கஜா புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு …!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு மத்திய அரசு ரூ.1146 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார். கஜா புயல் பாதித்த பகுதிகளில் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்தியக் குழுவினர் நேரில் ஆய்வு செய்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்க … Read more

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது …!அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  உயரழுத்த மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 95 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.இன்னும் 10 முதல் 15 நாட்களில் முழுமையாக மின்சாரம் வழங்கப்படும் .அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும்…!அமைச்சர் தங்கமணி

கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் தங்கமணி  கூறுகையில், பொங்கல் முடிந்த பிறகு, கஜா புயலில் பணியாற்றிய 26 ஆயிரம் மின்வாரிய ஊழியர்களுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் .புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் 3 நாட்களில் விவசாயத்திற்கு முழுமையாக மின்சாரம் வழங்கப்படும். அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும்  என்று  அமைச்சர் … Read more

ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா கஜா புயல் சீரமைப்பு பணி கூடுதல் அதிகாரியாக நியமனம்…..!!!

கஜா புயல் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கஜா புயல் மறு கட்டுமானம், சீரமைப்பு, பேரிடரிலிருந்து மீளுதல் திட்டத்தின் கீழ் கூடுதல் திட்ட இயக்குனராக புதியதாக ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கஜா புயல் சீரமைப்பு பணியின் கூடுதல் அதிகாரியாக ஐஏஎஸ் ராஜகோபால் சங்கரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறாரா …!அமைச்சர் ஜெயக்குமார்

நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும். புயலால் 2 லட்சம் மின்கம்பங்கள் உலகத்திலேயே எங்கேயும் விழுந்திருக்காது. நாளைக்கே தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது.பரீட்சைக்கு திடீரென படிப்பவர்கள்தான் வெற்றி … Read more

கஜா புயலால் கடன்களை ரத்து செய்த டீக்கடைக்காரர்…!எட்டு ஆண்டுகளாக வாடிக்கையாளர்கள் வைத்திருந்த கடன் ரத்து ..!

புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர்  கஜா புயல் எதிரொலியால் கடன்களை ரத்து செய்துள்ளார். தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.   அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டையில் உள்ள டீக்கடை உரிமையாளர்  ஒருவர்  கடன்களை ரத்து செய்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள … Read more

கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம்…! அமைச்சர் தங்கமணி

கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் தங்கமணி கூறுகையில்,  மின்கோபுரம் பற்றி விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. விளைநிலங்களில் உயர்மின்கோபுரங்கள் அமைக்க அதிக இழப்பீடு தருவதாக அரசு கூறியுள்ளது. மாநில அரசுதான் மின்சார வாரியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கியுள்ளது. அதேபோல்  கஜா புயல் பாதிப்பு குறித்த முழுமையான தகவல்களை மத்திய அரசிடம் அளித்துவிட்டோம். இதற்குமேல் மத்திய அரசு என்ன எதிர்ப்பாக்கின்றது என்று தெரியவில்லை … Read more

கஜா புயல் பாதிப்பு :2 வாரத்தில் நிவாரண நிதி அறிவிப்பு..!மத்திய அரசு

கஜா புயல் பாதிப்பு தொடர்பாக தமிழகத்திற்கு மேலும் எவ்வளவு நிதி ஒதுக்கலாம் என்பதை 2 வாரத்தில் மத்திய அரசு அறிவிக்கும் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிடக்கோரி, வழக்கறிஞர் ஸ்டாலின் உள்பட பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில்  தமிழக அரசின் வழக்கறிஞர் வாதத்தின்போது, மத்திய அரசிடம், மாநில பேரிடர் நிவாரண நிதியில் போது மான நிதி இருந்தும், தமிழகத்திற்கு … Read more

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது…!அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் தர புதுக்கோட்டைக்கு முதற்கட்டமாக ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.புயல் பாதித்த 7 மாவட்டங்களில் எந்த தொற்றுநோய் பாதிப்பும் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு இதுவரை 46% மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும்   அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் …! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  தேர்தல் அறிவித்த உடன் அதிமுக சார்பில் மெகா கூட்டணி அமைக்கப்படும், முதலமைச்சர் பழனிசாமி அதற்கான வியூகம் அமைத்து வருகிறார்.கஜா புயல் நிவாரணம் கிடைக்கவில்லை என கூறுபவர்கள் அதிமுகவுக்கு எதிரானவர்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.