Tag: #Delhi

டெல்லியில் குவிந்த பாஜக தலைவர்கள்.. விரைவில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!

BJP : கடந்த 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது போல, வரும் மக்களவை தேர்தலில் 3வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க பாஜக மூத்த தலைவர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். பிரதமர் மோடி நாடு முழுதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது. நேற்று இரவு, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் மக்களவை தேர்தல் குறித்த முக்கிய […]

#BJP 6 Min Read
Meeting in BJP Head quarters

இன்னும் ஒருசில நாட்களில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம்… டெல்லி அமைச்சர் பரப்பரப்பு பேட்டி!

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்னும் ஒரு சில நாட்களில் கைது செய்யப்படலாம் என்று அம்மாநில அமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவுமான சவுரப் பரத்வாஜ் கூறியிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் டெல்லி உட்பட சில மாநிலங்களில் ஆம் ஆத்மி – […]

#BJP 7 Min Read
Saurabh Bharadwaj

விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!

விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது ஹரியானா அரசு. குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 12ம் தேதி சலோ டெல்லி என்ற பேரணி போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு என்ற பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர். […]

#Delhi 7 Min Read
NSA

உயிரிழந்த விவசாயிக்கு ரூ.1 கோடி நிவாரணம்.. அரசு வேலை.! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு.!

வேளாண் விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்யும்படி நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியை நோக்கி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகள் டெல்லிக்குள் வருவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து,  கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும், ரப்பர் குண்டுகளால் சுட்டும் விவசாயிகளை தடுத்து வருகின்றனர். இதனால் , எல்லை பகுதிகளில் பெரும் பதற்ற நிலை நிலவிவருகிறது. ReadMore – […]

#Delhi 4 Min Read
Farmers Protest One Died

தீவிரமடையும் போராட்டம்… விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல், விவசாய கடன் தள்ளுபடி, மின்சாரம் திருத்த சட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் டெல்லி சலோ பேரணியை கடந்த வாரம் தொடங்கிய நிலையில், பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு பகுதியில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தி குவிந்து வருகின்றனர். இருப்பினும், […]

#Delhi 6 Min Read
National Security Act

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி!

டெல்லி அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை பேரம் நடத்துவதாகவும், அரசை கவிழ்க்க முயற்சிப்பதாகவும் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டி வந்தார். இதனால், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் தங்களுடன் தான் இருக்கிறார்கள் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய சூழல் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை கோருவதாக கெஜ்ரிவால் தெரிவித்தார். இதன் மூலம் அரவிந்த் […]

#AAP 6 Min Read
Arvind Kejriwal

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு… காணொளி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரானார் கெஜ்ரிவால்!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி செய்து வருவதாகவும், டெல்லியில் தனது ஆட்சியை கலைக்க பாஜக சதி திட்டம் தீட்டி வருவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வைத்தார். இந்த சூழல், டெல்லி சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார். டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் உள்ளன, பாஜக 8 எம்எல்ஏக்களை கொண்டுள்ளது. […]

#AAP 5 Min Read
Arvind Kejriwal

இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். அதன்படி, கூட்டணி மற்றும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் அறிவிக்க தயாரிப்பு, வேட்பளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி பாரத் மண்டபத்தில் […]

#BJP 4 Min Read
Bjp National Council Meet

டெல்லி விவசாயிகள் போராட்டம்.. பேச்சுவார்த்தையில் முக்கிய 3 கோரிக்கைகள்.! 

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்ற வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு ஓய்வூதியம், மின்சார திருத்த சட்டம் 2020ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் – அமித் ஷா டெல்லியில் அவசர ஆலோசனை! குறிப்பாக பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட வடமாநில விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் டெல்லியினை நோக்கி […]

#Delhi 5 Min Read
Delhi Farmers Protest 2024

திடீர் திருப்பம்! டெல்லியில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால்!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால். டெல்லியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில், தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்தார். மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 62 எம்எல்ஏக்கள் இருக்கும் பட்சத்திலும், சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அதன்படி, டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது நாளை விவாதம் நடைபெற உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை […]

#AAP 5 Min Read
Arvind Kejriwal

Today Live : டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி தீ விபத்து…

நேற்று மாலை மத்திய அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்றும் தொடர்கிறது. மேலும் நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கும் விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.   டெல்லி அலிபூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில், அமலாக்கத்துறை இன்று குற்றசாட்டை பதிவு செய்கிறது. இவ்வாறு  பல்வேறு தொடர் நிகழ்வுகளை இந்த நேரலையில் காணலாம்….

#Delhi 2 Min Read
Today Live 16 02 2024

பேச்சுவார்த்தை தோல்வி.. இணைய சேவை துண்டிப்பு.! தொடரும் விவசாயிகள் போராட்டம்…

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து இந்தியா விலக வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி, மின்சார திருத்த சட்டம் 2020-ஐ ரத்து செய்ய வேண்டும். உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். “டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..! சுமார் 200 விவசாய அமைப்பினர் இந்த போராட்டத்தில் […]

#Delhi 6 Min Read
Delhi Farmers Protest 2024

இரவு பகலாக தடுப்புகள் அமைப்பு… டெல்லியை நோக்கி முன்னேற விவசாயிகள் தீவிரம்!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200 விவசாய சங்கத்தினர் டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டனர். இந்த போராட்டத்துக்கு முன்பாகவே விவசாய சங்கத்தினருடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று டெல்லியை நோக்கி ‘சலோ டெல்லி’ பேரணியை விவசாயிகள் தொடங்கினர். கடந்த 2020ல் நடைபெற்ற மிகப்பெரிய தொடர் போராட்டம் போன்று இம்முறை மாறிவிட கூடாது என்பதால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முன்பு இல்லாத […]

#Delhi 6 Min Read
farmers protest

விவசாயிகள் போராட்டம்.! டெல்லி மைதானத்தில் சிறைச்சாலை.. அனுமதி மறுத்த மாநில அரசு.!

விவசாயிகள் இன்று டெல்லிக்கு பேரணி மேற்கொள்வதையொட்டி, பவானா மைதானத்தை சிறைச்சாலையாக மாற்றும் மத்திய அரசின் கோரிக்கையை டெல்லி அரசு நிராகரித்துள்ளது. விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரபிரதேச உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விசாயிகளில் டெல்லிக்கு பேரணியாக வர தொடங்கியுள்ளனர். மத்திய அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், டெல்லியை முற்றுகையிட்டு ‘சலோ டெல்லி’ பேரணியை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு […]

#Delhi 5 Min Read
delhi govt

உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி… விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், 144 உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி, இன்று காலை முதல் டெல்லியை […]

#Delhi 4 Min Read
fire tear gas

விவசாயிகளின் கோரிக்கைகள் என்னென்ன? போராட்டத்துக்கான காரணம் இதுதானா…

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், 144 உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பரில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு தொடர் போராட்டத்தை நடத்தினர். அப்போது மத்திய […]

#Delhi 7 Min Read
farmers protest

Today Live : டெல்லி விவசாயிகள் போராட்டம் முதல்.. தமிழக அரசியல் நகர்வுகள் வரை…

நாடு முழுதுவம் பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.  விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஹரியானா வழியாக சுமார் 2000 டிராக்டர்கள் உடன் விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் பிரதான அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி நிலவரம் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி உள்ளன. தொகுதி […]

#Delhi 2 Min Read
Today live 13 02 2014 Farmers Protest 2024

பேச்சுவார்த்தை தோல்வி.. திட்டமிட்டபடி விவசாயிகள் போராட்டம்.! உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி.!

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் டெல்லியை நோக்கி படையெடுத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடினர். வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்ட பிறகு அந்தப் போராட்டங்கள் கைவிடப்பட்டன. தற்போது அதே போல் மீண்டும் ஒரு மிகப்பெரிய போராட்டத்தை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர். இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.! விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் […]

#Delhi 5 Min Read
Delhi Farmer Protest 2024

அடுத்த ஒரு மாதத்திற்கு டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு அமல்!

விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை போராட்டம் நடைபெறும் என்று விவசாய சங்கங்களில் அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் விவசாயிகளின் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிவு வந்தது. இந்த நிலையில், அதுபோன்று மற்றொரு தொடர் போராட்டத்தை பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் […]

#Delhi 6 Min Read
section 144

20,000 விவசாயிகள் டெல்லியில் திரள திட்டம்… இன்று பேச்சுவார்த்தை நடத்தும் மத்திய அரசு!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் நாளை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கக்கோரி டெல்லியில் நாளை விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்படி, மத்திய அரசை கண்டித்து டெல்லியில் முற்றுகையிடும் போராட்டத்துக்காக சுமார் 20,000 விவசாயிகள் திரள திட்டமிட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், […]

#Delhi 6 Min Read
farmers protest delhi