நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..!

case file

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. … Read more

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் – பிரேம் ஆனந்த் சின்ஹா

Firecrackers

தீபாவளி பண்டிகை அன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வேடிக்கை அனுமதி அளிக்கப்படும் என சுற்றுசூழல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுப்படி, தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள், தீபாவளி பண்டிகை அன்று 15000 காவல்துறையின் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பல்வேறு வழிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து அநாகரிகமாக … Read more

பேரியம் பட்டாசுகளுக்கு தடை.. அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்.! உச்சநீதிமன்றம்

Firecrackers

வரும் நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படவுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவின் டெல்லி-என்சிஆர் உள்ளிட்ட பல பகுதிகளில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளன. மேலும் சில மாநிலங்கள் பட்டாசுகள் வெடிப்பதற்கு நேர வரம்புகளை நிர்ணயித்துள்ளன. இதற்கிடையில், பேரியம் மற்றும் தடைசெய்யப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை பயன்படுத்துவதைத் தடை செய்யும் உத்தரவு, காற்று மாசுபாட்டால் தத்தளிக்கும் டெல்லி-என்சிஆர் … Read more

திருவாரூர்: வெடி கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து!

Fire Accident

வெடிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துகுலனத்தில் அந்த பகுதி சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள வெடிக்கடை ஒன்றில் விற்பனைக்கு வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து  வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட குடவாசல் சாலையில், அருகருகே 50க்கும் மேற்பட்ட வெடிக்கடைகள் உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், கடையில் … Read more

சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு – காவல்துறை

சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக மக்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால், தீபாவளியன்று, காலை மற்றும் மாலை 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் நேற்று, நேரக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 163 வழக்குகள் பதிவு … Read more

தீபாவளி : பட்டாசு வெடிப்பது குறித்து காவல்துறையின் அறிவுரை..!

தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையடுத்து, தீபாவளி அன்று 2மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை பெருநகர காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. அதன்படி, பட்டாசுகளை கொளுத்தி மேலே தூக்கி எறிந்து எறிந்து விளையாடக் கூடாது. பட்டாசுகளை வெடிக்கும் போது தகர டப்பாக்களை போட்டு வெடித்தால் டப்பா தூக்கி எறியப்படும்;இவ்வாறு செய்யக்கூடாது. குடிசை&மாடி … Read more

#BREAKING : பொதுமக்கள் கவனத்திற்கு…! தீபாவளிக்கு 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி ..!

தீபாவளியன்று காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி. தீபாவளி கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், தமிழகத்தில், பட்டாசு வெடிப்பதற்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி,  கடந்த ஆண்டை போல இந்தாண்டு காலை 7 முதல் 8 மணி மற்றும் மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி … Read more

ரயில்களில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை..!

ரயில்களில் பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.  பண்டிகை சீசன் நெருங்கி வருவதையடுத்து ரயில்களில் பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் தடை வித்துள்ளது. தடையை மீறி பட்டாசு அல்லது தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை கொண்டு சென்றால் மூன்று ஆண்டு சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயிலில் யாராவது பட்டாசு கொண்டு … Read more

#BREAKING: அதிர்ச்சி.. பட்டாசு ஆலை வெடிவிபத்து – 3 பேர் பலி!

கடலூர் எம்.புதூரில் நடந்த வெடி விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழப்பு. கடலூர் மாவட்டம் எம்.புதூரில் வாண வெடிக்கை பட்டாசு தயாரிக்கும் ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில், வெடிகள் வெடித்து சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலூர் தீயணைப்புத்துறையினர் சம்பா இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் – சாத்தூர் அருகே மஞ்சள் ஓடைபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரப்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்புசாமி, செந்தில்குமார் உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வெடிவிபத்தில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, சிவகாசி களத்தூரில் … Read more