ஆப்கானிஸ்தான் நாட்டில் அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 126 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.28 மணிக்கு 4.4 ரிக்டர் அளவிலும், இரண்டாவது நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் நள்ளிரவு 12.55-க்கு 4.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை, உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் […]
முதல் முறையாக டி20 தொடர் : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் 2024 ஜனவரியில் நடைபெறயுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மொஹாலியில் ஜனவரி 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி ஜனவரி 14-ம் தேதி இந்தூரில் […]
நடப்பு சீசனில் ஆப்கானிஸ்தான் உலகக்கோப்பையில் அதிக எதிர்பார்ப்புடன் நுழைந்தது. முதல் 2 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டன் ஜொனாதன் ட்ராட்டின் பயிற்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் அணி சில வெற்றிகளுடன் அணி மீண்டு வந்தது. ஆப்கானிஸ்தானின் எழுச்சி இங்கிலாந்துக்கு எதிராக 69 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சியூட்டும் வெற்றியுடன் தொடங்கியது. ஆனால் அடுத்த போட்டியில் கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் ரன்னர்-அப் அணியான நியூசிலாந்திற்கு எதிராக 179 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும், […]
கடந்த சில நாட்களுக்கு முன் அடுத்தடுத்த ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரம் நீங்குவதற்குள் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 6 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ரிக்டர் அளவுகளில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இன்றும் 6.1 என்ற அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன், 6 […]
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் 1,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் நேற்று அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் நேற்று மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும், மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மதியம் 12:42 மணிக்கு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நிலநடுக்கம் ஏற்பட்டபோது குடியிருப்பாளர்கள் மற்றும் […]
ஆப்கானிஸ்தானில் இன்று அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆப்கானிஸ்தானில் மதியம் 12:19 மணிக்கு ரிக்டர் அளவில் 5.6 ஆகவும், மதியம் 12:11 மணிக்கு ரிக்டர் அளவில் 6.1 ஆகவும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 6.2 ரிக்டர் அளவில் சமீபத்திய நிலநடுக்கம் மதியம் 12:42 மணிக்கு பதிவாகியுள்ளது. அதாவது, மதியம் 12.11 மணியளவில் ஆப்கானிஸ்தானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இன்று […]
2023 மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்வார்கள் என தகவல். 2023-ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 20 மில்லியன் மக்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளதால், வரும் ஆண்டிற்கான அந்நாட்டின் பொருளாதார மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் 4 மில்லியன் குழந்தைகள் மற்றும் பெண்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை அனுபவிப்பார்கள் என்றும் அங்கு […]
ஆப்கானிஸ்தான் டி20 அணியின் புதிய கேப்டனாக ரஷித் கான் நியமனம். ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக இருந்த முகமது நபிக்கு பதிலாக புதிய கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் ரஷித் கான் மிகப்பெரிய பெயர். உலகெங்கிலும் உள்ள அனைத்து தர போட்டிகளில் விளையாடுவதில் அவருக்கு மகத்தான அனுபவம் உள்ளது, இது அணியை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்ல உதவும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மிர்வைஸ் அஷ்ரஃப் […]
அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ள முடிவை திரும்பப் பெற வேண்டும் என ஐ.நா அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் நாட்டின் பொருளாதார அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தற்போது தாலிபான்கள் வசம் இருக்கிறது. அவர்கள் தான் அந்நாட்டை ஆண்டு வருகின்றனர். அவர்கள் அண்மையில், பெண்கள் உயர்கல்வி படிக்க தடை விதித்து இருந்தனர். இது உலக நாடுகள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது, புதியதாக, அரசு சாராத தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதித்துள்ளனர். […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டதற்கு தாலிபான் அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்த வார தொடக்கத்தில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு, காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் தலைமையிலான அரசு உத்தரவிட்டிருந்தனர். பல்கலைக்கழகங்களுக்கு வரும் அந்த பெண் மாணவர்கள், ஹிஜாப் குறித்த எந்த அறிவுறுத்தல்களையும் பின்பற்றவில்லை. மேலும் அவர்கள் திருமணத்திற்குச் செல்வது போல் ஆடை அணிந்து பல்கலைக்கழகங்களுக்கு வந்ததாக தெரிவித்தனர். இது குறித்து பேசிய தலிபான் உயர்கல்வி அமைச்சர் நேதா முகமது நதீம், பெண் மாணவர்கள் சரியான ஆடைக் […]
ஆப்கானிஸ்தானில் தடையை மீறி பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முயன்ற பெண்களை தலிபான்கள் தடுத்தி நிறுத்தினர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் படிக்க தலிபான்கள் அண்மையில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு நாடுகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் உயர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆப்கானிஸ்தான் பெண்களே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதில் தாலிபான்கள் விதித்த தடையை மீறி பெண்கள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முற்பட்டனர். ஆனால், பல்கலைக்கழக வாயிலிலேயே தாலிபான்கள் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். என […]
ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற கருத்தை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. – வெளியுறவு துறை. அண்மையில் ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பயில தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்தனர். இந்த அறிவிப்ப்புக்கு ஆப்கானிஸ்தானிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதே போல, மற்ற நாடுகளும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். தாலிபான்களின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் […]
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழக கல்விக்கு காலவரையற்ற தடை விதித்து தலிபான்கள் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சகம், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு இந்த உத்தரவிற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபூலில் சீன பிரஜைகள் அதிகம் வசிக்கும் ஹோட்டல் மீது கடுமையான தாக்குதல்கள். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் அருகே துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனர்கள் அதிகம் சென்று வரும் ஹோட்டலை குறிவைத்து கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. காபூலில் உள்ள சீன தேசிய ஹோட்டலில் இன்று நடந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாதி ஒருவர் காயமடைந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. காபூல் நகரின் ஷாஹ்ரே நாவ் பகுதியில் உள்ள சீனர்களின் விருந்தினர் மாளிகை மீது […]
ஆப்கானிஸ்தானில் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்.. ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் ஹைரதன் ஆயில் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தின் தலைநகரான மசார்-இ-ஷெரீப் நகரின் சாலையோரம் உள்ள ஒரு வண்டிக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, ஹைரதன் ஆயில் நிறுவன அரசு ஊழியர்களை ஏற்றி கொண்டு பேருந்து அப்பகுதியை கடந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதில், பேருந்து கடுமையாக சேதமடைந்தது. […]
காபூல் கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்துள்ளனர் என்று காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடக நிறுவனமான டோலோ நியூஸ் தனது ட்விட்டரில், காஜ் கல்வி மையத்தில் நடந்த தாக்குதலில் குறைந்தது […]
ஆப்கான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நடந்துள்ளது. அதில் இரண்டு ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று காலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பானது காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முன்னே நிகழ்ந்துள்ளது. திங்கள் கிழமை காலை என்பதால் அங்கு கணிசமான ஆட்கள் இருந்துள்ளனர். ரஷ்யா தூதரகத்தில் இருந்த 2 ரஷ்யர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளானர். அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் இந்த தாக்குதலை நடாத்தியுள்ளான் என முதற்கட்ட […]
காபூலில் மசூதிக்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், 18 படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மசூதிக்கு அருகே ஒரு வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. […]
ஆப்கானிஸ்தானில் டி20 தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் போது தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஷ்பஜீசா கிரிக்கெட் லீக் எனும் உள்ளூர் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்றது. அப்போது, பேண்ட்-இ-அமிர் டிராகன்ஸ் மற்றும் பாமிர் சல்மி எனும் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. அந்த சமயம், திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது . திடீரென மைதானத்தில் குண்டு வெடித்தது உலக நாடுகளில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அந்த போட்டியின் போது, […]
ஆப்கானிஸ்தானின் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1,100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கிழக்கு ஆப்கானிஸ்தான் பாக்டிகா மாகாணத்தில் கடந்த புதன் கிழமை அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்டிலிருந்து 44 கி.மீ தொலைவில் 51 கி.மீ ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் 255 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்ட நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட […]