காஷ்மீர் எல்லையில் தொடரும் பதற்றம்… 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

Jammu Kashmir Police

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில்  நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காஷ்மீர் பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கையில் 34 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவு வீரர்கள், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த என்கவுன்டர் … Read more

ராணுவ வீரர்களை துரத்தும் கொரோனா.! இதுவரை 359 பேருக்கு வைரஸ் பாதிப்பு.!

இன்று மட்டுமே 9 சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை 359 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 1.31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,867 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  இதில், நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் பிரிவில் முக்கிய பிரிவாக பணியாற்றும் சி.ஆர்.பி.எஃப் ராணுவ வீரர்களை கொரோனா பாதிப்பு தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிறது. இன்று மட்டுமே 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. … Read more

33 கோடியே 81 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு அத்யாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமைப்புசாரா தொழிலாளர்கள், தினக்கூலி வேலை பார்ப்பவர்கள் என பலரும் தங்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.  இதன் காரணமாக பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கள் … Read more

மத்திய படை வீரர்கள் இனி கண்டிப்பாக 2 வருடம் பேரிடர் மீட்புப்படையில் பணியாற்றியே ஆக வேண்டும்!

சென்னை பெருவெள்ளம், கேரள வெள்ளம், ஒரிசா வெள்ளம் போன்ற நாட்டில் பேரிடர் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பேரிடர் மீட்பு படையில் குறைவான வீரர்களே உள்ளதால் மீட்புப்பணியில் தாமதம் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் குழுவானது மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட மத்திய அரசானது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ சி.ஆர்.பி.ஏஃப், ரேபிட் ஃபோர்ஸ், எல்லை பாதுகாப்பு படையினர்,அதிவிரைவு படை போன்ற பிரிவுகளை சேர்ந்த மத்தியப்படை வீரர்கள் இனி … Read more