கஜா புயலால் உயிரிழந்த கூலி தொழிலாளி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம்…!!

தஞ்சையில் கஜா புயலால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம்  நிவாரணம் வழங்கப்பட்டது. கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு ஆளான தஞ்சை மாவட்டம் சின்னாபின்னமாக மாறியது,இன்று வரை மக்கள் நிவாரணங்களை நம்பி இருக்கும் அவ நிலையை கஜா புயல் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.கஜா புயலின் கொடூர தாக்கத்தால் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதி மக்கள் தங்களின் முழு வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.அவர்களுக்கு பல பகுதியில் இருந்து நிவாரணப் பொருட்கள், நிதியுதவி என நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கஜா புயல் தாக்குதலால் சாந்தாகாடு கிராமத்தைச் … Read more

இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்…!அமைச்சர் தங்கமணி

கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் தங்கமணி  கூறுகையில், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் .புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்  என்று  அமைச்சர் … Read more

புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறாரா …!அமைச்சர் ஜெயக்குமார்

நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் உலகத்திலேயே எங்கேயும் விழுந்திருக்காது. நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.பரீட்சைக்கு திடீரென படிப்பவர்கள்தான் வெற்றி … Read more

கஜா புயலால் கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்…!எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன் ரத்து ..!

புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர்  கஜா புயல் எதிரொலியால் கடன்களை ரத்து செய்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.   அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர்  ஒருவர்  கடன்களை ரத்து செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள … Read more

கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம்…! அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  மின்கோபுரம் பற்றி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க அதிக இழப்பீடு தருவதாக அரசு கூறியுள்ளது. மாநில அரசுதான் மின்சார வாரியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல்  கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம். இதற்குமேல் மத்திய அரசு என்ன எதிர்ப்பாக்கின்றது என்று தெரியவில்லை … Read more

கஜா புயல் பாதிப்பு :2 வாரத்தில் நிவாரண நிதி அறிவிப்பு..!மத்திய அரசு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில்  தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தின்போது, மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான நிதி இருந்தும், தமிழகத்திற்கு … Read more

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2,700 கோடி வழங்க தமிழக அரசு வலியுறுத்தல்

கஜா புயல் பாதிப்புக்கு இடைக்கால நிவாரணமாக 2 ஆயிரத்து 700 கோடி வழங்க வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது…!அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர புதுக்கோட்டைக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த 7 மாவட்டங்களில் எந்த தொற்றுநோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும்   அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போதிய நிவாரண நிதி இருந்தும் தமிழகத்திற்கு தர மத்திய அரசு மறுப்பு – தமிழக அரசு குற்றச்சாட்டு…!!

மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு புகார் தெரிவித்துள்ளது. கஜா புயல் நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 357 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு … Read more

கஜா புயல் பாதிப்பு :டெல்லியில் இன்று நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை..!

நாடாளுமன்ற நிதிக்குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.   புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். … Read more