பார்வையற்ற திருமூர்த்தியை படத்தில் பாட வைத்த டி இமான் ! எந்த படம் அது ?

நடிகர் ஜீவா நடிப்பில் ரத்தினா சிவா இயக்கத்தில் வெல்ஸ் பிலிம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் தான் “சீறு”. இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார்.  இதில் நவ்தீப், ரியா சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை இசையமைக்கும் டி இமான் அவர்கள் சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை கண்டு நான் அவரை படத்தில் பாட வைக்கபோவதாக அறிவித்திருந்தார். இதுக்குறித்த … Read more

பிரபலங்களிடம் பாட்டு பாடி அசத்திய திருமூர்த்தி…!

சமீபத்தில் கண் பார்வையற்ற திருமூர்த்தி என்பவர் விஸ்வாசம் படத்தில் வரும் ‘கண்ணான கண்ணே’ பாடலை பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட டி இமான், திருமூர்த்தியின் விவரங்கள் கிடைக்குமா என கோரிக்கை விடுத்தார். அடுத்த சில மணிநேரங்களில் அவருடைய தகவலைப் பெற்ற இமான், திருமூர்த்தியின் தகவல்களை கொடுத்தோருக்கு நன்றி கூறி விரைவில் அவரை படத்தில் பாட வைக்க உள்ளேன். திருமூர்த்திக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ‘நம்ம … Read more

தனது “விஸ்வாசம்” இசையை இந்தி படத்தின் டிரெய்லரில் கண்டு அதிர்ந்துபோன டி.இமான் !

பிரபல இந்தி இயக்குனர் மிலாப் ஜவேரி இயக்கத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் இணைந்து நடித்துள்ள “மர்ஜவான்” படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரின் இறுதியில் அஜித் நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம்” படத்தின் பின்னணி இசையை அப்படியே பயன்படுத்தி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இந்த டிரெய்லரில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில், இசையமைப்பாளர் இமான் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார். அதில், “தனது “விஸ்வாசம்” பின்னணி இசையை பயன்படுத்தியதற்கான எந்தவொரு முன்னறிவிப்பும் … Read more

மாஸ் ஹீரோ சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி! ‘நம்ம வீட்டு பிள்ளை’ முதல் போஸ்டர் மற்றும் சில தகவல்கள்!

சிவகார்த்திகேயன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் அடுத்ததாக ‘கடைக்குட்டி சிங்கம்’ இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் அதாவது ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தில் இமான் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி என பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முதலில் எங்க வீட்டு பிள்ளை என தலைப்பு பரிசீலனையில் இருந்த நிலையில், … Read more

முறுக்கு மீசையுடன் பட்டைய கிளப்பிய..! விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

அஜித் – சிவா கூட்டணியில் உருவாகிவரும் படம் ’விஸ்வாசம்’ இந்தப் படத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் வியாழக்கிழமை அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனவே அஜித் ரசிகர்கள் உற்சாகமானார்கள். இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே டிவிட்டரில் இந்திய அளவில் விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக் என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் ஆக்கிவிட்டார்கள். இந்நிலையில் தற்போது விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.  இதில் படம் வரும் பொங்களுக்கு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

விஸ்வாசம் விருவிரு..பர்ஸ்ட் லுக்….!! வெளியான தகவல்..!

அஜித் தற்போது `விஸ்வாசம்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் அதிரடி சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக திலீப் சுப்பராயன் தலைமையிலான சண்டை பயிற்சியாளர்கள் ஐதராபாத்தில் முகமாமிட்டுள்ளனர். சமீபத்தில் படத்தின் சென்டிமெண்ட் காட்சியும், கிராமியக் கலைஞர்கள் அடங்கிய பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பாடலில் அஜித்துடன் தேனி, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 300 கிராமிய மேடை கலைஞர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த பாடல் … Read more