நிர்பயாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுகை.! நீதிமன்றத்தில் பரபரப்பு.!

  • டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றம் வளாகத்தில் நிர்பயாவின் தாயார், தனது

By Fahad | Published: Apr 02 2020 07:01 AM

  • டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றம் வளாகத்தில் நிர்பயாவின் தாயார், தனது மகளின் இறப்பின் நீதிக்காக, தான் 7 ஆண்டுகளாக போராடிக் வருவதாகவும், குற்றவாளிகள் நடத்தும் நாடகத்தை, நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும், எனவும் கூறி, கண்ணீர் விட்டு அழுகை.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொடுமை செய்து செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்த நிலையில், அவர்களின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை நிர்ணயிப்பது தொடர்பாக திகார் சிறை நிர்வாகம், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, குற்றவாளி பவன்குமாருக்கு சட்ட உதவி செய்ய, வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என நீதிபதி தெரிவித்தார். இதற்கு நிர்பயாவின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். திகார் சிறை நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது போல் புதிய தண்டனை நிறைவேற்ற தேதியை அறிவியுங்கள் என்றும், திகார் சிறை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி, ஒவ்வொரு குற்றவாளிக்கும், தனது இறுதி மூச்சு வரை சட்ட உதவி கிடைக்க வேண்டும் என்றும், இதைத்தொடர்ந்து டெல்லி சட்ட உதவி மையத்தில் உள்ள ஏதாவது ஒரு வழக்கறிஞரை பவன் சார்பில் வாதாட, அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை இன்று (வியாழக்கிழமை) பாட்டியாலா நீதிமன்றம் ஒத்திவைத்தது. இதனிடையே, நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த நிர்பயாவின் தாயார், அதில் தனது மகளின் இறப்பின் நீதிக்காக, தான் 7 ஆண்டுகளாக போராடிக் வருவதாகவும், குற்றவாளிகள் நடத்தும் நாடகத்தை, நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும், எனவும் கூறி, கண்ணீர் விட்டு அழுதார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

More News From nirbaya mother