லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி!

அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா தொற்று உறுதி. அர்ஜென்டினாவை சேர்ந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அணியில் உள்ள மேலும் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக PSG கால்பந்து க்ளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள லியோனல் மெஸ்ஸி மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி வீட்டு தனிமையில் உள்ளதாக கூறப்படுகிறது. Tests carried out during the winter break and before the resumption of … Read more

பாதுகாப்பு இல்லை : ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம்…!

தலிபான்கள் ஆட்சியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆப்கான் மகளிர் கால்பந்து அணி பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளனர்.  ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள மக்கள் மற்றும் நாட்டிலிருந்த பிற நாட்டு மக்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வந்தனர். தற்போதும் ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பலரும் இதற்காக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள அந்நாட்டின் மகளிர் கால்பந்து அணியினர் தற்போது பாகிஸ்தானில் தஞ்சம் … Read more

கால்பந்து விளையாடும் தாய் மற்றும் குட்டி கரடி..!வைரல் வீடியோ..!

தாய் கரடி மற்றும் அதன் குட்டி இரண்டும் இணைந்து கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒடிசா மாநிலத்தில் உள்ள நப்ரங்பூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் தாய் மற்றும் அதன் குட்டி கரடி இணைந்து கால்பந்து விளையாடும் காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தின் உமர்கோட் பகுதியில் சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடி கொண்டிருந்துள்ளனர். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பந்து காட்டு பகுதிக்குள் சென்று விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த இரண்டு கரடிகள் பந்தை பார்த்தவுடன் … Read more

#viral video: பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடி..!கல்லூரி கால்பந்து ரசிகர்கள்..!

பூனையை காப்பாற்ற அமெரிக்க கொடியை பயன்படுத்திய கல்லூரி கால்பந்து ரசிகர்கள் செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சனிக்கிழமை அன்று நடந்த 22 ஆம் எண் மியாமி மற்றும் அப்பலாச்சியன் ஸ்டேட் இடையேயான கால்பந்து ஆட்டத்தின் போது அனைவராலும் கவரப்பட்ட கேட்ச் ஒன்று நடந்தது. அது மைதானத்தில் நிகழவில்லை மாறாக அங்குள்ள ஸ்டேடியத்தில் நிகழ்ந்தது. ஹார்ட் ராக் ஸ்டேடியத்தில் ஒரு பூனை ஒன்று நுழைந்துள்ளது. பின்னர் மேல் தளத்தின் முகப்பில் இருந்து அது கீழே விழும் நிலைக்கு … Read more

லியோனல் மெஸ்ஸி ஹாட்ரிக் கோல்;பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனை முறியடிப்பு..!

உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் பொலிவியாவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் பிரேசில் ஜாம்பவான் பெலேயின் சாதனையை லியோனல் மெஸ்ஸி முறியடித்துள்ளார். பார்சிலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்த நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி, சமீபத்தில் அந்த அணியில் இருந்து விலகி,பாரிஸ் செய்ண்ட் ஜெர்மன்(PSG) அணியில் இணைந்துள்ளார். அவருக்கான ஆண்டு ஊதியமாக சுமார் ரூ.200 கோடி பேசப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கிடையில்,அடுத்த் ஆண்டு நடைபெறவுள்ள FIFA கால்பந்து உலக … Read more

ரொனால்டோ புதிய உலக சாதனை…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

போர்ச்சுகல் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு இத்தாலியின் ஜூவண்டஸ் கால்பந்து அணியில் இணைந்து விளையாடி வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ,சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார். அதன்படி,யுனைடெட் அணியில் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாட ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. முன்னதாக,ரொனால்டோ 2003 ஆம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடினார்.அதன்பின்னர் கடந்த 2018 ஆம் … Read more

இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் மகன்..!

இந்திய அளவில் கால்பந்து போட்டிக்கு தேர்வான எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை சிறப்பாக செய்து வருபவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இவரது மகன் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், எம்.எல்.ஏ. மற்றும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மகன் இன்பநிதி ஸ்டாலின் தற்போது இந்திய அளவு கால்பந்து போட்டியில் தேர்வாகியுள்ளார். … Read more

மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம்..!#வைரல்..!

மெஸ்ஸி பிரி என்ற பீடி பாக்கெட்டில் லியோனல் மெஸ்ஸியின் புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசிலை தோற்கடித்து வெற்றியை பெற்றுள்ளார். இவர் ஆறு முறை பலூன் டி’ஆர் என்ற விருதை பெற்றவர். இந்த நட்சத்திர வீரருக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இதற்கு மத்தியில் மெஸ்ஸியின் புகைப்படத்துடன் ஒரு பீடி பாக்கெட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இது குறித்து … Read more

யூரோ 2020-இல் தங்க காலணியை வென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோ..!

யூரோ 2020 கால்பந்து தொடரில் போர்ச்சுகல் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்டன் பூட் என்ற தங்க காலணி விருதை வென்றுள்ளார். யூரோ 2020 கால்பந்து தொடரில் அதிக கோல்களை அடித்ததால் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு கோல்டன் பூட் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. யூரோ போட்டிகளில் முதன் முறையாக கோல்டன் பூட் விருதை ரொனால்டோ பெறுகிறார். இவர் யூரோ கால்பந்து தொடரில் ஒவ்வொரு தொடரிலும் ஒரு கோல் அடித்திருந்தார். மேலும், ஹங்கேரி மற்றும் பிரான்சுக்கு எதிராக … Read more

28 வருட காத்திருப்புக்குப் பிறகு பிரேசிலை வீழ்த்தி 15 வது கோபா கோப்பையை கைப்பற்றியது அர்ஜென்டினா

லியோனல் மெஸ்ஸியின் தலைமையிலான அர்ஜென்டினா அணி சனிக்கிழமையன்று  நடந்த கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தியாகோ சில்வா தலைமையிலான  பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோப்பையை பெற்றது. 22 வது நிமிடத்தில் ரோட்ரிகோ டி பால் 33 வயதான மூத்த ஸ்ட்ரைக்கர் ஏஞ்சல் டி மரியாவுக்கு நீண்ட பாஸ் கொடுக்க அதனை வெற்றி கோலாக மாற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 28 வருட காத்திருப்புக்குப் பிறகு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள … Read more