உதவி பேராசிரியர் வேலை தேடுபவரா நீங்கள் ? இதோ வந்துவிட்டது அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை ..!

Anna University Job (1)

Anna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உதவி பேராசிரியர் பணிக்கு 88 காலியிடங்கள் உள்ளன . இந்த உதவி பேராசிரியர் பணிக்கு நீங்கள் ஆன்லைனிலும் மற்றும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை : ஆஃப்லைனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளோர், தங்களது விண்ணப்பங்களில் விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களின் நகலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லனில் விண்ணப்பிப்போர் எல்லா ஆவணங்களையும் டிஜிட்டல் முறையில் எடுத்து வைத்து … Read more

நாளை முதல் டிச.9 வரை… அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

anna university

மிக்ஜாம் புயல் காரணமாக நாளை முதல் வரும் சனிக்கிழமை (டிச.09) வரை நடைபெற இருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுவடைந்து,  சென்னைக்கு கிழக்கே 90 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் புயல், மேலும் வலுப்பெற்று வடக்கு திசையில், தெற்கு ஆந்திரா பகுதிக்கு நகரக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. புயல் காரணமாக … Read more

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

Anna University: வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் (மிக்ஜாம்  Michaung) உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையே டிசம்பர் 5-ம் தேதி கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம்  (Michaung) புயல் கரையை கடக்கும்போது, தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும் என்றும்  நாளை மற்றும்  நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை … Read more

மாண்டஸ் புயல் – இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு : அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைப்பு.  மாண்டஸ் புயல் எதிரொலியால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், நேற்று மற்றும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த இறுதி செமஸ்டர் பொறியியல் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாபல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

பதக்கம் பெற்றதில் பெண்களே அதிகம்.! இதுதான் திராவிட மாடல்.! அமைச்சர் பொன்முடி பெருமிதம்.!

பதக்கம் வென்ற 283 பேரில் 117 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள் இருந்தனர். இதுதான் திராவிட மாடல். – அமைச்சர் பொன்முடி.  சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் உறுப்பு கல்லூரிகளின் 17வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு மாணவர் மாணவிகளுக்கு பதக்கங்களை வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய அமைச்சர், ‘ அந்த ஒரு காலத்தில் பெண்கள் உயர் கல்வி பயிலாத காலமாக … Read more

அண்ணா பல்கலைக்கழத்தில் 77 கோடி ரூபாய் மோசடி.! தணிக்கைகுழு அதிர்ச்சி அறிக்கை.!

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தலைமை கல்லூரியாக செயல்படும் சென்னை அண்ணா பல்கலைகழகமானது, கடந்த 2016ஆம் ஆண்டு மாணவர்களின் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவது, வெற்று சான்றிதழ் அச்சடிப்பது தொடர்பாக கொடுக்கப்பட்ட காண்டிராக்ட் விவகாரத்தில் சுமார் 77 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக தணிக்கை குழு அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.  கடந்த 2016ஆம் ஆண்டு, அண்ணா பல்கலைகழக கட்டுப்பாட்டின் கீழ் பயிலும் மாணவர்களின் சான்றிதழ்கள், தரவரிசை சான்றிதழ்கள் ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்குவதற்கு 2தனியார் நிறுவனங்களுடன் அண்ணா பல்கலை கழகம் 11 … Read more

மாணவர்களுக்கு ஒரு குட்நியூஸ்..! இன்று முதல் 5-ம் தேதி வரை தொடர் விடுமுறை…!

ஆயுதபூஜையை முன்னிட்டு பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது அண்ணா பல்கலைக்கழகம்.  சரஸ்வதி பூஜை, விஜயதசமியையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இன்று முதல் 5-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தொடர் விடுமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அக்.3-ம் தேதிக்கு பதில் 8-ம் தேதி வேலை நாளாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..!

வாக்குப்பதிவு நாளில் நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகளை தள்ளிவைப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,838 பதவிகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ஆம் தேதி நடைபெறும் எனவும்வேட்பு மனுத்தாக்கல் இன்று முதல்  பிப்ரவரி 04-ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் … Read more

#BREAKING: B.E, B.Tech செமஸ்டர் தேர்வு – அட்டவணையை வெளியிட்ட அண்ணா பல்கலைக்கழகம்!

ஆன்லைனில் நடைபெறும் செமஸ்டர் தேர்வு பிப்ரவரி 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் நிறைவடைகிறது என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு. B.E, B.Tech, மற்றும் B.Arch மாணவர்களுக்கான ஆன்லைன் செமஸ்டர் தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 1 முதல் மார்ச் முதல் வாரம் வரை காலை, மாலை என இருவேளைகளிலும் தேர்வுகள் நடைபெறும். பிப்ரவரி 1 முதல் தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், பாடவாரியாக அட்டவணையை வெளியிட்டுள்ளது. இறுதியாண்டு மாணவர்கள் தவிர்த்து, மற்ற … Read more

பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அண்ணா பல்கலைக்கழகம்!

2021-22ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். UG & PG பொறியியல் படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் & சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வழக்கம் போல் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களே அதிகளவில் தரவரிசையில் இடம்பிடித்துள்ளனர் என்று கூறப்படுகிறது.