ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை நேற்று தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில், ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள். தாலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றியதை அடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில்,அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானில் இருந்து வெளியேறிய நிலையில்,ஆப்கானிஸ்தானில் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை அழைத்து கொண்டு ஏர் இந்தியா விமானம் இன்று இரவே தாயகம் திரும்பும் என தகவல். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை தாயகம் அழைத்துவர ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. தலிபான்கள், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் படி, இன்று மாலை 7 முதல் 8 மணிக்குள் அந்த விமானம் டெல்லி வந்துவிடும் என கூறப்படுகிறது. விமானத்தில் அனைத்து இருக்கைகளையும் நிரப்பப்பட்டு, முடிந்தவரை எத்தனை […]
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை சுற்றி வளைத்ததை அடுத்து, தற்போது ஆட்சியை கைப்பற்றியது தலிபான் அமைப்பு. ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் அமெரிக்கப் படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து படிப்படியாக வெளியேறியது. இதனை பயன்படுத்தி கடந்த சில மாதங்களாக தலிபான்கள், ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான […]
கடைசியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்குளும் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பினர். ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துள்ளனர் என்று அங்கு வசிக்கு மக்கள் சர்வதேச ஊடகமான AFP-யில் தகவல் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து, அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. தலிபான்களின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கி வருகின்றனர். இதற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் கந்தஹார், […]
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வேதனையுடன் உலகத் தலைவர்களுக்குக் தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை. தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில், ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் நடத்தப்பட்டு ஹமீது கர்சாய் அதிபரானார். அமெரிக்கப் படைகள், நேட்டோ படைகள் இருந்ததால், தலிபான் தீவிரவாதிகள் அமைதியாக இருந்தனர். இதன்பின் அமெரி்க்க அதிபராக இருந்த ட்ரம்ப் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் படிப்படியாக விலகக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தாக்குதலில் […]
ஆப்கானிஸ்தான் மாகாண தலைநகர் மீது தலிபான் தாக்குதல் நடத்தியதை முறியடித்தது ஆப்கான் அரசு, இதில் 20 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, இன்று வடக்கு மாகாணமான சமங்கனின் தலைநகரான அய்பாக் மீது நடத்தப்பட்ட தாக்குதலை முறியடித்ததில் குறைந்தது 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர் என்று தெரிவித்துள்ளது. தலிபான் தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில் நகரத்தை பல திசைகளிலிருந்து தாக்கி, கட்டுப்பாட்டை எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதற்கு முன்னர் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை பைசாபாத் நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்த பகுதியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு இருந்துள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 254 தலிபான்கள் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டூழியம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம் தாலிபான்களை அடக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் ராணுவம் நேற்று ஒருநாள் நடத்திய தாக்குதலில் தலிபான் அமைப்பை சேர்ந்த 254 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 97 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு பாதுகாப்பு துறை […]
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தஹார் விமான நிலையத்தை 3 ராக்கெட்டுகள் தாக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு ஆப்கானிஸ்தானின் கந்தஹார் விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் தாக்கியதாகவும், இதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும், விமான நிலைய தலைவர் மசூத் பஷ்டூன் தெரிவித்துள்ளார். அதாவது, நேற்று இரவு விமான நிலையத்தில் மூன்று ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் 2 ராக்கெட்டுகள் ரன்வேயை தாக்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். இதன் காரணமாக, விமான நிலையத்தில் இருந்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. […]
ஆப்கானிஸ்தான் வெள்ளப்பெருக்கில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காம்திஷ் என்ற பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணத்தால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர வெள்ளத்தில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 150 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து நேற்று இரவில் ஏற்பட்ட இந்த கடுமையான வெள்ளத்தில் 80 வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவித்த மீட்பு படையினர், 80 வீடுகள் அடித்து […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் அமைந்துள்ள ஜனாதிபதி கட்டிட அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டுப் படைகள் திரும்பப் பெற்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய நகரங்களைக் கைப்பற்ற தலிபான்கள் அதிகளவில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதியை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய படைகள் செப்டம்பர் 11-க்குள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறயுள்ளனர். இந்நிலையில், காபூலின் பர்வான் பகுதியில் இருந்து ஒரு காரில் இருந்து மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த […]
ஆப்கானிஸ்தான் டி20 அணிக்கு கேப்டனாக ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உலகக் டி20 கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. அடுத்த இரு அணிகள் தகுதிச்சுற்று மூலம் இடம் பெறவுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக ரஷித்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ரஷித்கான் டி20 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பட்டியலில் அவர் 2வது இடத்தில் உள்ளார். மேலும் ஒரு ருநாள் மற்றும் டெஸ்ட் […]
ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து போடும் முகாம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் என்னும் நகரில் இன்று போலியோ தடுப்பூசி வழங்கக்கூடிய ஊழியர்கள் முகாம் அமைத்து போலியோ தடுப்பூசி செலுத்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் அங்கிருந்த 3 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், […]
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் 10 மாகாணத்தில் பாதுகாப்பு படையினருடன் மோதல் இந்த மோதலில் 7 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு அமைப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்ட வண்ணம் தான் இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தலிபான் தளபதி உட்பட 18 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்பொழுது பாக்லான் மாகாணத்தின் ஜூக்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல் […]
ஆப்கானிஸ்தானில் உள்ள அக்சா மாவட்டத்தில் அந்நாட்டின் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகளின் தளபதி உட்பட 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் அமைப்பினருக்கும் ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம். இருப்பினும் கடந்த ஒரு வார காலமாக அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கு மோதல் வலுத்துள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வடக்கு ஜவ்ஜ்ஜான் மாகாணத்தின் அக்சா மாவட்டத்தில் தலிபான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அந்நாட்டின் ராணுவத்தினருக்கு ரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிரவாதிகளை தேடும் […]
மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் பலி! பெண்கள் உட்பட குழந்தைகள் உயிரிழப்பு…. மேற்கு ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஆப்காணிஸ்தான் மேற்கு மாகாணமான ஹெராட்டின் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதில் குறைந்தது 12 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெராத் மாகாணத்தில் அட்ராஸ்கான் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை […]
ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி செய்தால் அதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் நாட்டிற்கும் இடையேயான இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வரும் நிலையில், அவ்வப்போது தலிபான் தீவிரவாதிகள் சிலர் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அண்மையில் […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் “குனார் மாகாணத்தில் உள்ள சாப்பா தாரா மாவட்டத்தில் நேற்று இரவு வெடித்ததில் ஐந்து போலீசார் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, எந்த பயங்கரவாதக் குழுவும் குண்டுவெடிப்புக்கான பொறுப்பை ஏற்கவில்லை.இன்று நங்கர்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத்தில் ஒரு போலீஸ் வாகனத்தை குறிவைத்து ஏற்பட்ட வெடிவிபத்தில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர்.காலையில் வெடிப்பு நடந்ததாக நங்கர்ஹார் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான்: காபூலின் பி.டி 6 இன் புல்-இ-சொக்தா என்ற பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை ஒரு வெடிப்பு நிகழ்ந்தது, இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு குறித்து அந்நாட்டு அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. தற்போது, காபூலில் சாமன்-இ-ஹூசூரி பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்த வெடிப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஆப்கானிஸ்தானில் இந்த வன்முறைகள் காணப்படுகிறது. தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தைகள் இருந்தபோதிலும் […]
ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உயிரிழப்பு. மேலும், 2 போலீசார் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில், இன்று அதிகாலை பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டதுடன், மேலும் 2 போலீசார் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. காலை 6:30 மணி அளவில் ஆயுதம் ஏந்திய போராளிகள் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போது, கிழக்கு பகுதியில் உள்ள புட்கார்ட் […]