இணைய மோசடி.. சட்டவிரோத நடவடிக்கைகள்… 70 லட்சம் மொபைல் நம்பர்கள் முடக்கம்.!

Govt suspends

டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார். இன்றைய நவீனகால உலகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் இணைய நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்தும் டிஜிட்டல் மையமாக இருப்பதால், பெரும்பாலானோர், நிதி பரிவர்த்தனைகளை, ஆன்லைன் மூலமே செய்ய விரும்புகிறார்கள். இதனால், அவர்களது … Read more

#JustNow: பஞ்சாப் அரசு விழாவில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலுக்கு தடை!

பஞ்சாபில் சுகாதாரத்துறை தொடர்பான அரசு விழாக்களில் நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து அம்மாநில அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாடு, சுற்றுசூழல் மாசு விளைவிக்கும் என்பது காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரத்துறை நிகழ்ச்சிகளில் பூங்கொத்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் – மத்திய மந்திரி நிதின்!

திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கட்டுமான சட்ட மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, நான் யார் மீதும் எந்த வித தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரும்பவில்லை. ஆனால் அரசின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் … Read more

மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து – அரசாணை வெளியீடு…!

மகளிர் குழுக்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன் ரத்து செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆணையில், 13.08.2021 அன்று தாக்கல் செய்த திருத்த வரவு செலவு திட்டம் 20212022 இல், “கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும். கடன் வழங்குவதற்கு ஏதுவாக இச்சங்கங்களுக்கு பல்வேறு கட்டங்களில் நிதிநிலை வழங்குவதற்கான நடைமுறையை அரசு வகுக்கும். இதற்காக 600 கோடி ரூபாய் … Read more

பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் – பஞ்சாப் முதல்வர்!

பஞ்சாபில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி உள்ளார்.  இந்நிலையில் நேற்று அவர் பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களை சந்தித்திருந்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹரியானா முதல் மந்திரியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். பஞ்சாபில் பாஜக … Read more

இன்று முதல் பெண்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு-தமிழக போக்குவரத்துத்துறை..!

தமிழக போக்குவரத்துத்துறை, இலவசமாக அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா பயணசீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை தொடங்கினார். அதன் படி மகளிர் அரசு போக்குவரத்துகழகத்திற்கு கீழ் உள்ள நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். அதிலிருந்து பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக … Read more

#BREAKING: அனைவருக்கும் நிவாரணம் வழங்க அரசுக்கு உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் அதிரடி..!

கொரோனாவால் உயிரிழக்கும் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட முடியாது. மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டும் என விரும்புகிறோம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவையை சார்ந்த பூமிராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்கு தொடுத்தார்கள். இறந்தவர்களின் உடல்கள் இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும், அவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோவை பகுதியில் கொரோனா பரவல் குறையாமல் … Read more

குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

குடிமராமத்து பணிகளில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலைகள் அனைத்திலும் நடைபெறக்கூடிய குடிமராமத்து பணிகளில் முழு விபரங்களையும் அந்தந்த மாவட்ட இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோரின் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு தரப்பில் இது குறித்த கேள்வி எழுப்பியுள்ளனர். குடிமராமத்து பணிகள் விபரங்களை அதிகாரிகள் உள்ளாட்சி அமைப்புகள் பார்க்கும் வகையில் … Read more

போக்குவரத்துக்கு விதி மீறல்கள் – வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது. வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் … Read more

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல – ஹர்திப் சிங் பூரி!

விமானங்களை இயக்குவது அரசின் பொறுப்பல்ல என்று விமான போக்குவரற்றது துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி கூறியுள்ளார். விமான போக்குவரத்துக்கு துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி ஆன்லைன் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஏர் இந்தியா விமானம் குறித்து பேசினார். அப்பொழுது அவர் ஏர் இந்தியா நிறுவனம் மத்திய அரசின் சொத்து என குறிப்பிட்டார். அதற்காக விமானங்களையும் விமான நிலையங்களையும் இயக்குவதற்கான சேவையை அரசு வழங்கமுடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடப்பாண்டு இறுதிக்குள் ஏர் இந்தியா தனியார் … Read more