ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக, வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் 10 பேர் கருகி உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து காலை 9:20 மணியளவில், தொழிற்சாலையில் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கொடூரமான சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, அவருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தின்ஷா பர்திவாலா, பண்ட் கேட்ட முதல் கேள்வியைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டார். இது குறித்து பேசிய அவர் “மருத்துவமனை வந்தவுடன் ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வியே, ‘என்னால் மீண்டும் விளையாட முடியுமா?’ என்பதுதான்,” […]
சென்னை : சென்னை பெரம்பூரில் இருசக்கர வாகனத்தில் தாயுடன் பள்ளிக்கு சென்ற போது தண்ணீர் லாரி மோதி சௌமியா என்கிற 10 வயது சிறுமி நேற்றைய தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், காவல்துறையின் மீது விமர்சனங்களையும் எழுப்பியது. மேலும் இந்த விபத்து, சென்னையில் கனரக வாகனங்கள் பள்ளி நேரங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவதால் ஏற்படும் ஆபத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், சென்னையில் விபத்தின் மூலம் உயிரிழப்பை […]
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன் மேடு பகுதியைச் சேர்ந்த 10 வயது பள்ளி மாணவி சௌமியா உயிரிழந்த சம்பவம் இன்னும் தீராத ஒரு சோகமான விஷயமாக இருந்து வருகிறது. சௌமியாவை அவரது தாயார் யாமினி இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது, பள்ளி அருகே பொதுப்பாதையில் வந்த கனரக லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் சௌமியா தூக்கி வீசப்பட்டு சம்பவ […]
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது மவுண்ட்-பூனமல்லி சாலையில் உள்ள L&T தலைமை அலுவலகம் அருகே, இரண்டு I-கிர்டர்கள் (ஒவ்வொன்றும் 75 டன் எடை கொண்டவை) திடீரென இடிந்து விழுந்தன.இந்த விபத்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சி. ரமேஷ் (43), பில்லிங் மெஷின் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணிபுரிந்தவர், தனது இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, கான்கிரீட் கிர்டர்களுக்கு அடியில் சிக்கி உயிரிழந்தார். இவருக்கு மனைவி […]
திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக வேகம் அல்லது ஓட்டுநரின் அஜாக்கிரதையால் ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், சாலையோரமாக நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கண்டைனர் லாரி விழுந்ததில் கண்டனர் லாரிக்கு அடியில் சிக்கி உள்ள பெண்களைமீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. விபத்து நிகழ்ந்தவுடன், உள்ளூர் காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியின் […]
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வடகரை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த பட்டாசு வெடி விபத்தில் காயமடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடகரையில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு கட்டடம் இடிந்து தரைமட்டமானது. வேதிப்பொருள் கலவையில் உராய்வு ஏற்பட்டதால் […]
தர்மபுரி : பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ சென்ற கார் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவரது தந்தை உயிரிழந்ததாகவும், அவரது தாய் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தருமபுரி – பாலக்கோடு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடன் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் நிகழ்விடத்திலேயே அவரது தந்தை சிபி சாக்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த நடிகர் சைன் சாக்கோ மற்றும் அவரது தாய் படுகாயத்துடன் மருத்துவக் […]
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழிப் பேத்தியான டாக்டர் திவ்யபிரியா (வயது 28) உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து மே 22, 2025 அன்று மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில், கல்லாறு பத்தடி பாலம் அருகே நடந்தது. சீனிவாசனின் பேத்தி திவ்யபிரியா, பல் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர். இவர் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தனது காரில் சென்று […]
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக (TNSTC) பேருந்தும், தனியார் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். செங்கிப்பட்டி பாலத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்தப் பகுதியில் ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே […]
சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. குவாரியில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் 450 அடி ஆழமுள்ள இந்த குவாரியில் திடீரென பெரிய அளவில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்தன. பாறைகளை அகற்றுவதற்காக பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், இந்த சரிவு […]
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். வேனில் 8 பேர் சென்ற நிலையில், இதில் 3 பேர் விபத்து நடந்தவுடன் வேனில் இருந்து வெளியேறி பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் 5 பேர் வேனுடன் கிணற்றுக்குள் மூழ்கினர். அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, விபத்து குறித்து […]
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து ஒன்று சாலையின் நடு எல்லையை தாண்டி எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில், சிறுவன், சிறுமி, வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து, பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மற்றும் ஒரு […]
சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில் நடித்து கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் கார் பந்தயங்களிலும் ஈடுபட்டு வருகிறார். கார் பந்தயத்தில் ஈடுபட்ட அவர் அடிக்கடி விபத்தில் சிக்குவதும் உண்டு. உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்தப் பயிற்சியின்போது, அவர் ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பாதையில் […]
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஏற்பட்ட ஒரு துயரமான சாலை விபத்தில், சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் ஆம்புலன்ஸ் மோதியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, கரணம்பேட்டை பகுதியில் உள்ள திருப்பூர்-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நிகழ்ந்ததாக தெரிகிறது. ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்ட நோயாளி முருகன் – கல்யாணி என்ற தம்பதியினர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தனர். மேலும், ஆம்புலன்ஸ் […]
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம், கூரை இடிந்து விழுந்ததில், இதுவரை 184 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் சிக்கி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த இரவு விடுதியில் இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். […]
டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். கூரை இடிந்து விழும் முன்னர், அந்த விடுதியில் Rubby Pérez’s என்பவரது இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதையும் காணொளியில் படம்பிடித்து கொண்டிருந்தனர். கூரை திடீரென இடிந்து விழுந்ததால் கொண்டாட்டமே […]
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2 லோகோ பைலட்டுகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிகாலை 3.30 மணிக்கு விபத்து ஏற்பட்டு ரயில்கள் தீப்பிடித்ததால் 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தாக கூறப்படுகிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மின்சார உற்பத்தி […]
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, அரசுப் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கே.ஜி.கண்டிகை என்ற பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில், படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர், அருகிலுள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள போலீசார், விபத்திற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், டிப்பர் லாரி அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் விபத்திற்கு […]
குளித்தலை : கரூர் மாவட்டம், குளித்தலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மற்றும் ஓட்டுநர் ஆகிய 5 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தின்போது, அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய கார். ஒரத்தநாடு கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலுக்கு சென்ற போது, இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது. காரில் வந்தவர்கள் கோவை […]