திமுகவினர் அடாவடி தனத்தால் வரும் காலத்தில் ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் தடுப்பார்கள் என டிடிவி தினகரன் விமர்சனம். வருங்காலத்தில் திமுக ஆட்சிக்கு வராமல் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எடப்பாடி பழனிசாமியின் தவறான நடவடிக்கையால் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. பொய்யான வாக்குறுதி அளித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்துள்ளார். திமுக அமைச்சர்களின் ஆணவ பேச்சு தற்போது வெளிவந்து கொண்டிருக்கிறது. திமுகவை […]
மருத்துவத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புக்கு இதுவரை அரசாணை வெளியிடப்படவில்லை என டிடிவி தினகரன் குற்றசாட்டு. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ஆட்சியைப் பிடிப்பதற்காக ஸ்டாலின் தேர்தலுக்கு முன் அள்ளிவிட்ட வாக்குறுதிகள் ஏராளம். அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் சேவை செய்வதற்கான FMG தேர்வை எழுதி, தேர்ச்சி […]
தொடர் குண்டு வீச்சு சம்பம் தொடர்பாக காவல்துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல். தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்து வருகிறது. பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தவறியதாக எதிர்க்கட்சிகள் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், அமமுக […]
சென்னையில், பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, தாங்கள் கொண்டுவந்த பெரியார் புகைப்படத்தை இபிஎஸ் தரப்பினர் எடுத்து சென்றதால், அமமுகவினர் வைத்திருந்த பெரியார் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் ஓபிஎஸ். இன்று தந்தை பெரியார் அவர்களின் 144வது பிறந்தநாள் கொண்டாப்பட்டு வருகிறது. பல அரசியல் கட்சியினர் தங்கள் மரியாதையை பெரியார் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர். பலர் சமூக வலைத்தளம் மூலம் பெரியாரின் கருத்துக்களை பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர். அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னை அண்ணாசாலையில் […]
இன்னோர் கட்சியில் நடக்கும் கூத்து பற்றி நாம் கருத்து சொன்னால் நன்றாக இருக்காது. சிலரின் பதவி வெறி, சுயநலத்தால் இப்படி இருக்கிறது. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் – என டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். அதிமுக கட்சி விவகாரம் தான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக இருக்கிறது. இதில் இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்பு என இரு பிரிவினரும் மாறி மாறி நீதிமன்றம் சென்று, தீர்ப்பு, மேல்முறையீடு என சென்று சென்று கொண்டிருக்கின்றனர். […]
தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற்று டிஸ்சார்ஜ். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிர்வாகிகள், உறவினர்கள் இல்ல திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது, டி.டி.வி.தினகரனுக்கு உணவு ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக டிடிவி தினகரன் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு […]
அமமுகவில் கூடுதல் துணை பொதுச்செயலாளர், தலைமை நிலைய செயலாளர் நியமித்து டிடிவி தினகரன் அறிவிப்பு. இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணை பொதுச் செயலாளராக C.சண்முகவேலு (முன்னாள் அமைச்சர், திருப்பூர் புறநகர் மாவட்டக் கழக செயலாளர்), தலைமை நிலையச் செயலாளராக வீரபாண்டி S.K.செல்வம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், சேலம் மத்திய மாவட்டக் கழக செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள். இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த […]
மும்முறைத் தாண்டுதலில் முதன்முறையாக இந்தியாவுக்கு பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் செல்வ பிரபுவுக்கு வாழ்த்துக்கள். U20 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் செல்வ பிரபு, மும்முறைத் தாண்டுதலில் (triple jumper) வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். U20 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய டிரிபிள் ஜம்பர் என்ற வரலாற்று சாதனையும் படைத்தார். செல்வ பிரபு மும்முறைத் தாண்டுத போட்டியில் 16.15 மீட்டர் தூரம் பாய்ந்து வெள்ளிப் பதக்கத்தை […]
போராடும் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் பதிவு. தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். இதையடுத்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேசன் கடை ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய தமிழக அரசின் கூட்டுறவுத்துறை தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவுத்துறை வெளியிட்டிருந்த […]
திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சனம். திருவண்ணாமலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் மறுபடியும் மின்தடை நிகழ்ந்து வருகிறது. விடியல் ஆட்சியில் இருந்த தமிழகம்தான் உருவாகியுள்ளது. திமுகவினர் திருந்தவே இல்லை என ஓராண்டு திமுக ஆட்சி குறித்து விமரித்தார். அம்மா கொண்டுவந்த திட்டங்கள் எதுவும் இல்லை. தாலிக்கு தங்கம் திட்டம் இல்லை, அம்மா உணவகங்கள் மூடப்பட்டு […]
தியாகத்தின் மொத்த உருமாய்,வாழும் தெய்வமாய் நம் அனைவருக்கும் பிடித்தவருமான வார்த்தைகளால் ஒப்பிடமுடியாத அன்னையர்களின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் மே 8 ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில்,நாடு முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனால்,தங்களை பெற்ற அன்னையர்களுக்கு பிள்ளைகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அதே சமயம்,தாயாக சிறந்து விளங்கும் அனைவருக்கும் அரசியல் தலைவர்களும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,தியாகத்தின் திருவுருவமாக இருக்கும் அன்னையர்களுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அன்னையர் […]
இரட்டை இலை சின்னத்தை பெற சட்டவிரோதமாக லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று ஆஜரானார். இந்த வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், தினகரன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். அந்தவகையில் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஏற்கனவே, கடந்த 12-ஆம் தேதி ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்றும் அவரிடம் […]
தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் நம்பிக்கை. மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்டெடுப்போம் என்பதுதான் எங்களின் கோட்பாடு. தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் உண்மையான ஆட்சியை கொண்டு வருவோம். கடந்த காலங்களில் தேர்தல் வெற்றி, தோல்விகளை கடந்து வரும்காலத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து செயல்படுவோம். திமுக ஆட்சியில் தமிழ்நாடு இருண்ட […]
முழு உடல் பரிசோதனை மையத்திற்கு நீக்கப்பட்ட அம்மாவின் பெயரை மீண்டும் சூட்டிடவேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தல். இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கு வைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பெயரை நீக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அம்மா அவர்களின் பெயரிலான திட்டங்களை முடக்குவது அல்லது பெயர் […]
மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை எதிர்த்து அமமுக தொடர்ந்து போராடுகிறது என டிடிவி தினகரன் பேட்டி. செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்தது என குற்றசாட்டினார். எதையெல்லாம் செய்கிறேன் என்று சொன்னர்களாளோ அதற்கு எதிர்மறையாக ஆட்சி செய்கின்றனர். மக்களை பாதிக்கும் வகையில் சொத்து வரியை உயர்த்தியுள்ளது திமுக அரசு. எனவே, மக்கள் நன்மைக்காக தீய சக்தி திமுகவை […]
டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜர். இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்ததாக தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு டிடிவி தினகரன் ஆஜராகியுள்ளார். டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆஜரானார். ஏற்கனவே இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சம்மன் அனுப்பப்பட்டால் விசாரணைக்கு ஆஜராவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். அதன்படி, இரட்டை இலை வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை டிடிவிக்கு சம்மன் அனுப்பிய நிலையில், இன்று ஆஜராகியுள்ளார். இரட்டை […]
லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன். இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சுகேஷ் சந்திர சேகரை கைது செய்து விசாரித்து வரும் நிலையில், டிடிவி தினகரனை விசாரிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தினகரன், சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை […]
சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு திமுக அரசுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி,சொத்து வரி குறைந்தபட்சம் 25 % முதல் அதிகபட்சம் 150 % வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்: அந்த வகையில்,தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டரில், சட்டமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பேற்றதற்கு பரிசாக பொங்கல் […]
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடல்நலக்குறைவால் தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தார் என்பது தான் உண்மை. ஜெயலலிதாவின் மரணம் அரசியலாக்கப்பட்டுள்ளது. எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாவே எடுத்திருப்பார். தேவையில்லாமல் எங்கள் சித்தி மீது பழிபோட்டு எதோ பண்ணிப் பார்த்தார்கள். அது நடக்கவில்லை. இதனால் மக்கள் வரிப்பணம் தான் வீணாகியுள்ளது என்றும் குற்றசாட்டினார். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இன்று மீண்டும் தொடங்கியுள்ள […]
வி.கே சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். இரு தினங்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களுக்கு பயணம் சென்று வந்தது மிகவும் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் அளித்ததற்கு இறைவனுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேற்கொண்டது ஆன்மீக பயணமாக இருந்தாலும், தென் மாவட்ட மக்கள் என்னை அன்போடு அரவணைத்து எனக்கு மிகப்பெரிய வரவேற்பை அளித்து எல்லையற்ற மகிழ்ச்சியை கொடுத்து என்னை திக்கு முக்காட செய்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் எனது […]