வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!

uae rain

Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் … Read more

கனமழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம்…10 விமானங்கள் ரத்து.!

uae rain

UAE Rain: ஐக்கிய அரபு நாடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து செல்லும் 10 விமானங்கள் ரத்து செயப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், துபாய், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு அதிகப்படியான மழைபொழிவால், துபாய் நகரம் வெள்ளக்காடாய் மாறியுள்ளது. கடந்த 24 … Read more

பிரேசிலில் கடும் மழை வெள்ளம்..! 8 பேர் பலி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணுக்குள் புதைந்த சோகம்

பிரேசில் நாட்டின் Rio de Janeiro (state) மாகாணத்தில் கடுமையான மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 21ஆம் தேதி முதல் மாகாணத்தின் தெற்கு பகுதியில் கனமழை பெய்கிறது. அதன்படி 42.8 மில்லி மீட்டர் அளவுக்கு கன மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Rio de Janeiro (state) மாகாணத்தின் ஒரு பகுதியான Banguவில் 43.2 மில்லி மீட்டர் என்ற அளவில் மழையானது பதிவாகியுள்ளது. மழை வெள்ளம் காரணமாக … Read more

எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை!

rain update

வடதமிழக கடலோரப்பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது அதைப்போல தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று  இன்று பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, திண்டுக்கல்லில் 3 மணிநேரம் கனமழை கொட்டியது. மேலும், கொடைக்கானலில் 4 மணிநேரமாக கனமழை கொட்டுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் … Read more

திருவாரூர் : வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 வயது சிறுமி பலி!

death

தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 10 மணி முதல் தொடங்கிய மழை மாலை வரை விட்டு விட்டு பெய்து வந்தது. தொடர்மழை  காரணமாக மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்தது. அதே சமயம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கனமழை காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 9 வயது சிறுமி  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ராஜசேகர் … Read more

கனமழை எதிரொலி..! திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Tiruvalloor

மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில்,  சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 4 மாவட்டங்களில் நாளை கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்களும் நாளை விடுமுறை அறிவிக்க வேண்டும், என்றும் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா … Read more

சென்னையில் 50 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மழைப்பொழிவு – மாநகராட்சி ஆணையர்

Radhakrishnan

மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், மழை தெண்ணீர் தேங்கி தீவு போல் காட்சியளிக்கிறது. இந்த நிலையில் இன்று இரவு வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். நாளை பொதுவிடுமுறை..! தனியார் நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்..! அதனபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த … Read more

மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும்- ஆளுநர் அறிவுறுத்தல்

rn ravi

சென்னையில் பெரும்பாலான பகுதியில் மழை நீர் தேங்கி இருப்பதால், தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை நீடிக்கும் நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 5) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு தேவையான … Read more

மக்களே உஷார்..! அடுத்த 12 மணி நேரத்தில் இந்த 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு..!

Heavy rain in Tamilnadu

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..! மேலும், இந்த 4 மாவட்டங்களிலும், கல்வி நிறுவனங்கள், … Read more

நாளை 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

Tasmac

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நிர்வாக காரணங்களுக்காக சென்னை சுற்றுவட்டார மாவட்டங்களில் 2 நாட்கள் ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க தமிழக அரசு பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.!  கனமழை … Read more