அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கு! தீர்ப்பு வழங்கும் தேதி அறிவிப்பு

ADMK: அதிமுக கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்தும் வழக்கின் தீர்ப்பு தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வரும் திங்கள்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. Read More – தருமபுரம் ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்..! தலைமறைவாக இருந்த பாஜக நிர்வாகி கைது இந்த நிலையில் மக்களவை தேர்தலின் போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் … Read more

தமிழக அரசை கண்டித்து நாளை அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

Edappadi Palaniswami: தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் நாளைய தினம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளைய போராட்டத்தோடு நிச்சயமாக … Read more

நாடாளுமன்ற தேர்தல்..! அதிமுக விருப்ப மனு பெறுவதற்கான அவகாசம் நீட்டிப்பு

ADMK: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அதிமுக விருப்ப மனுக்களை பெறுவதற்கான கால அவகாசம் மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. இதில் வலுவான தனி கூட்டணி அமைத்து போட்டியிடுவதில் அதிமுக உறுதியாக உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். Read More – மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் பாஜகவுக்கு பாடம் புகட்டுவர்! திருமாவளவன், செல்வப்பெருந்தகை கூட்டாக பேட்டி ஏற்கெனவே தேர்தல் அறிக்கை … Read more

மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

காவிரி நீர் விவகாரம் தொடர்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தனது தலைமையில் வரும் 29ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அதை தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில்,“காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட ‘பணி வரம்புக்கு’ அப்பாற்பட்டு, 28-ஆவது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது பற்றி … Read more

வெற்றி துரைசாமி மறைவு: ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இரங்கல்

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி ஆற்றில் மூழ்கிய சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ ஒருங்கிணைந்த தென் சென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அவர்களுடைய மகன் வெற்றி துரைசாமி அவர்கள் பிப்ரவரி 4-ஆம் தேதி … Read more

எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து..! ஆ.ராசாவை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவிப்பு

எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசியதாக ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வரும் 9ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறும் போது “அதிமுகவின் மறைந்த முன்னாள் … Read more

எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைவீர்களா? ஓ. பன்னீர்செல்வம் பதில்

சசிகலாவுடனான சந்திப்பு ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அறிஞர் அண்ணாவின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். அங்கு சசிகலாவும் வந்திருந்த நிலையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். பன்னீர்செல்வம் உடனான சந்திப்பு குறித்து சசிகலா கூறும்போது, “குடும்பத்தில் ஒருவர் என்ற முறையில் இந்த சந்திப்பு நடந்தது” என கூறினார். பின்னர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டியில், “அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு கிளம்பும் … Read more

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும்: ஓபிஎஸ்

இன்னும் சில நாட்களில் எடப்பாடி பழனிசாமி இல்லாத அதிமுக உருவாகும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் மீட்பு உரிமைக்குழு நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, ”அபகரிக்கப்பட்ட அதிமுகவை மீட்டு விரைவில் கோட்டையில் கொடி ஏற்றுவோம். இந்தியா கூட்டணி ஆண்டிகள் மடம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தான் வெற்றி பெறுவார் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக கட்சியை நாசப்படுத்திவிட்டார். அம்மா மக்கள் … Read more

எங்கே பார்த்தாலும் கொலை, கொள்ளை..! வியாபாரிகள் அச்சம்: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 72வது மாநில மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார். முன்னதாக மதுரை நாடார் மகாஜன சங்கம் எஸ் வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி வளாகத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மாலை அணிவித்தார். மாநாட்டில் அவர் பேசுகையில், “இன்றைய தினம் தமிழ்நாடே மதுரையை உற்று நோக்கியிருக்கிறது. நாடார் என்பவர்கள் உழைப்புக்கு பெயர் பெற்றவர்கள். சிறுகடையில் ஆரம்பித்து பெரிய நிறுவனம் தொடங்குவார்கள்.. … Read more

தமிழகத்தில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயற்சி: எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் மன்னராட்சி முறையை கொண்டு வர திமுக முயன்று வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தின் மல்லமூப்பம்பட்டியில் திமுக, பாமக, கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “திமுக ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்துப் பொருட்களின் விலையும் 40% வரை உயர்ந்துள்ளன. கொரோனா காலக்கட்டத்தில் கூட விலைவாசியை அதிமுக அரசு கட்டுக்குள் வைத்திருந்தது. கருணாநிதி அவருக்கு … Read more