உலகம்

மீத்தேன் கண்காணிப்பு செயற்கைக் கோள் திடீர் மாயம்! நடந்தது என்ன?

பூமியை வெப்பமயமாக்கும் மீத்தேன் வாயு வெளியேற்றத்தைக் கண்காணிக்க அனுப்பப்பட்ட 88 மில்லியன் டாலர் மதிப்புள்ள மீத்தேன்SAT செயற்கைக் கோள், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக (ஜூன் 20, 2025 முதல்) தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள், எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தித் துறைகளில் இருந்து வெளியாகும் மீத்தேன் வாயுவைக் கண்காணிக்கவும், உலகளாவிய பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவவும் 2024 மார்ச் மாதம் ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மீத்தேன்SAT செயற்கைக் கோள், […]

earth 7 Min Read
MethaneSat

இனிமே வரிகட்டணும்… ஜப்பான், தென்கொரியப் 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், இரு நாடுகளின் தலைவர்களுக்கு எழுதிய கடிதங்களைப் பகிர்ந்து தெரிவித்தார். இந்த வரி விதிப்பு, அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட “விடுதலை நாள்” வரி முயற்சியின் ஒரு பகுதியாகும். ஆட்டோமொபைல், […]

#Japan 7 Min Read
Trump to put 25% tariffs

பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு பூனையான சியான்பாவை பராமரிக்கும் நபருக்கு தனது முழு சொத்தையும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்பு உட்பட, அளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி  South China Morning Post இதழில் வெளியாகி உலக அளவில் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியுள்ளது. குழந்தைகள் இல்லாத லாங், தனது மனைவி இறந்து பத்து ஆண்டுகளுக்கு […]

#China 6 Min Read
82-year old Chinese man

எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து கடுமையாக விமர்சித்து, அதை “முட்டாள்தனமானது” என்று கூறினார். ஜூலை 7, 2025 அன்றுதனது Truth Social தளத்தில் பதிவிட்ட அவருடைய நீண்ட பதிவில், மஸ்க்கின் இந்த முயற்சி அமெரிக்காவில் நிலவும் இரு கட்சி அமைப்பை குழப்புவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்த விமர்சனம், மஸ்க்குடனான அவரது பொது மோதலின் ஒரு பகுதியாக வந்துள்ளது. […]

America Party 7 Min Read
musk vs trump fight

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் (12,078.93 டாலர்) கிரெடிட் கார்டு கடனை அடைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்த சாதனை, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிதி மேலாண்மையில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஜெனிபர், தனது செலவுகளைத் திட்டமிடுவதற்கும், பணத்தை மிச்சப்படுத்துவதற்கும் ChatGPT-யின் அன்றாட ஆலோசனைகளைப் பயன்படுத்தினார். ஜெனிபர் ஆலன், ஒரு முறை […]

#US 6 Min Read
chatgpt

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ”அமெரிக்கா பார்ட்டி” என்ற புதிய அரசியல் கட்சியை  தொடங்கியதாக அறிவித்ததற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசிய அதிபர் டிரம்ப், ​​”குடியரசுக் கட்சியுடன் நாங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளோம் என்று கூறினார். அமெரிக்காவில் இரு கட்சி முறைதான் இருந்து வருகிறது, 3வது கட்சியை தொடங்குவது குழப்பத்தை […]

America Party 4 Min Read
trump vs musk

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய தாக்குதலையும், வர்த்தக வரியையும்  கண்டித்தன. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் கோபமடைந்து, பிரிக்ஸ் நாடுகளுக்கு அவர் ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்திருக்கிறார். பிரிக்ஸ் அமைப்பை ஆதரிக்கும் இந்தியா, பிரேசில், சீனா, ரஷ்யாவின் கூட்டு அமைப்பு பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளின் பொருளுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இது […]

#Tax 5 Min Read
Trump warns world nations

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 80 பேர் பலியாகியுள்ளனர். அதில், 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் அடங்குவர். பலரும் தங்களது உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். சான் அன்டோனியோ அருகே உள்ள கெர்கவுண்டியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. […]

#Flood 3 Min Read
Texas - Flood

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய ‘அமெரிக்கா கட்சி’யில் மூன்று பிரபல அமெரிக்கர்கள் இணையவுள்ளதாக கணித்து பேசியுள்ளார். ஜூலை 6, 2025 அன்று X தளத்தில் பதிவிட்ட பதிவில், லூமர், “டக்கர் கார்ல்சன், மார்ஜோரி டெய்லர் கிரீன் (MTG), மற்றும் தாமஸ் மாஸி ஆகியோர் டிரம்புக்கு எதிராக புதிய ‘அமெரிக்கா கட்சி’யில் இணைவார்கள் என்று நான் கணிக்கிறேன்,” என்று தெரிவித்தார். இந்த கணிப்பு, […]

American Party 6 Min Read
laura loomer donald trump

ட்ரம்ப்புடன் மோதல்..புதிய கட்சியை தொடங்கியதாக அறிவித்த எலான் மஸ்க்!

நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க பார்ட்டி’ (The America Party) என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியதாக ஜூலை 5, 2025 அன்று அறிவித்தார். அமெரிக்கர்களின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதே இந்தக் கட்சியின் முக்கிய நோக்கம் என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். “வாக்காளப் பெருமக்களே, நமது நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் வீண் செலவுகளை எதிர்த்து, உங்களுக்கு சுதந்திரத்தை […]

American Party 5 Min Read
elon musk vs trump

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால் வெள்ளை மாளிகையில் குடியரசு கட்சியினர் கொண்டாட்டமாக மாறியது. ஏப்ரல் மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது வரிகளை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அது 90 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. இப்போது அதன் காலக்கெடு ஜூலை 9 அன்று முடிவடைகிறது. இந்த காலக்கெடுவிற்கு […]

#Tax 6 Min Read
Trump Traffic

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை அமெரிக்க நிர்வாகமே இந்தியாவிற்கு வழங்கியுள்ளதாம். அமெரிக்க நீதித்துறை வழங்கிய தகவலின்படி, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி நிரவ் மோடியின் சகோதரர் ஜூலை 4 ஆம் தேதி அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இணைந்து செய்த நாடுகடத்தல் கோரிக்கைக்குப் […]

#US 3 Min Read
Nehal Modi

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதன்படி, கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் இத்தாக்குதலில் முக்கிய இலக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழப்பு, 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா சுமார் 7 மணி நேரத்திற்குள் நூற்றுக்கணக்கான […]

Drone Strike 4 Min Read
Ukraine Russia War

இந்தியாவுக்கு 500% வரி..அமெரிக்காவில் புதிய மசோதா தாக்கல்!

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 500% வரி விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் நோக்கம், உக்ரைன் மீதான போருக்கு ரஷ்யாவுக்கு பண உதவி செய்யும் நாடுகளை பொருளாதார ரீதியாக தண்டிப்பதாகும். அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரகாம் இந்த மசோதாவை முன்மொழிந்துள்ளார். மேலும் 84 செனட்டர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.இந்தியா, உலகில் அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடு. 2022-ல் […]

#China 5 Min Read
donald trump AND PM MODI

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல் 9-ம் தேதி வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில், கானா நாட்டிற்கு அரசு முறை பயணமாக முதலில் சென்றுள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கானா நாட்டிற்கு செல்லும் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். அங்கு, […]

#Modi 5 Min Read
PMModi - Ghana India

தகவல்கள் திருட்டு? கூகுள் நிறுவனத்துக்கு 2,620 கோடி அபராதம் போட்ட அமெரிக்க நீதிமன்றம்!

கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக கூகுள் நிறுவனத்துக்கு 314.6 மில்லியன் டாலர் (சுமார் 2,620 கோடி ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வழக்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த சுமார் 14 மில்லியன் ஆண்ட்ராய்டு பயனர்களை பிரதிநிதித்துவப்படுத்தி, கூகுள் அவர்களின் அனுமதியின்றி, ஃபோன்கள் பயன்பாட்டில் இல்லாதபோதும் தகவல்களை சேகரித்து, விளம்பரங்களுக்காக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டியது. வழக்கில், ஆண்ட்ராய்டு ஃபோன்கள் செயலற்ற […]

#US 6 Min Read
US FINE google

“1.6 கோடி மக்கள் அபாயத்தில் உள்ளனர்”..ட்ரம்ப் நிறைவேற்றிய Medicaid மசோதாவில் டென்ஷனா ஒபாமா!

வாஷிங்டன் :  அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த மசோதா, Medicaid எனப்படும் மருத்துவ உதவி திட்டத்திற்கு அரசு வழங்கும் நிதியைக் குறைப்பதோடு, ஒபாமாவின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மலிவு விலை பராமரிப்புச் சட்டத்தை (Affordable Care Act) பலவீனப்படுத்துவதாக உள்ளது எனவும் ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா எச்சரித்ததாவது, இந்த மசோதா நிறைவேறினால், சுமார் 1.6 கோடி அமெரிக்கர்கள் தங்கள் மருத்துவ […]

Barack Obama 7 Min Read
donald trump obama

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 40% ரஷ்யாவிடம் இருந்துதான் இந்தியா வாங்கி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகளுக்கு 500% சுங்க வரி விதிக்கும் அதிகாரம் வழங்கக்கூடிய சட்ட மசோதாவை நிறைவேற்றியது அமெரிக்க செனட். இது தொடர்பான மசோதாவை செனட்டில் முன்மொழிந்து, வாக்கெடுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதி டிரம்ப் […]

#China 4 Min Read
US - india -China

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ”சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI) தவறான தகவல்களையும் கணிப்புகளையும் உருவாக்கக் கூடியது என்பதால் அதை முழுமையாக நம்ப வேண்டாம்” என்று அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து OpenAI இன் அதிகாரப்பூர்வ பாட்காஸ்டின் முதல் எபிசோடில் பேசிய ஆல்ட்மேன், ”AI என்பது தவறுகள் செய்யக்கூடிய ஒரு தொழில்நுட்பம் என்பதை வலியுறுத்தியுள்ளார். இது பயனர்கள் AI-இன் பதில்களை விமர்சன ரீதியாக அணுகவேண்டும் என்பதை உணர்த்துகிறது. ‘ChatGPT […]

AI Accountability 4 Min Read
chatgpt - sam altman

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் செயல்பட்டதாக ஷேக் ஹசீனா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில், நீதிபதி எம்.டி. கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-1 இன் மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக பங்களாதேஷின் முக்கிய ஆங்கில நாளிதழான […]

#Bangladesh 4 Min Read
sheikh hasina