தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன் கொரோனாவால் உயிரிழந்தது திரைப்பட உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ரியான் ஸ்டீபன்(50) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று சனிக்கிழமை கோவாவில் இறந்ததாக தயாரிப்பாளருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். இவரது மறைவால் திரைப்பட துறையினர் பலரும் அவர்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இவர் மிகவும் திறமையானவர் என்றும் இவரை இழந்திருப்பது வருத்தத்தை அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர். ரியான் ஸ்டீபன் இந்தூ கி ஜவானி என்ற படத்தையும் தேவி என்ற குறும்படத்தையும் தயாரித்துள்ளார். இந்த […]
இந்தி, மராத்தி மற்றும் போஜ்புரி போன்ற மொழிகளில் வெளிவந்த பிரபல படங்களுக்கு இசையமைத்த மூத்த இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் தனது 78 ஆவது வயதில் இன்று (மே 22) நாக்பூரில் உயிரிழந்தார். பிரபல இசையமைப்பாளர் ராம் லக்ஷ்மன் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று சனிக்கிழமை (மே 22) நாக்பூரில் 78 வயதான ராம் லக்ஷ்மன் மாரடைப்பால் காலமானார். ராம் லக்ஷ்மன் விஜய் பாட்டீலில் பிறந்தார். இவரை தாதா கோண்ட்கே திரைப்பட துறையில் […]
தமிழ் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா தொற்றானது உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் 2,61,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், பல அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் என அனைவரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் தமிழில் வாரணம் ஆயிரம்,வெடி மற்றும் வேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். இதுகுறித்து நடிகை […]
பாலிவுட் நடிகை கங்கனா மீது ஜாவேத் அக்தர் அவர்கள் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கங்கனா தற்பொழுது அண்மை காலங்களாகவே பரபரப்பு உலகிலும் அடிக்கடி வலம் வருகிறார். அம்மாள், ஏதுனும் ஒரு புகாரில் அல்லது பிரச்சனைகளில் சிக்குவது தற்பொழுது இவருக்கு வழக்கமாகி விட்டது. அண்மையில் கூட மற்ற பிற பிரபல நடிகைகளுக்கு எதிராக இவர் பேசியிருந்தார். இந்நிலையில், நடிகர் ஹ்ருத்திக் ரோஷனை கங்கனா காதலிப்பதாக திரையுலகில் வதந்தி பரவிய […]
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை தீபிகா படுகோனே மேலாளர் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங் அவர்கள் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்தது தொடர்பாக பாலிவுட் திரையுலகில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவர் மரணம் தொடர்பான விசாரணையில் பாலிவுட் திரையுலகில் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாக தகவல் கசிந்தது. இதனை அடுத்து பல பாலிவுட் நடிகர்கள் இடமும் போதை பொருள் தடுப்பு போலீசார் சோதனை நடத்த ஆரம்பித்தனர். அதில் பலர் […]
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பா ? என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை. கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பை பாந்திராவில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர். தன் மகன் மரணத்தில் அவரது காதலி ரியா சக்கரவர்த்திக்கு […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் காலமானார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடன இயக்குனராக வலம் வந்தவர் சரோஜ் கான். இவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், மூச்சுத்திணறல் காரணமாக ஜூன்-20ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் இருவர், தாய் வீடு சிருங்காரம் போன்ற படங்களுக்கு நடனம் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்கள் நினைவாக அவரது குடும்பத்தினர் ஒரு விளையாட்டு அறக்கட்டளையை நிறுவியுள்ளனர். அதன் மூலம் இளம் வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க உள்ளனராம். கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி பாலிவுட் முன்னணி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர்கள் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இவரது மறைவு பாலிவுட் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரை உலகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது மறைந்த […]
நடிகர் ரிஷி கபூர் திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் ரிஷி கபூர் இந்தி திரையுலகின் பிரபலமான நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகன் ஆவார். இவரது தந்தை நடிப்பில் வெளியான, ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவருக்கு, கடந்த 2018-ம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதற்காக, நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில், கடந்த […]
நடிகர் அமீர்கான் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் , மேலும் தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார் இந்த நிலையில் நடிகர் அமீர்கானை குற்றவாளியென கூறி பாகிஸ்தான் ஒரு தனியார் டிவி சேனல் இவரின் புகைப்படத்தை வெளியிட்டது மேலும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த டிவி சேனல் ஒன்று நேற்று முன்தினம் 17 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான அமீர்கான் பிடிப்பட்டார் என்று கூறி குற்றவாளி அமீர்கானின் […]
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியில் பிரபல டிவி நடிகையான ஆஞ்சல் குரானா, டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது செல்லப்பிராணியாக லியோவுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மூன்று தெருநாய்கள், அவரது செல்லப்பிராணியான லியோவை கடிப்பதற்கு வந்துள்ளனர். உடனே, லியோவை தூக்கினார் […]
உலகம் முழுவதும் பல நாடுகளை இந்த கொரோனா வைரஸ் ஆக்கிரமித்து பல உயிர்களை வாங்கிய நிலையில், தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரும் இயக்குனரும் ஆகிய ஆண்ட்ரு ஜாக் பலியாகியுள்ளார். லார்ட் ஆஃப் தி ரிங்ஸ், பேட்மேன் பிகயின்ஸ், ஸ்டார்ஸ் வார்ஸ் ஆகிய பல படங்களில் நடித்தவரும் வசன உச்சரிப்பு பயிற்சியாளராக பணியாற்றியவரும் தான் ஆண்ட்ரூ. இந்நிலையில், வைரஸ் தாக்கி உடல் நலம் குன்றியிருந்த இவர் இங்கிலாந்தில் உள்ள செர்ட்ஸே நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். […]
கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகைகள் அரசியல்வாதிகள் சாதாரண மக்கள் வரை அனைவருமே வீட்டில்தான் தங்கி இருக்கின்றனர். இந்நிலையில், எப்பொழுதும் தனது இணையதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்திகா, தற்போது வித்தியாசமாக ஏதோ ஒரு ஸ்டைலில் ஆடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, […]
பிரபலமான கிரிக்கெட் வீரராகிய விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை தான் அனுஸ்கா ஷர்மா. இவர்கள் இருவருமே தங்களது அண்மை நிகழ்வுகளை இணையதள பக்கத்தில் வழக்கமாக பதிவிடுவார்கள். தற்போதும் மிகவும் கிண்டல் தனமாக ஜோடிகள் இருவரும் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படத்தை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram […]
உலகமுழுவதும் அனைத்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் 114 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், இந்த கொடூர வைரஸ் தாக்கத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக, இதனை இந்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்துள்ளது. தற்பொழுது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வரும் இந்த பெயர், தற்பொழுது சினிமாவிலும் வரவுள்ளது. அதாவது, “கொரோனா” எனும் பெயரை வைத்து தற்பொழுது ஹிந்தியில் “கொரோனா பியார் […]
நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் நடிகை மட்டுமல்லாது, உலக அழகியும் கூட. இவர் தமிழில் தமிழன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல இந்தி படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து ஹோலி பண்டிகை கொண்டாடிய புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். […]
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா. இவர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவர் பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்து உங்கள் பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்பதால் தான் நீங்களே படம் தயாரிக்கிறீர்களா? […]
நடிகை ராதிகா ஆப்தே பிரபலமான பாலிவுட் நடிகை. இவர் தமிழில் தோணி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பெங்காலி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதள பக்கத்தில், சிரிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது ஆசை.’ என தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பூ தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பல சீரியல் தொடர்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில்,இவர் சமீபத்தில் இந்தியில் ஓரின சேர்க்கையை ஆதரிக்கும் வண்ணம் வெளியான, ‘சுப் மங்கள் ஸ்யாதா சாவ்தன்’ திரைப்படத்தை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். இது வைரலாக பேசப்பட்ட நிலையில், ‘ஓரின சேர்க்கைக்கு உச்சநீதிமன்றமே ஆதரவு அளித்து உள்ளது. இந்நிலையில், ஓரினச்சேர்க்கையை ஆதரித்து வெளியான திரைப்படத்தை பாராட்டுவதில் என்ன தவறு உள்ளது.’ என […]
கவர்ச்சியான உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட சன்னி லியோன். நடிகை சன்னி லியோன் கவர்ச்சிக்கு பெயர் போனவர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். நடிகை சன்னி லியோன் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இவர் தனது இணைய பக்கத்தில் கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த […]