தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் - வைகோ

தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் - வைகோ

  • இலங்கைக்கு ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க  50 மில்லியன் டாலர் நிதியாக வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது.
  • தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் என்று வைகோ கூறியுள்ளார். 
இலங்கை அதிபர் ராஜபக்‌ஷே – பிரதமர் மோடி சந்திப்பு  நடைபெற்றது.அப்போது  இலங்கை ராணுவத்துக்கு தளவாடங்கள் வாங்க 50 மில்லியன் டாலர் நிதியாக வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது. இந்நிலையியில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு ஆயுதத் தளவாடங்கள் வாங்க  50 மில்லியன் டாலர் நிதி உதவி அளிப்பது  கண்டனத்துக்கு உரியது. இலங்கை கடற்படை இந்தியக் கடல் எல்லையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தமிழக மீனவர்களை, அத்துமீறி கைது செய்கின்றது.மேலும்  சிறையில் அடைப்பதும்,அவர்களை  சித்திரவதை செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடக்கிறது. மத்திய அரசு தமிழக மக்களின் வரிப்பணத்திலிருந்து இலங்கை அரசுக்கு வாரி வழங்குவது மன்னிக்க முடியாத துரோகம். இந்தச்செயல் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும்  அரசு செய்யும் பச்சை துரோகம் ஆகும்.எனவே மத்திய அரசு, இலங்கை ராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்க நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

#KXIP vs SRH: பஞ்சாப்பை விழ்த்துமா ஹைதராபாத்...!
76 ஆண்டுகளுக்கு பிறகு நாளை இரவு வானில் தோற்றவுள்ள அதிசயம்! என்ன தெரியுமா?
இன்றைய முட்டை விலை..!
யார் யாரு என்னென்ன பேசுறீங்கன்னு நெற்றியில் அடித்தது போல சொல்லுவேன்!
மிலாதுன் நபி: இத்திருநாள் சகோதரத்துவத்தை மேம்படுத்தும் என நம்புகிறேன்! பிரதமர் மோடி ட்வீட்!
ஒரு லட்சம் செலவுப்பா...அம்மாகிட்ட திட்டுவாங்க விடாதீங்க..ரீலிஸ் பண்ணுங்க...
சர்வதேச திரைப்பட விழா ஒத்திவைப்பு
Airtel வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு - அதிகரிக்கிறதா கொரோனா தொற்று!
மோசமான தோல்விக்கு காரணம் இது தான் பிரையன் லாரா