ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டதாகவும், புகை மற்றும் தீப்பிழம்புகள் எழுந்ததாகவும் சாட்சிகள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன. விபத்து நிகழ்ந்த விமானம் இந்திய விமானப்படையின் முக்கிய போர் விமானங்களில் ஒன்றான ஜாகுவார் […]
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு வருகின்ற ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் […]
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வதோதராவையும் ஆனந்தையும் இணைக்கும் காம்பிரா பாலத்தின் ஒரு பெரிய பகுதி இடிந்து விழுந்ததில் குறைந்தது ஐந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 […]
குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் 40 வருடங்கள் பழமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதனால் பாலம் திடீரென உடைந்து விழுந்தது என அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மேலும் பலி […]
சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய ஒரு நாள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இந்தப் போராட்டம் மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் கார்ப்பரேட் சார்பு கொள்கைகளுக்கு எதிராக நடைபெறுகிறது. சுமார் 25 கோடி தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படலாம். இதற்கு தமிழ்நாட்டில் தொமுச, சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட […]
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப் பிடிப்பதைக் காட்டுகிறது. பருத்திப்பள்ளி ரேஞ்சின் விரைவு […]
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டத்தில், 20 ஆண்டுகளாக எதிர் எதிர் துருவங்களாக இருந்த உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே ஒரே மேடையில் பங்கேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதனை குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாடு முதல்வர் […]
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை பாஜக அரசு வாபஸ் பெற்றது. இந்நிலையில், மும்மொழி கொள்கையை பாஜக வாபஸ் பெற்ற நிலையில், போராட்டம் வெற்றி கொண்டாட்டமாக மாறியது. மும்பையில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள், பிரம்மாண்ட வெற்றி கொண்டாட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டம் வோர்லியில் உள்ள NSCI டோமில் நடைபெற்றது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்ட […]
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8 ட்ரீம்லைனர்) லண்டனுக்கு புறப்பட்ட சில நிமிடங்களில் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் மற்றும் 29 மருத்துவ மாணவர்கள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, ஏர் இந்தியாவை நடத்தும் டாடா குழுமம் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் இடைக்கால நிவாரணமாக […]
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்) மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை (நவம்பர் 28 முதல் டிசம்பர் 10, 2025, சென்னை மற்றும் மதுரை) போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் ஆண்கள் மற்றும் ஜூனியர் அணிகளுக்கு ஒன்றிய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இந்த முடிவு, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் ஒப்புதலுடன் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பல நாடுகள் பங்கேற்கும் […]
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில், விளம்பரங்களை வெளியிட்டதாக பதஞ்சலி நிறுவனத்திற்கு எதிராக டாபர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. டாபர் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பதஞ்சலியின் விளம்பரங்கள் டாபரின் தயாரிப்பை அவதூறாக சித்தரித்ததாகவும், அவற்றில் 47 ஆயுர்வேத மருந்துகள் மட்டுமே உள்ளன என்றும், பதஞ்சலியின் தயாரிப்பில் 51 மருந்துகள் உள்ளதாகவும் ஒப்பீடு செய்து மக்களை தவறாக […]
சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக, எந்தவொரு வங்கியின் சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை அவசியம். இந்த இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அபராதம் விதிக்கப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கி இப்போது சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை விதிக்க முடிவு செய்துள்ளது. PNB சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்படாவிட்டால், எந்த அபராதமும் விதிக்கப்படாது. ஆம், […]
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் இடைவெளியுடன் நடைபெறும். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு ஜூலை 19ம் தேதி அன்று நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதனை இன்றைய செய்தியாளர் சாந்திப்பின்போது, கிரண் ரிஜிஜு இன்று தெரிவித்தார். மேலும், கூட்டத்தொடரை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் […]
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி, வரி ஏய்ப்பு மற்றும் போலி பான் கார்டு பயன்பாட்டைத் தடுக்கவும், நிதி பரிவர்த்தனைகளை வெளிப்படையாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஏற்கெனவே பான் கார்டு வைத்திருப்பவர்கள், தங்கள் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 31, […]
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடர், முக்கியமான சட்ட மசோதாக்கள் மற்றும் அரசின் கொள்கை விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் ஒரு முக்கிய அமர்வாக இருக்கும். பொதுவாக, மழைக்கால கூட்டத்தொடர் பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலன் தொடர்பான மசோதாக்களை முன்னிலைப்படுத்துகிறது. இந்த அமர்வு, நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழலில் கவனம் […]
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் “Peak hours” நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, கூடுதலாக விதிகளைச் சேர்க்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இந்த முடிவு, அதிக தேவை உள்ள நேரங்களில் இந்த நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க உதவும் என்றாலும், பயனர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம்” (Employment Linked Incentive – ELI) மத்திய அமைச்சரவையால் 2025 ஜூலை 1 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டம், அனைத்து முறைசார் துறைகளிலும், குறிப்பாக உற்பத்தித் துறையில், 3.5 கோடிக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், புதிதாக […]
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜூலை 2 முதல் 9, 2025 வரை 8 நாள் அரசுமுறைப் பயணமாக கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, அர்ஜென்டினா, நமீபியா, மற்றும் பிரேசில் ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, பிரேசிலில் ரியோ டி ஜெனிரோவில் ஜூலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார். […]
ஆந்திரா : 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதி அபுபக்கர் சித்திக், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 1995 முதல் பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள் மற்றும் மத ரீதியான கொலைகளில் தொடர்புடைய இவர், 2011இல் மதுரை-திருமங்கலம் வழியாக முன்னாள் பிரதமர் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையின் போது பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் முக்கிய தேடப்பட்டவர் ஆவார். அபுபக்கர் சித்திக்குடன், திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த […]
ஹைதராபாத்: தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள பசாமைலாரம் தொழிற்பேட்டையில் சிகாச்சி கெமிக்கல்ஸ் என்ற ரசாயன தொழிற்சாலையில் 2025 ஜூன் 30 அன்று ஏற்பட்ட பயங்கர வெடிப்பு மற்றும் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. முதற்கட்டமாக, வெடிப்பினால் ஏற்பட்ட தீயில் 10 பேர் கருகி உயிரிழந்த நிலையில், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தவர்களில் மேலும் பலர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 37-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து காலை 9:20 மணியளவில், தொழிற்சாலையில் […]