#BREAKING: சட்டப்படிப்பு! இவர்களும் தகுதியானவர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

SSLCக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றோரும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள். 10-ஆம் வகுப்புக்கு பின் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உரிய அறிவிப்பை வெளியிட தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், 12-ஆம் வகுப்பு படிக்காமல் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டு சட்டப்படிப்பு படிக்கச் தகுதியானவர்கள் என பார் … Read more

#Breaking: பொங்கல் தொகுப்பில் கரும்பு – வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக அரசு வழக்கறிஞரின் கோரிக்கையை ஏற்று வழக்கை விசாரணையை திங்கட்கிழமை ஒத்திவைத்து உயர்நீதிமன்றம். பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஜனவரி 2-ஆம் தேதி திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. கடலூரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்த வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டது. அரசு கொள்முதல் செய்யாததால் குறைந்த விலைக்கு கரும்புகளை விற்க … Read more

“உயர்கல்வி படிக்க இளநிலை சான்றுகளை வழங்க வேண்டும்“ – நீதிமன்றம் உத்தரவு

கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி கருத்து. உயர்கல்வி படிக்க இளநிலை MBBS சான்றுகளை வழங்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனருக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இளநிலை மருத்துவ சான்றை வழங்க கோரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இளநிலை கல்வி பயிலும் போது கொரோனா காலத்தில் மாணவர்கள் 2 ஆண்டுகள் அரசுக்கு சேவை செய்துள்ளனர் என நீதிபதி … Read more

சொத்து வரி உயர்வு செல்லும் – உயர்நீதிமன்றம்

சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நிராகரித்தது சென்னை உயர் நீதிமன்றம்.  சென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகளை நிராகரித்தது உயர் நீதிமன்றம். நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர்ந்த மனுதாரர்களுக்கு 2023 ஏப்ரல் முதல் சொத்து வரி உயர்வை அமல்படுத்த ஆணையிட்டுள்ளது. மேலும், சொத்து வரி தொடர்பான விளக்கங்களை மக்கள் … Read more

#BREAKING: நிதி இழப்பிற்கு அதிகாரிகளே பொறுப்பு – ஐகோர்ட் உத்தரவு

அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு. கடமையை செய்ய தவறுவதால் அரசுக்கு ஏற்படும் நிதி இழப்புக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளே பொறுப்பு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நிதி இழப்பை அரசு அதிகாரிகளிடமே வசூலிக்க வேண்டும் என இழப்பீடு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அறுவை சிகிச்சையில் கண்களை இழந்த திருவாரூர் விஜயகுமாரிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. … Read more

கள்ளக்குறிச்சி மாணவி தந்தை கோரிக்கை நிராகரிப்பு – ஐகோர்ட் உத்தரவு!

கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க அனுமதிக்கக் கோரிய தந்தை கோரிக்கை நிராகரிப்பு. கள்ளக்குறிச்சி மாணவி செல்போனை காவல்துறைக்கு பதில் வழக்கறிஞரிடம் ஒப்படைக்க உத்தரவிட இயலாது என்று மாணவியின் தந்தை ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர் உயர்நீதிமன்றம். செல்போனை காவல்துறையிடம் ஒப்படைக்க முடியாது, அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைக்க தயார் என தந்தை ராமலிங்கம் கூறியுள்ளார். மாணவியின் செல்போன் பெற்றுக்கொள்ள அரசு வழக்கறிஞர் மறுத்ததுடன், விசாரணை அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என திட்டவட்டமாக உள்ளதாக … Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – அரசு பதில் தர உத்தரவு

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணை. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பை குறிப்பிட்ட வளாகத்துக்குள் நடத்திக்கொள்ள பிறப்பித்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு குறித்து தமிழக அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரினால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளது. ஜனவரி 22, 29-ஆம் தேதிகளில் அணிவகுப்புக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க இருப்பதாக ஆர்எஸ்எஸ் … Read more

பள்ளிகளில் தமிழ் பாடம் – அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு. தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாய பாடமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் தமிழை கட்டாயமாக்கி 2006-ல் இயற்றிய சட்டத்தை முறையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, ராகவன் … Read more

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு!

சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்ய முடியாது என்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு. மாநகராட்சி பணிகளில் டெண்டர் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்திருந்தது. ஆனால், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான சொத்துக்குவிப்பு … Read more

#BREAKING: 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து – ஐகோர்ட் கிளை உத்தரவு

குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என நீதிபதிகள் குற்றச்சாட்டு. கொலை வழக்கில் கைதான திண்டுக்கல்லை சேர்ந்த 5 பேர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஸ்ரீதர், ராஜ்குமார், ராஜேஸ்வரன், கருணாகுமார், ரஞ்சித் ஆகியோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. குண்டர் தடுப்பு சட்டத்தை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர் என்றும் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளாமல் … Read more