மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா.? தீர்ப்பு தேதி அறிவிப்பு!

manish sisodia

Manish Sisodia: மணீஷ் சிசோடியா டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே.கவிதா ஆகியோர் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை கடந்த ஆண்டு பிப்.26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதேசமயம் … Read more

முன்னாள் முதல்வர் கேசிஆர் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ!

kavitha

Kavitha: திகார் சிறையில் உள்ள தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது சிபிஐ. டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த 15ம் தேதி தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மகளும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்சியுமான கே.கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த கைதை தொடர்ந்து கே.கவிதாவை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இதன்பின் அமலாக்கத்துறை காவல் முடிந்த நிலையில், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் … Read more

அகிலேஷ் யாதவுக்கு சம்மன் அனுப்பிய சிபிஐ..!

Akhilesh Yadav

Akhilesh Yadav:  சட்டவிரோத சுரங்க வழக்கில் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவுக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இன்று (புதன்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ கடந்த 2019 ஜனவரி 2-ஆம் தேதி இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது. READ MORE- பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! … Read more

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Jayalalitha

சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு விவகாரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விடக்கோரி தொடர்ந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறித்து தமிழக அரசு ஏற்கனவே ஆவணங்களை தாக்கல் செய்திருந்தது. அதன்படி, சொத்துகுவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் … Read more

வணிகத்துறை அதிகாரிகள் 3 பேரை கைது செய்த சிபிஐ..!

புதுச்சேரியில்  இயங்கி வரும் தனியார் மருந்து தொழிற்சாலையிடம் வணிகத்துறை அதிகாரிகள் ரூ.10 லட்சம்  லஞ்சம் கேட்டதாக சிபிஐயிடம்  புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து, 100 அடி சாலையில் உள்ள வணிக வரி வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட  சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்தில் ஜெயபாரதி என்பவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில் இன்று காலை முதல் வணிக வரி ஆணையர் முருகானந்தம்,  ஆனந்தன் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள்  விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்தனர். இந்நிலையில், … Read more

என் வாழ்கையில இதெல்லாம் நடக்கும்னு நான் நினைத்து கூட பார்க்கல.. விஷால் பரபரப்பு.!

Vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி திரையரங்களில் வெளியான திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் மீது புகார் கொடுத்திருந்தார். … Read more

டெல்லி கலால் கொள்கை வழக்கு.! மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு.!

Manish Sisodia

தேசிய தலைநகரான டெல்லியில் புதிய மதுபான கொள்கை சம்பந்தமாக அரசுக்கு பலகோடி ரூபாய் நிதி இழப்பீடு ஏற்பட்டதாகவும், சட்டவிரோத பணபரிவார்த்தனை நடைபெற்றதாகவும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவை, கடந்த பிப்ரவரி 26ம் தேதி 8 மணி நேர விசாரணைக்கு சிபிஐ கைது செய்தது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர், மார்ச் 9ம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து … Read more

நடிகர் விஷாலின் உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் இரண்டாம் நாள் விசாரணை!

mark antony - vishal

மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஹிந்தியில் மொழி மாற்றம் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக விஷாலின் உதவியாளர் ஹரி கிருஷ்ணனிடம், சிபிஐ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது, … Read more

நடிகர் விஷால் அளித்த லட்சம் புகார்! அதிரடியாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ!

vishal

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம்  15-ஆம் தேதி திரையரங்களில் வெளியாகி வெற்றிநடைபோட்டு கொண்டு இருக்கும் திரைப்படம் “மார்க் ஆண்டனி”. இந்த திரைப்படம் இந்தியில் தணிக்கை சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் அளித்து இருந்தார். இந்தியில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை மொழி மாற்றம் செய்த படத்துக்கு தணிக்கை சான்று வாங்க சென்றபோது ரூ.6.5 லட்சம் லஞ்சம் கேட்டதாக மெர்லின் மேனகா, ஜீஜா ராமதாஸ், ராஜன் உள்ளிட்டோர் … Read more

9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க ஒப்புதல் ரத்து – மத்திய அரசு

நாட்டில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதல் ரத்து என மத்திய அரசு தகவல். இந்தியாவில் இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரணை நடத்த வழங்கிய பொது ஒப்புதலை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. இதுவரை 9 மாநிலங்களில் சிபிஐ விசாரிக்க வழங்கிய பொது ஒப்புதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தும் இந்த பொது ஒப்புதலை … Read more