காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதன் காரணமாக தொலைத்தொடர்பு மற்றும் இணையதள சேவைகள் செயல்படாமல் இருந்து வந்தது. மேலும் முன்னெச்சரிக்கையாக காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு காலவரையின்றி மூடப்பட்டன. இதையடுத்து பள்ளிகளை … Read more

வலியால் துடித்த பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று காப்பாற்றிய ராணுவ வீரர்கள்.!

காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது. கடும் பனி பொழிவை பொருட்படுத்தாமல் கர்ப்பிணி பெண்ணை 8 கி.மீ சுமந்து சென்று 2 உயிர்களை இராணுவ வீரர்கள் காப்பாற்றினார். காஷ்மீரில் தற்போது கடும் பனி பொழிந்து வருகிறது.இதனால் அங்கு  பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடும் பனி காரணமாக வாகன போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு பெண்ணிற்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அங்கு பனியால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட்டதால் அப்பெண்ணை  மருத்துவமனைக்கு … Read more

கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி பயங்கரவாதியாகவே நடத்தப்பட்டு விசாரணை நடைபெறும் – காவல்துறை .!

நவீத் பாபா, ரபி அகமது ஆகிய இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளை டி.எஸ்.பி தேவீந்தர் சிங் தப்பிக்க உதவி செய்தார். டி.எஸ்.பி தேவீந்தர் சிங்  கைது செய்யப்பட்டு காவல்துறை, ராணுவம், துணைராணுவம், உளவுப் பிரிவு போலீசார் என அனைவரும் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே நேரத்தில் … Read more

இந்திய எல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகளுடன் ஒரு டி.எஸ்.பி போலீஸ் அதிகாரி! ‘பகீர்’ பின்னணி!

காஷ்மீர் மாநில எல்லை பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ உள்ளதாக உளவுத்துறைக்கு எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்படி நடைபெற்ற சோதனையில் சந்தேகப்படும் படியாக 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவர் ஜனாதிபதி விருது வாங்கியவர் டி.எஸ்.பி அதிகாரி. இந்திய ராணுவத்திற்கு அண்மையில் காஷ்மீர் மாநில எல்லை பகுதியிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருப்பதாக எச்சரிக்கை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவம் மற்றும் போலீசார் எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அந்த சமயம் ஒரு … Read more

கடும் குளிரால் சிக்கி தவிக்கும் மக்கள்.! காஷ்மீரில் தால் ஏரி உறைந்தது.!

உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் இரவில் மட்டுமல்லாமல் பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவுகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை மைனஸ் 6.2 டிகிரி செல்சியசாக குறைந்தது. இதனால் அங்கு உள்ள  தால் ஏரியின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் உறைந்தது. இந்த ஆண்டு குளிர் என்பது மற்ற ஆண்டுகளை விட மிகவும் அதிகமாக உள்ளது. அதிலும் உத்தரபிரதேசம், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில்  இரவில் மட்டுமல்லாமல் பகல் … Read more

சில்லாய் கலான்! சில்லாய் குர்த்! சில்லாய் பச்சா! காஷ்மீரின் மூன்று நிலை குளிர்காலம் பற்றி தெரியுமா?!

காஷ்மீரில் தற்போது குளிர்காலம் நிலவி வரும் வெளியில் தற்போது கடும் குளிர் காலம் தொடங்கிவிட்டது.  இந்த கடும் குளிர் காலம் நிலவும் காலம் சில்லாய் கலான் என அழைக்கப்படுகிறது.  தற்போது நம்ம ஊரில் நிலவும் மார்கழி மாத குளிரையே நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காலையில் எழுந்துகொள்ள அலுத்துக்கொள்கிறோம். ஆனால் எப்போதும் குளிராகவே இருக்கும் வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதிலும், காஷ்மீர் பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. அதாவது, அதிக … Read more

#2019 RECAP: சிறப்பு அந்தஸ்து ரத்து.! காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசமாக பிரிப்பு .!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். காஷ்மீர் மறுவரையரை சட்டம் கடந்த அக்டோபர் 31 முதல் அமலுக்கு வந்தது . காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்தது.மேலும் காஷ்மீர்  மற்றும் லடாக் என்று இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .பின்னர் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். குடியரசு … Read more

பாகிஸ்தானின் அத்துமீறி தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி.!

பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இன்று  ஜம்மு மற்றும் காஷ்மீரில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து உள்ளது. ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் தங்தார் மற்றும் கன்ஜல்வான் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் இராணுவம் தரப்பில்  இன்று துப்பாக்கி … Read more

காஷ்மீர் பனிபொழிவில் சிக்கி தவித்து வரும் தமிழக லாரி ஓட்டுனர்கள்!

தற்போது பனிக்காலம் என்பதால் காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது.  சேலம், நாமக்கல் ஆகிய ஊர்களில் இருந்து காஷ்மீர் ஸ்ரீநகர், லாடக் பகுதிக்கு சென்ற லாரி ஓட்டுனர்கள் அங்கு கடும் பனிபொழிவில் சிக்கியுள்ளனர்.  தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால், வடமாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலகங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சேலம், நாமக்கல் பகுதியில் இருந்து சுமார் 300க்கும்  மேற்பட்ட ஓட்டுனர்கள்  பனிப்பொழிவில் சிக்கியுள்ளனர். அவர் காஷ்மீர், லடாக் … Read more