நாடாளுமன்றத் தேர்தல்… தேர்தல் பணிக்குழு அமைத்து அதிமுக அறிவிப்பு..!

EPS

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி மார்ச் மாதம் அறிவிக்கவாய்ப்புள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ஒவ்வொரு கட்சியும் கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த மற்றும் தேர்தல் அறிக்கைகள் தயாரிக்க குழு ஒன்றை அமைத்து வருகின்றனர். அந்த வகையில்  தொகுதி பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு என 4 குழுக்களை அமைத்து அதிமுக அறிவித்துள்ளது. இது … Read more

ஈபிஎஸ் மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

edappadi palaniswami

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கடந்த ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கை ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்பின்  கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் இபிஎஸ்-க்கு எதிரான அவதூறு … Read more

அதிமுக பொதுக்குழு வழக்கு… ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை நிராகரிப்பு..!

Supreme Court

சென்னையில் கடந்த 2022 -ம் ஆண்டு ஜூலை மாதம் 11 -ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒற்றைத் தலைமை கொண்டு வருவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து உயர் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் … Read more

எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம்…தேதி மாற்றம்..!

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 19-ஆம் தேதி அதாவது நாளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிமுக சார்பில் வழங்க உள்ளதாகவும் இந்த பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அதிமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவு..! இந்நிலையில், எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெறும் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து அதிமுக தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழக நிறுவனத் தலைவர் … Read more

தவழ்ந்து தவழ்ந்து செல்வதால் கால்வலி வருகிறது.! இபிஎஸ்-ஐ விமர்சித்த உதயநிதி.!

Edappadi Palanisamy - Udhayanidhi stalin

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishtha) வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.  இந்த விழாவில் பிரதமர் மோடி உட்பட தேசிய தலைவர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர். இந்த விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ராமர் கோயில் திறப்புக்கு எதிர்ப்பு இல்லை.. ஆனா இதில் உடன்பாடு இல்லை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த விழா … Read more

அதிமுக கொடிக்கம்ப விவகாரம்.! ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே மோதல்.! 

OPS - EPS ADMK Flag issue

இன்று ஜனவரி 17ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வரும் , அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாளை அதிமுக தொண்டர்கள் , ஓபிஎஸ் ஆதரவாளர்கள், டிடிவி.தினகரன், சசிகலா தரப்பினர் என பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் போது ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட உள்ளோம் – டிடிவி தினகரன் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அதிமுக கொடி … Read more

2024 தேர்தல் : வெற்றி வாய்ப்பு இருந்தால் எம்.பி சீட்.! இபிஎஸ் திட்டவட்டம்.!

ADMK Chief secretary Edappadi Palaniswami

2024 நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ அவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அதிமுக கொடி , சின்னம் பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையியீடு மனு தள்ளுபடியானது குறித்து கேட்கப்பட்ட போது, உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது … Read more

அதிமுக ஆலோசனை கூட்டம்.! நிர்வாகிகளுக்கு இபிஎஸ் விதித்த ‘முக்கிய’ கட்டளைகள்… 

ADMK Chief Secretary Edappadi Palaniswami

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் (எம்ஜிஆர் மாளிகை) இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..! இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பற்றி … Read more

கூட்டணி பற்றி கவலை வேண்டாம்- எடப்பாடி பழனிசாமி..!

Edapadi palanisamy

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் இன்று அதிமுக கட்சியை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் உடன் முக்கிய ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைமையில்  நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டமானது மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனை நடத்த இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில் ” மக்களவை தேர்தல் கூட்டணி குறித்த முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். தேர்தல் கூட்டணி முடிவானதும், அதிமுக வேட்பாளர்கள் இறுதி செய்யலாம். … Read more

என்ன ரகசியம் தெரியுமோ சொல்லுயா… ஓபிஎஸ்-க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்.! 

Edappadi Palaniswami - O Panneerselvam

நேற்று கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் கூறுகையில், நான் சில விஷயங்களை வெளிபடையாக கூறினால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறை சென்று விடுவார். கட்சிக்கு நான் உண்மையானாக இருந்ததன் காரணமாகவே ஜெயலலிதா … Read more