முதுகலை பொறியியல் கலந்தாய்வு… 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு 18% ஜிஎஸ்டி வரி கட்டாயம் என  அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. முதுகலை பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு கட்டணத்திற்கு 18% ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் M.E., M.Tech., M.Plan., M.Arch., படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்கும் பொதுப்பிரிவினருக்கு 18% GST வரியாக ரூ.54-ம், இதர பட்டியலின மாணவர்களுக்கு ரூ.27-ம் வசூலிக்கப்பட உள்ளது. M.E, M.Tech, M.Plan, M.Arch படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு வரும் … Read more

ஜனவரி 21 முதல் பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம்!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜனவரி 21 முதல் மார்ச் 2 வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என அறிவிப்பு. ஜனவரி 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம். நவம்பர் – டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. அதன்படி, M.E., M.Tech., M.Arch., மாணவர்களுக்கும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி இறுதி வரை தேர்வு நடைபெற … Read more

ராகிங் – பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு!

ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு. ராகிங்கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும். www.amanmovement.org என்ற இணையதளத்திலும் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. மேற்கண்ட இணையதளங்களில் பதிவு செய்து பல்கலைக்கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. அண்ணா … Read more

“ஏற்கனவே கல்விக் கடனில் தத்தளிக்கும் பெற்றோர்;18% ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள்”- ஓபிஎஸ் வலியுறுத்தல்!

சான்றிதழ்களுக்கான 18% ஜிஎஸ்டி வரி மாணவ, மாணவியரின் பெற்றோர்கள் தலையில் விழாதவாறு முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் கல்லூரிகள் தங்களிடம் பயிலும் மாணவர்களிடமிருந்து இடமாற்று சான்றிதழுக்கான கட்டணம், உண்மை தன்மை சரிபார்ப்பு சான்றிதழுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீது 18% ஜிஎஸ்டி வரியும், மதிப்பெண் பட்டியல், ஒட்டுமொத்த மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச் சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்வதற்கான கட்டணத்தில் 18% ஜிஎஸ்டி வரியும்,தொலைந்துபோன சான்றிதழ்களை … Read more

இன்று முதல் அண்ணா பல்.கழகத்தில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2, 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடி எழுத்துத் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் கேட்ட பொறியியல் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று செமஸ்டர் தேர்வுகள் டிச.13 ஆம் தேதிக்கு பதில் டிச.27 இல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.மேலும்,பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு,எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் முன்னதாக உறுதி அளித்திருந்தது. இந்நிலையில்,அண்ணா பல்கலைக்கழகத்தில் 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் … Read more

டிசம்பர் 13 முதல் பொறியியல் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் இன்டெர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாகவே நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் -பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை..!

உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி விடுமுறை தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற நாளை மற்றும் வரும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. நாளை கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் 9-ஆம் தேதி … Read more

அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு!

2002-03 முதல் பொறியியல் படிப்புகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாத செமஸ்டரில் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வாய்ப்பினை அறிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் www.coe1.annauniv.edu இணையதளத்தில் வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாக ரூ.5000 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

குட்நியூஸ்..20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு- அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு..!

2001-2002 முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் ஓர் முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது.அதாவது,2001-2002 கல்வியாண்டு (3 வது செமஸ்டர்) முதல் 20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் – டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி,இன்று முதல் https://coe1.annauniv.edu/home/ … Read more

கல்வி நிறுவனங்களுக்கான ஆண்டு தரவரிசை பட்டியல் வெளியீடு – சென்னை ஐஐடி முதலிடம்!

நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு. தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் … Read more